என் மலர்
ஆன்மிகம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். திருமண முயற்சி கைகூடும். வரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.
ரிஷபம்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக விளங்குவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும்.
மிதுனம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். திடீர் பணவரவுகள் வந்து சேரும்.
கடகம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். மனக்குழப்பம் அகலும். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.
சிம்மம்
கோரிக்கைகள் நிறைவேறக் கோவிலுக்குச் செல்ல வேண்டிய நாள். வரவு திருப்தி தரும் என்றாலும் விரயம் உண்டு. கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.
கன்னி
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வில் வெளியில் வரலாமா என்று சிந்திப்பீர்கள்.
துலாம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள் பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
விருச்சிகம்
பொருளாதார நிலை உயரும் நாள். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.
தனுசு
எதையும் வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் பணப் பொறுப்பில் உள்ளவர்கள் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.
மகரம்
விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். எப்படி நடக்குமென்று நினைத்த காரியம் நல்லவிதமாக முடிவடையும்.
கும்பம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொது வாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் வந்து சேரலாம். வரவு இருமடங்காக உயரும்.
மீனம்
வீடு வாங்கும் யோகம் ஏற்படும் நாள். தேவைகள் பூர்த்தியாகும். பயணம் பலன் தரும். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வரவு திருப்தி தரும்.
- அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.
- திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவையாறு:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை நாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு தென் கயிலாயத்தில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் 'அப்பர் கயிலை காட்சி விழா' வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக நேற்று காலை திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை வழிபட்டனர். தொடர்ந்து, மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர், இரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிகர நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவையாறு நகரமே விழாக்கோலம் பூண்டது.
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும்.
- இந்து சமய நம்பிக்கைப்படி தேவலோகத்தில் இருக்கும் மரம் கற்பக மரமாகும்.
பிள்ளையார்பட்டி என்று பெயர் வரக்காரணமே கற்பக விநாயகர் இந்த ஊரில் அமைந்து இருப்பது தான். இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயம், விநாயகர் வழிபாடுக்காக போற்றப்படும் ஆலயம். உலகின் பல இடங்களில் விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. விநாயகர் சிற்பங்களும் பல இடங்களில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. உலகத்திலேயே முதல் பிள்ளையாராக விளங்குவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிற்பம் என்றால் மிகையாகாது.
உலகிலேயே இரண்டு கைகள் உடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே உள்ளது. ஒன்று பிள்ளையார் பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் காணப்படுகிறது. ஆனாலும் பிற்கால அணிகலன்களுடன் அவர் காணப்படுகிறார். ஆனால் பிள்ளையார்பட்டியில் பிற்கால அணிகலன்கள் இல்லாமல் பழைய வடிவத்தில் காணப்படுவது சிறப்பாகும். தெய்வீக சிற்பக் கலை வரலாற்றின் மூலமும், கல்வெட்டுகளின் சான்றுகளின் மூலமும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் சிற்பமே உலகத்தில் முதன்முதல் வடிவமாக போற்றப்படுகிறது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு முற்கால பாண்டிய மன்னர்கள், குன்றைக் குடைந்து கோவிலையும், கற்பக விநாயகர் சிற்பத்தையும், திருவீசர் என்னும் லிங்கத்தையும் இவ்வூரில் வடிவமைத்துள்ளனர். கி.மு 500 முதல் கி.பி 1284 வரையான 14 கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளது.
பாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் முயற்சி செய்தனர். அவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் எடுத்துக்கொண்டனர். அசுரர்கள் பாம்பின் தலை புறமும், தேவர்கள் வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்போது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை 'பஞ்ச தருக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
இந்து சமய நம்பிக்கைப்படி தேவலோகத்தில் இருக்கும் மரம் கற்பக மரமாகும். தேவலோகத்தில் உள்ள இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். அதுபோல கேட்ட வரம் அனைத்தும் தருவதால் பிள்ளையார்பட்டி விநாயகருக்கு 'கற்பக விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கு முன்பு இவர் 'தேசிய விநாயகம் பிள்ளையார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசிக்க பிரதான சாலையில் இருந்து தெற்குநோக்கி செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றால் அங்கே பிரமாண்டமான குளம் தென்படும். இந்த திருக்குளத்தில் கோவில் கோபுரத்தில் நிழல் விழுவது மிகச்சிறப்பாகும். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு முன்புறம் செல்கிறோம். கிழக்கே இருந்து கோபுர தரிசனம் முடித்துவிட்டு உள்ளே செல்கிறோம். அங்கே சிவபெருமான் திருவீசுவராக காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மை தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
கற்பக விநாயகரோ வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்கள் கேட்கும் வரத்தினை அள்ளித்தருகிறார். இரண்டு கரங்களுடனும், அங்குச பாசங்கள் இல்லாமலும் இங்கு சிறப்பாக காட்சி தருகிறார். அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடித்து அருள் புரிகிறார். இந்த அமைப்பு எல்லாம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரிடம் வித்தியாசமாக உள்ளது.
கற்பக விநாயகரின் சிற்பத்தை வடிவமைத்த சிற்பி அதன் அருகிலேயே அவரது கையெழுத்தை கல்வெட்டில் செதுக்கியுள்ளார். எக்காட்டூர் கோன் பரணன் பெருந்தச்சன் என அவரது கையெழுத்து உள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர் தனது கையில் மோதகத்தை வைத்திருக்கவில்லை. யோக நிலையில் அமர்ந்து உலக நன்மைக்காக கையில் லிங்கத்தை வைத்து தியானம் செய்யும் திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படு கிறார். அவர் யோக விநாயகராக இருப்பதால் கேட்ட வரங்கள் எல்லாம் எளிதில் கொடுக்க வல்லவராக இருக்கிறார்.
விநாயகரின் தும்பிக்கை வலது பக்கமாக வளைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வலம்புரி சங்கு போல் வலம்புரி துதிக்கையும் தனித்தன்மை வாய்ந்ததாகும். வடக்கு திசையை நோக்கி இருக்கும் வலம்புரி விநாயகர் இவர் மட்டுமே. எனவே தான் பிள்ளையார்பட்டி வலம்புரி விநாயகரை வணங்குபவர் களுக்கு வெற்றி மேல் வெற்றி என்கிறார்கள். இந்த கோவிலில் திருமண வரம் தரும் காத்தாயினி வழிபாடு, செல்வ வளம் தரும் பசுபதிசுவரர் வழிபாடு சிறப்பானதாகும்.
இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரியது, விநாயகர் சதுர்த்தி திருவிழாவாகும். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 9 நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டி விடுவார்கள். இத்திருவிழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் பல்வேறு பகுதியில் இருந்து கற்பக விநாயகரின் பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். ஒரு வருட காலத்திற்கு சதுர்த்தி நாட்களில் உண்ணாவிரதம் இருந்த பக்தர்கள், அதை நிறைவு செய்ய பிள்ளையார்பட்டி வந்து சேருவார்கள்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று விநாயகர் சன்னிதியில் உண்ணாநோன்பு இருந்து கும்ப ஜெபத்தில் கலந்துகொள்வது சிறப்பாகும். இந்த கும்பத்தினை தரிசனம் செய்யும் போது கேட்ட வரம் கிடைக்கிறது என்பதால் வருடத்துக்கு வருடம் கூட்டம் கூடுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு கணேசப்பெருமான் வாகனங்களில் திருவீதி உலா வருவார். இறுதி நாளில் தேர் பவனி நடைபெறும்.
வைகாசி மாதம் இவ்வூரின் காவல் தெய்வமான கொங்குநாச்சியம்மனின் கோவில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் இந்த ஆலயத்தோடு இணைந்தே திருவிழா நடைபெறும்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் சுற்றி வருவார். திருக்கார்த்திகையன்று விநாயகப்பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப்பெருமானும் திருவீதி பவனி வர சொக்கப்பனை கொளுத்தப்பெறும். மார்கழித் திருவாதிரை நாளன்று நடராஜப்பெருமான் வீதி உலா வருவார்.
இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் தினத்தில் இருந்து மார்கழி மற்றும் தை மாதம் பூச நட்சத்திரம் நாள் வரை காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களுக்காக கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடி - திருப்பத்தூருக்கும் இடையில் குன்றக்குடிக்கு அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
- திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-9 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை நள்ளிரவு 12.58 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம் : பூசம் மாலை 5.57 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு கிளி வாகன சேவை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தண்டியலிலும், ஸ்ரீரங்கமன்னார் யானை வாகனத்திலும் வீதி உலா. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. நயினார்கோவில் ஸ்ரீசவுந்திர நாயகி வீணாகான சரஸ்வதி அலங்காரம், வெள்ளிக்கிளி வாகன பவனி. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருவிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-லாபம்
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-உற்சாகம்
கன்னி-உழைப்பு
துலாம்- சிரத்தை
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- வெற்றி
மகரம்-போட்டி
கும்பம்-பொறுமை
மீனம்-மேன்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
வெளியுலக தொடர்பு கள் விரிவடையும் நாள். விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும். அன்னிய தேச வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள்.
ரிஷபம்
தொழில் போட்டிகள் அகலும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெற வாய்ப்பு உண்டு.
மிதுனம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நடைபெறும்.
கடகம்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முன்வருவீர்கள். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.
சிம்மம்
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஆதரவு உண்டு. பேச்சில் கனிவு பிறக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு உண்டு.
கன்னி
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் ஏற்படும். கல்யாண முயற்சி கைகூடும்.
துலாம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். மனக்கசப்புகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
விருச்சிகம்
பரபரப்பாகச் செயல்பட்டுப் பாராட்டு மழையில் நனையும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தனவரவு எவ்வளவு வந்தாலும் உடனுக்குடன் விரயம் ஆகலாம். எந்த முடிவாக இருந்தாலும் குடும்பத்தினர்களை ஆலோசித்துச் செய்வது நல்லது.
மகரம்
யோகமான நாள். உறவினர் பகை அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பயணங்களால் பலன் கிடைக்கும்.
கும்பம்
மனக்குழப்பம் அகலும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதால் விரயம் உண்டு.
மீனம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். கடனாகக் கொடுத்த தொகை வசூலாகும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.
- ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது.
- காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள், தோஷங்கள் மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கி விடும்.
அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரிக்கரை ஓரத்தில் அதிகாலையில் ஏராளமானோர் குவிந்தனர்.
ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில், ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்.
இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் அரூர் அடுத்த தீர்த்தமலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் இன்று ராமர், கவுரி உள்ளிட்ட 5 தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தீர்த்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
அதேபோல், டி.அம்மாபேட்டை, இருமத்தூர் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில், தை அமாவாசை வழிபாடு நடந்தது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். ஆற்றின் கரையில், ஏராளமான பொதுமக்கள் பூஜை செய்து, முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்.
- ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
- அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி தமிழ் மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.
இந்த மாதத்தில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். அதில் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.
ஆடி அமாவாசை நாளில் பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள். சாதாரண அமாவாசை நாட்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட வருவார்கள்.
இந்த நிலையில் ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், தனித்தனி வாகனங்களிலும், பேருந்துகளிலும் வருகை தந்தனர். தீச்சட்டி ஏந்தி, மொட்டை அடித்து, துலாம் பாரம் நேர்த்திக்கடன் செலுத்தி, அழகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கூல், பானகம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், தன்னாலவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம்.
- இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.
- பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல.
அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.
அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும். அமாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்.
திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.
இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு, நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங்களில் வணங்குவது சிறந்தது.
பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல. காய்கறிகள் தானமாக தரவேண்டும், குறிப்பாக பூசணிக்காய். ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும். அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள். முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
- பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது.
- சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.
தந்தை இறந்த ஆண்டில் தர்ப்பணம் செய்ய வேண்டாம். ஆனால், அந்த ஆண்டு பூர்த்தியாவதற்குள் கிரகணம் வந்தால் கிரகண புண்ணியகாலத்தில் தர்ப்பணம் செய்து விட்டுப் பின்பு அமாவாசைகளில் செய்ய வேண்டும்.
நடுப்பகலுக்கு மேல் தர்ப்பணத்திற்காக ஒரு நீராடல் செய்து விட்டு மாத்யான்ஹிகத்திற்குப் பின் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவரை பட்டினியாயிருக்க வேண்டும். துணிகளை கட்டிக் கொண்டு தர்ப்பணம் செய்யக் கூடாது.
1. பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது. ஆசமனம் முடிந்த பின் பவித்திரத்தை மோதிர விரலில் அணிந்து கொண்டு அத்துடன் மூன்று தனி தர்ப்பைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு 'சுக்லாம் பரதம்', 'பிராணாயமம்', 'சங்கல்பம்' முதலியவற்றை செய்ய வேண்டும். சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.
2. ஆவாஹனம் - சுத்தமான தரையிலோ (வெள்ளி, பித்தளை, அல்லது தாமிரத் தாம்பாளத்திலோ) கிழக்கு மேற்காகப் பரப்பிய தர்ப்பைகளின் மேல் தெற்கு நுனியாகக் கூர்ச்சத்தை வைத்து 'ஆயாதபிதர' என்ற மந்திரத்தால் எள்ளைப் போட்டு ஆவாஹனம் செய்யய்ய வேண்டும்.
3. ஆஸனம் - 'ஸக்ருதாச்சின்னம்' என்ற மந்திரத்தால் தனித் தர்ப்பைகளைத் கூர்ச்சத்திற்கு கீழ் வைக்க வேண்டும். 'ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்' என்று மறுபடி எள்ளைப் போட வேண்டும்.
தர்ப்பணம் - பித்ரு தர்ப்பணத்தில் கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரலுக்கும் இடையில் வலது புறமாகச் சாய்த்து கை நிறையத் தீர்த்தம் விட வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது இடது காலை முட்டி இட்டு, வலது காலை மடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் முழந்தாள்களுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு கிழக்கு முகமாகவோ அல்லது, தெற்கு முகமாகவோ இருக்க வேண்டும். தெற்கு முகமாகத் தர்ப்பணம் செய்பவரும் ஆசமனம், சங்கல்பம், ஆவா ஹனம், ஆஸனம் முதலியவற்றைச் செய்யும் போது கிழக்கு முகமாகத் தான் செய்ய வேண்டும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
முயற்சித்த காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
ரிஷபம்
நினைத்தது நிறைவேறும் நாள். செல்வநிலை உயரும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர்.
மிதுனம்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடகம்
அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். சகோதர ஒத்துழைப்பு உண்டு.
சிம்மம்
பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லை விட்டு விலகிச் செல்வர்.
கன்னி
கொடுத்த தொகை குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். செலவுகளை குறைத்து சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சொத்து வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
விருச்சிகம்
வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். அமைதி கிடைக்க அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.
தனுசு
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் எதிர்பாராத விதம் வந்து சேரும். உறவினர்களின் பகை உண்டு. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில் சம்பந்தமான பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
கும்பம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
மீனம்
வெற்றி தேவதை வீடு தேடி வரும் நாள். பணம் உங்களின் பையை நிரப்பும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மேலதிகாரிகளின் மனதை ஈர்க்கும். தொழில் வளர்ச்சி கூடும்.
- ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று.
- பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பு சாமிக்கு பூக்களால் அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-8 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை நள்ளிரவு 1.48 மணி வரைபிறகு பிரதமை
நட்சத்திரம் : புனர்பூசம் இரவு 6.11 மணி வரை பிறகு பூசம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
ஆடி அமாவாசை, ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம்
இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். வத்திராயிருப்பு சமீபம் சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் பெருந்திருவிழா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் பவனி.
பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பு சாமிக்கு பூக்களால் அலங்காரம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லப்பப்பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-நலம்
மிதுனம்-ஆர்வம்
கடகம்-நற்செய்தி
சிம்மம்-உதவி
கன்னி-பயணம்
துலாம்- முன்னேற்றம்
விருச்சிகம்-பரிசு
தனுசு- பாராட்டு
மகரம்-வெற்றி
கும்பம்-உழைப்பு
மீனம்-மேன்மை






