என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாகும்.
    • ஆலயத்தின் பிரதான சன்னிதியாக சிவபெருமான் விளங்குகின்றார்.

    ஆய் மன்னர்கள், வேனாடு மன்னர்கள் ஆட்சி செய்த பூமி, யானை தந்தம், மிளகு, இஞ்சி ஏற்றுமதிக்கான வணிகத்தளமாக விளங்கிய ஊர், கருவறை சுற்றி உயிரோட்டமான நாகங்கள் கொண்ட கோவில், நாகதோஷங்கள் நீக்கும் இறைவன், சபரிமலை வாகனங்கள் இளைப்பாறும் இடம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் பழம்பெரும் ஆலயம் என பல பெருமைகள் கொண்ட தலம் நிலக்கல் ஆகும். இங்கு மகாதேவர் ஆலயம் என்ற பெயரில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது.

    சுவாமி ஐயப்பன் வழிபட்ட தலமாக இது விளங்குவதால், இப்பகுதி `இடத்தாவளம்' என்று அழைக்கப்படுகின்றது. நிலக்கல், தொன்மையான வரலாற்று பின்னணி கொண்ட தலமாகும். யானை தந்தம், லவங்கம், மிளகு, இஞ்சி போன்ற பொருட்கள், நிலக்கல் வரும் வணிகர்கள் மூலமாக கொடுங்ளூர், புறக்காடு போன்ற துறைமுக நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    கடையேழு மன்னர்களில் ஒருவரான ஆய் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்து, பின்னாளில் வேனாடு மன்னர்களால் ஆளப்பட்ட பகுதி இது என வரலாறு கூறுகின்றது. இன்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாக இது விளங்குகின்றது.

    ஆலய அமைப்பு

    இவ்வாலயத்தின் பிரதான சன்னிதியாக சிவபெருமான் விளங்குகின்றார். இவரின் எதிரில் நந்தி தேவரும், கன்னிமூலக் கணபதியும் அமைந்துள்ளனர். இக்கோவிலின் இடதுபுறம் பள்ளியறக்காவு தேவி சன்னிதி அமைந்துள்ளது. கருங்கல் கருவறையில் இரண்டு அடுக்குகளாக ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மகாதேவர் கருவறை முழுவதுமே கருங்கல் திருப்பணியாக அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் வாசலிலும், மாடியிலும் உள்ள வாசல்களிலும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். கருவறையின் எட்டு திசைகளிலும் நாகங்கள் கலை நயத்தோடு புடைப்புச் சிற்பங்களாக உயிரோட்டத்தோடு அமைந்துள்ளன.

    நாக தோஷம் நீக்கும் தலமாக கூறப்பட்டாலும், வனப்பகுதியில் உள்ள மக்கள் நாகத்தை வணங்கி வழிபட்டதை உணர்த்துவதாக இது உள்ளது. கருவறை கூரை கூம்பு வடிவில் செந்நிற தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

    கேரள மாநில அரசின், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இக்கோவிலை நிர்வாகித்து வருகின்றது. இந்தக் கோவிலில் காலையில் உஷா பூஜை, நண்பகலில் உச்ச பூஜை, மாலையில் அத்தாழ பூஜை என, மூன்று கால பூஜைகள் நாள்தோறும் நடத்தப்படுகின்றன.

    ஆண்டுதோறும் இங்கு மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். பள்ளியறக்காவு தேவி கோவில், இக்கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது. சபரிகிரி நீர் மின் நிலையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    அமைவிடம்

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடமே நிலக்கல்லாகும். நிலக்கல்லில் இருந்து பம்பா 17 கி.மீ. தூரத்திலும், சபரிமலை 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.

    அய்யப்ப தரிசனத்திற்கு முன் நிலக்கல் மகாதேவரை வணங்கிச் செல்வது இன்றும் மரபாக உள்ளது. நாக பயம் மற்றும் நாகதோஷம் உள்ளவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக, நிலக்கல் மகாதேவர் விளங்குகின்றார்.

    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-15 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி மாலை 4.40 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 6.17 மணி வரை. பிறகு பூசம்.

    யோகம்: சித்த, மரணயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருநாகேசுவரம் நாகநாதர் உற்சவம் ஆரம்பம். திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவாஞ்சியம் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிசு

    ரிஷபம்-சிந்தனை

    மிதுனம்-மேன்மை

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-தனம்

    கன்னி-உழைப்பு

    துலாம்-உவகை

    விருச்சிகம்-நலம்

    தனுசு- உயர்வு

    மகரம்-நன்மை

    கும்பம்- பெருமை

    மீனம்- வாழ்வு

    • பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பி ஒரு சிலை வடித்தார்.
    • பரசுராமர் வேதகிரி மலையில் தவம் இருந்தார்.

    பகவான் பரசுராமர் சகல சக்திகளும் நிறைந்த பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பி ஒரு சிலை வடித்தார். இதை நீரில் மூழ்க வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார்.

    கேரளாவை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னன் குமாரநல்லூரில் முருகனுக்கும், வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான்.

    அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனின் விலை மதிப்புள்ள மூக்குத்தியைக் காணவில்லை. அதை `41 நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் சிறைச்சேதம் செய்யப்படுவீர்' என பூசாரி சாந்திதுவிஜனுக்கு மதுரை மன்னன் உத்தரவிட்டான்.

    ஆனால், பூசாரியால் அதைக் கண்டுபிடிக்கவில்லை. 41-வது நாள் கவலையுடன் மீனாட்சியின் காலில் விழுந்து தியானத்தில் மூழ்கினார். அப்போது அசரீரி தோன்றி, "இங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடு" என்றது.

    கண்விழித்த பூசாரியின் முன்னால் ஒரு ஒளி செல்ல, அதன்பின் அவர் மீனாட்சியின் திருநாமத்தை உச்சரித்தபடி சென்றார். இந்த பயணம் மதுரையைக் கடந்து கேரளாவைத் தொட்டது.

    குமாரநல்லூரில் முருகனுக்காக கட்டப்பட்டிருந்த கோயில் கருவறையில் அந்த ஒளி ஐக்கியமானது. அந்த நேரத்தில் முருகன் சிலை பிரதிஷ்டைக்குரிய பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.

    பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சேரமானின் காதுகளில், "குமரன் அல்ல ஊரில்" (ஊரில் குமரன் இல்லை) என்று அசரீரி ஒலித்தது.

    இதனால் கலங்கிப்போன மன்னன், முதலில் வைக்கத்தில் பகவதிக்கு சிலை பிரதிஷ்டையை முடித்து விட்டு அதன் பின் இங்கு வரலாம் என்று நினைத்துக்கொண்டு வைக்கம் நோக்கி சென்றான்.

    வைக்கத்திலும் பகவதிக்கு சிலை வைக்க முடியாமல் தடங்கல்கள் ஏற்பட்டது. முடிவாக குமாரநல்லூரில் பிரதிஷ்டை செய்ய இருந்த முருகனை வைக்கத்திலும், வைக்கத்தில் வைக்க இருந்த பகவதியை குமாரநல்லூரிலும் பிரதிஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

    தொடர்ந்து, பரசுராமரால் வேதகிரி மலையில் செய்யப்பட்ட பகவதி சிலை கண்டுபிடிக்கப்பட்டு குமாரநல்லூர் கொண்டு வரப்பட்டது. பிரதிஷ்டை செய்யும் நேரம் நெருங்கியது.

    அப்போது அதிசயிக்கும் வகையில், காவி உடை மற்றும் சடைமுடி கோலத்துடன் ஒரு சன்னியாசி கருவறையில் நுழைந்தார். பகவதி சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு திடீரென மாயமானார். இவர் பரசுராமர் என தல புராணம் கூறுகிறது.

    மதுரையில் இருந்து தெய்வீக ஒளியால் அழைத்து வரப்பட்ட சாந்திதுவிஜன் கோவில் பூசாரியானார். இவரது வாரிசுகள் இன்றும் கோவில் அருகே தங்கியிருந்து பூஜைகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

    2 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையானதும், 108 துர்க்கை திருத்தலங்களில் முக்கியமானதுமான இக்கோயிலில் நுழைந்தாலே பக்தர்களின் துயரம் தூர விலகி விடுகிறது. கேரளாவில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

    இத்தலத்திற்கு அருகில் அற்புத நாராயணன் திருக்கோவில், மகாதேவர் திருக்கோவில், மள்ளியூர் மகா கணபதி திருக்கோவில், கடுத்துருத்தி சிவன் திருக்கோவில், சுப்ரமணியர் திருக்கோவில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது.

    கார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான திருக்கார்த்திகை அன்று மதியம் ஆராட்டு பூஜை நடக்கிறது. இந்த பூஜையைக்காண திருச்சூரிலிருந்து வடக்குநாதரே வருகை தருவதாக ஐதீகம்.

    விழா நாட்களில் பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் மட்டுமே பயன்படுத்தப்படும். இது தவிர, நவராத்திரி, பங்குனி பூரம், கொடிமர பிரதிஷ்டை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாகும். மலையாள மாத முதல் தேதி, செவ்வாய், வெள்ளி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    நீண்டகாலம் திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் ``சுயம்வர புஷ்பாஞ்சலி" என்ற பூஜை நடத்தினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

    அம்மன் இங்கு கன்னியாக அருள்பாலிப்பதால்ம் ``மஞ்சள் நீராட்டு" முக்கிய வழிபாடு. குலம் சிறப்பாக வாழவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும், நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது.

    குடும்பத்தில் பிரச்சினை நீங்கி, தம்பதிகளின் ஒற்றுமையான வாழ்க்கைக்காக அம்மனுக்கு பட்டு, தாலி சாத்தப்படுகிறது. அம்மனின் பரிபூரண அருள் வேண்டி கோவில் நடையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

     ஆராட்டு ஊர்வலம்

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமாரநல்லூர் தேவி கோவிலில் கார்த்திகை திருவிழாவைெயாட்டி நேற்று ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சாமி அலங்கரிக்கப்பட்ட யானை மீது எழுந்தருளி ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்பட்டது

    அமைவிடம்

    அருள்மிகு பகவதி திருக்கோயில், குமாரநல்லூர் – 680664, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

    திறக்கும்நேரம்:

    காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

    • நடனமாடுவதைப் பார்த்து, மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.
    • ஆறு ஆண்டுகளாக மயில், இந்த கோவிவில் உள்ளது.

    தோகை விரித் தாடும் மயிலின் கால்களில், அர்ச்சகர் ஒருவர் வெள்ளிக்கொலுசு அணி வித்துள்ளார். இந்த மயில் தினமும். கோவிலுக்கு வந்து நடனமாடுவதைப் பார்த்து, மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.

    தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் மானுார் கிராமத்தில் அனந்த பத்மநாப சுப்பிரமணியர் கோவிலில் உள்ள மயில் ஒன்று, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மயில் தோகையை விரித்து நடனமாடும் அழகை பார்க்கவே, தினமும் பக்தர்கள் வருகின்றனர்.

    கோவில் அர்ச்சகர் ராஜேஷ் பட், நவராத்திரியின் போது மயிலின் கால்களில் வெள்ளிக் கொலுசு அணிவித்தார்.

    தற்போது கொலுசு ஒலிக்கு தகுந்தார் போன்று, மயில் நடனமாட தொடங்கியுள்ளது. ஆறு ஆண்டுகளாக மயில், இந்த கோவிவில் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஒருவர், தனக்கு கிடைத்த பறவை முட்டைகளை, அடைகாத்து வைத்திருந்தார். அவை தானாகவே பொரித்து, மூன்று மயில் குஞ்சுகள், ஒரு கோழி குஞ்சு வெளியே வந்தன.

    மயில் குஞ்சுகளை, கோவிலில் ஒப்படைத்தார். இரண்டு மயில்கள் எங்கோ சென்று விட்டன. ஆனால் ஒரு மயில் மட்டும் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற வீடுகளின் அருகிலேயே உள்ளது. இந்த மயிலுக்கு அர்ச்சகர், மயூரா என பெயரிட்டுள்னார். இவரது குடும்பத்தினருடன், மயில் மிகவும் நெருக்கமாக பழகுகிறது. அழைத்தால் அருகில் செல்கிறது.

    தினமும் இரவு பூஜையின்போது. தவறாமல் மயில் வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்தால், தோகையை விரித்து "போஸ் கொடுக்கிறது. மொபைல் போனை கண்டால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தோகை விரித்தாடுகிறது.

    • இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் விநாயகர்.
    • தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர்.

    விநாயகப் பெருமானை இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள். தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர். விநாயகனை வழிபட சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட அனைத்தும் கிடைக்கும்!

    சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப்பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான்.

    முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், ராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கவுதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

    • சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது.
    • கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும்.

    திருப்பதி:

    கார்த்திகை மாதத்தில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் விஷ்ணு பூஜைகளின் ஒரு பகுதியாக திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று கோபூஜை சாஸ்திர பூர்வமாக நடந்தது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து 10 மணி வரை நடந்த கோபூஜையை உலக பக்தர்களின் நலனுக்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பினர்.

    முன்னதாக ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்களான வேணுகோபாலசாமி, ருக்மணி மற்றும் சத்யபாமாவை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர். அங்கு, வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றுகையில், சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது. கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும் என்றார்.

    முன்னதாக கார்த்திகை விஷ்ணு பூஜை சங்கல்பம், பிரார்த்தனை சூக்தம், விஷ்ணு பூஜை மந்திர பாராயணம் நடந்தது. அப்போது உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு பசு மற்றும் கன்றுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து பிரசாதம் மற்றும் ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கோபிரதட்சணை செய்யப்பட்டது. நிறைவாக பிரார்த்தனை மற்றும் மங்களம் வேண்டி கோபூஜை முடிந்தது. அதில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தெப்பல் உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர் உள்ளிட்ட சாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி நடந்தது. அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகாதீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    தொடர்ந்து மறுநாள் பவுர்ணமி நீடித்ததாலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.

    அய்யங்குளத்தில் 27-ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் பராசக்திஅம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் தெப்பல் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைகிறது. கோவில் பின்புறம் உள்ள மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருகை தர உள்ளதால் வருகிற 3-ந்தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஐயப்பனுக்கும் அறுபடைவீடுகள் உள்ளன.
    • பதினெட்டு படிகளை ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம்.

    முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய

    அறுபடைவீடுகள் உள்ளன. அதுபோல விநாயகருக்கும் திருவண்ணாமலை, திருமுதுகுன்றம், திருக்கடவூர், திருச்சி, பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய இடங்களில் அறுபடைவீடுகள் உண்டு. அந்தவகையில் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கும் அறுபடைவீடுகள் உள்ளன. அவை ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம், சபரிமலை. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    ஆரியங்காவு

    கேரளா-தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது ஆரியங்காவு, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஊர். இங்குள்ள ஆலயத்தில் அரசராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஐயப்பன். இவருடன் புஷ்கலை தேவி இருப்பது விசேஷம். இவரை சாஸ்தாவான ஐயப்பன் திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடத்துவார்கள். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு இறைவன் காட்சி தருகிறார். இதனால் அவருக்கு 'மதகஜ வாகன ரூபன்' என்ற பெயரும் உண்டு. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    செங்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஐயப்பன் வீற்றிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் விக்கிரகம் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் மட்டும், விக்கிரகம் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது. கையில் அமுத மும், காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் இத்தலத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இவருக்கு இருபுறமும் பூரண, புஷ்கலை தேவியர் காட்சி தருகின்றனர். இவரை 'கல்யாண சாஸ்தா' என்றும் அழைக்கிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் வழிபட வேண்டிய சிறப்புமிக்க தலம் இதுவாகும்.

    குளத்துப்புழா

    கேரளாவில் குளத்துப்புழா என்ற இடத்திலும் ஐயப்பன் அருளாட்சி செய்கிறார். இங்கு அவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். இதனால் அவரை 'பால சாஸ்தா' என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தின் கருவறை சிறுவர்கள் நுழையும் அளவிலான உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு விஜயதசமி தினத்தன்று 'வித்யாரம்பம்' என்னும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. அன்று பள்ளியில் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தரப்படும். குழந்தை வரம் வேண்டுவோரும் வழிபட ஏற்ற தலம் இது.

     எருமேலி

    எருமைத் தலையைக் கொண்ட மகிஷியை, ஐயப்பன் வதம் செய்த தலம் இது என்று கூறுகிறார்கள். இதனால் எருமைக்கொல்லி என அழைக்கப்பட்ட இந்த இடம், நாளடைவில் மருவி 'எருமேலி' என்றானது. மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அவளது உடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாகவே, பக்தர்கள் இன்றளவும் எருமேலியில் இருந்து நடனம் ஆடியபடியே சபரிமலைக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த நடனத்திற்கு 'பேட்டைத் துள்ளல்' என்று பெயர். இந்த ஆலயத்திற்கு அருகில் வாபரின் பள்ளிவாசல் இருக்கிறது. இங்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    பந்தளம்

    பந்தனம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் அரண்மனை இருக்கும் இடமாகும். இங்கு பந்தன மன்னன் ராஜசேகரனால் கட்டப்பட்ட ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் அச்சன்கோவில் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையின் போது அணிவிக்கப்படும் திரு ஆபரணங்கள் அனைத்தும் இங்குதான் வைக்கப்பட்டிருக்கின்றன. செங்கனூர் ரெயில் நிலையத்தின் அருகில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது.

    சபரிமலை

    கேரளாவில் உள்ள இங்குதான் தர்மசாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயப்பன், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரையுடன், குத்துகாலிட்டு அமர்ந்தபடி அருள்புரிந்து வருகிறார். பதினெட்டு படிகளை ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். ஐயப்பனின் சன்னிதி வாசலில் 'தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு நீ எதை நாடி வந்தாயோ. அது நியாகவே உள்ளாய்' என்பது பொருள். உனக்குள்ளேயே இறைவன் இருக்கிறான். 41 நாட்கள் இருக்கும் விரதத்தை நாளும் நீ மேற்கொண்டால், நீயும் கடவுளே என்பது - தான் இதன் உண்மையான அர்த்தம்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையபன் புஷ்பாங்கி சேவை
    • விநாயகர் தலங்களில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-14 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை பிற்பகல் 3.31 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: திருவாதிரை மாலை 4.36 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார், உப்பூர் வெயிலுகந்த விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர் தலங்களில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையபன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவர் உடன் புறப்பாடு. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-பாராட்டு

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-பண்பு

    தனுசு- பிரீதி

    மகரம்-பாசம்

    கும்பம்-தேர்ச்சி

    மீனம்-பண்பு

    • மனிதர்களுக்கு இல்லறம் ஒரு கருவி.
    • இல்லறத்தின் உதவியால் தான் இலக்கை அடைய முடியும்.

    ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு 'பறவை அவரிடம் சென்று பேசியது.

    ஐயா! உலகை சுற்றிப் பார்க்க

    ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.

    'பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு' என்றார் சாது.

    தலையசைத்து விட்டு பறந்தது பறவை.

    பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.

    'சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்', என்றார் சாது.

    ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.

    ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்னபடி உடனே திரும்பிவிட்டேன், பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்' என்றது பறவை.

    பறவையே இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல், பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி விடு'. என்றார் சாது.

    பதினைந்து நாட்கள் ஒடிப்போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன.

    ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்', என்றது பறவை.

    சாது யோசித்தார். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார்.

    பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்த குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்', என்றார் சாது.

    பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன. ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப்பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்', என்றன பறவைகள்.

    பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?' என்று கேட்டார் சாது.

    பறவை பேசியது, ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஒய்வெடுக்கும் போதுதான் "குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது. காப்பாற்றுகிறது", என்ற உண்மை புரிந்தது, என்று சொல்லி விட்டு பறந்தன பறவைகள்.

    சாதுவைப் பார்த்தான் சீடன். சாது பேசினார். சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிகநேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் 'துணை'.

    ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய 'குச்சி' என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஒய்வைக்கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது.

    பறவைகளுக்கு 'குச்சியை'ப் போல மனிதர்களுக்கு இல்லறம் கருவியாகிறது. 'சம்சார சாகரம், என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. 'இல்லறம்' என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்'. என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

    குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், குச்சியே பறவைகளை சுமக்கிறது. இதைப்போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழிநடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது. இதுவே இல்லற ரகசியம்

    • சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.
    • துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

     1. கர்ணன்-சூரியன் அம்சம் அல்லது சூரிய அவதாரம்.

    2. அர்ஜுனன் - இந்திரன் அம்சம் அல்லது நரன்.

    3. பீஷ்மர்- பிரபாசன் (அஷ்டவசுகளில் இறுதியானவர்).

    4. கிருபர்-சிவனின் ருத்திரர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    5. சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.

     6. சாத்தியகி-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    7. துருபதன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    8. கிருதவர்மன்- தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    9. விராடன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    10. திருதிராஷ்டிரன்-ஹம்சன் என்னும் கந்தர்வராஜன்.

    11. பாண்டு-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    12. விதுரர்-தர்மதேவதையின் அம்சம்.

    13. துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

    14. துச்சாதனன் முதலிய தம்பிகள்-புலஸ்தியர் புத்திரர்களாகிய அரக்கர்கள்.

    15. துரோணர்-பிரகஸ்பதி அவதாரம் (குரு பகவான்).

     16. தர்மன்-யமதர்மன் அம்சம்.

    17. பீமன்-வாயு பகவான் அம்சம்.

    18. அஸ்வத்தாமன் -சிவன் மற்றும் யமன் காமம் மற்றும் கோபத்தில் உருவானவன்.

    19. நகுலன் சகாதேவன் - அஸ்வினி தேவர்கள் அம்சம்.

    20. அபிமன்யு-வர்சஸ் (சந்திரன் மகன்).

    21. பிரதிவிந்தியன், சுகஸோமன், ஸ்ருதகீர்த்தி,சதானிக்கன் கருதசேனன். (பாஞ்சாலி புதல்வர்கள்)- விஸ்வதேவர்கள் கூட்டத்தை

    சேர்ந்தவர்கள்.

     22. பலராமன்-ஆதிசேஷன் அவதாரம்.

    23. கிருஷ்ணன் - விஷ்ணு அவதாரம்.

    24. பரசுராமன்- விஷ்ணு அவதாரம்.

    25. ருக்மணி- லட்சுமி அவதாரம்.

    26. பிரத்தியும்னன் (கிருஷ்ணன் மகன்)- சனத்குமாரர்.

    27. பாஞ்சாலி - நளாயினி.

    28. குந்தி- சித்தி என்னும் தேவஸ்ரீ.

    29. மாதிரி- த்ரிதி என்னும் தேவஸ்ரீ.

    30. காந்தாரி- மதி என்னும் தேவதை.

     31. திருசியுத்தமன்- அக்னியின் ஒரு அம்சம்.

    32. ஜராசந்தன்- விபிரஜித் என்னும் அரக்கர்கள் தலைவன்.

    33. சிசுபாலன்- ஹிரண்யகசிபு.

    34. சல்லியன்- பிரகலாதன் தம்பி ஹம்சலாதன்.

    35. திருஸ்தகேது (சிசுபாலன் மகன்)- பிரகலாதன் தம்பி அனுகலாதன்.

    36. பகதத்தன் (நரகாசுரன் மகன்)- பாஷ்கலங் என்னும் அரக்கர் தலைவன்.

    37. உக்கிரசேனன்- சொர்ணபானு என்ற அரக்கன்.

    38. பக்லிகன் (பீஷ்மர் பெரியப்பா) - அகர்னன் என்னும் அரக்கமன்னன்.

    39. ருக்மி, ஏகலைவன், ஜனமேஜயன்- கீர்த்தவரசர்கள் என்னும் அரக்கர் கூட்டம்.

    40. கம்சன்-காலநேமி என்னும் மாபெரும் அரக்கன் (ராமாயணத்தில் வருவான்).

    41. சுபத்திரை- விஷ்ணு மனதில் தோன்றிய யோக மாயை.

    42. சிகண்டி- (அம்பை) அதற்கு முன் அரக்கன்.

    43. சாந்தனு-100 ராஜசூய யாகம் செய்த மஹாபிஷக்

    • ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும்.
    • கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஜனவரி மாதம் 18-ந் தேதி தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் நம்பூதிரி கேசவன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால் நாட்டப்பட்டது. இதில் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×