என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
    • வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.

    வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்மனை வழிபட்டால் போதும் வாழ்வில் உள்ள துன்பங்கள் அகலும். தீய சக்திகள் தலைதெறிக்க ஓடும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களிலும் வெற்றிமேல் வெற்றி வந்து சேரும் என்பது நம்பிக்கை.

    நாளை வளர்பிறை பஞ்சமி வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்

    * வராகி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள், மாலை வேளையில் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கேற்றி வழிபடலாம்.

    * சாமி தரிசனம் செய்த பின் அம்மனுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதலானவற்றை நைவேத்தியமாக படைத்து கோவிலில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.

    * வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது மறக்காமல் வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

    வராகி மூல மந்திரம்

    ஓம் ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதீ வார்த்தாளி, வாராஹி வாராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம:

    ருத்தே ருந்தினி நம: ஸதம்பே ஸ்தம்பினி நம: ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு.

    * கோவிலில் நீங்கள் விளக்கேற்றும் போதே அன்னையின் சந்நிதியில் அமர்ந்து, மனம் முழுக்க வராகியை மட்டும் நினைத்து, மனதுருகி மூல மந்திரத்தை சொல்ல வேண்டும்.


    * அன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜையறையில் அமர்ந்து வராகி மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரத்தை மனதார சொல்லி வழிபடலாம்.

    * வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.

    * ஒருவேளை வீட்டில் வராகி அம்மனின் திருவுருவப் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை, வராகியை மனதில் நிறுத்தி வராகி மந்திரத்தை சொன்னாலே போதும் வராகி அம்மன் தீமைகளில் இருந்து நம்மை காத்திடுவாள்.

    வராகி மந்திரம்

    "ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி"

    தினமும் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். செல்வமும், நல்ல எதிர்காலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் வராகி மந்திரத்தின் பயனால் வராகி அம்மனின் அருளைப் பெறலாம் என்கின்றனர் வராகி பக்தர்கள்.

    • கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள்.
    • பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.

    முருகப் பெருமான் அருளைப் பெறுவதற்கு வைகாசி விசாகம், தைப்பூசம், மாத சஷ்டி, கிருத்திகை என எத்தனையோ விரதங்கள் இருப்பினும் அதற்கெல்லாம் மணி மகுடம் போல இருப்பது மகா கந்த சஷ்டி விரதம். ஆம்! தீயவை அழியும் நல்லது நிலைத்திருக்கும் என்பதற்கு உதாரணமாக சூரபதுமன் அழிந்து தேவர்கள் வாழ்வு பெற்ற அந்த நிகழ்வினை நாம் சூரசம்ஹாரம் என்று கொண்டாடி வருகிறோம்.

    தற்போது நாமும் சூரபதுமன் போன்ற கொடிய, தீய குணங்களால் சூழப்பட்டிருக்கிறோம். அதனைப் போக்குவதற்கு ஒரே வழி கந்தக் கடவுளிடம் சரணடைவதே. அதிலும் இந்த மகா கந்த சஷ்டி விரதம் என்பது நமது அகப் பகை மற்றும் புறப் பகைகளை அடியோடி நீக்கி நமக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது.

    மகா கந்த சஷ்டி எல்லா முருகப் பெருமானின் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருச்செந்தூரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவதற்கான காரணம் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு முன் இங்கு படை வீடு அமைத்து தங்கினார். சூரனை சம்ஹாரம் செய்த பின்னரும் பஞ்ச லிங்கங்கள் அமைத்து தனது தந்தையான சிவபெருமானை இத்தலத்தில்தான் முருகப்பெருமான் வழிபட்டார். எனவே திருச்செந்தூரில் நடைபெறும் சூர சம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    உலகெங்கும் இருந்து பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து கடலில் நீராடி, பின் முருகன் வேலினால் உண்டாக்கிய நாழிக்கிணற்றிலும் நீராடி, பச்சை நிற ஆடை உடுத்தி, 6 முதல் 7 நாட்கள் தங்கி விரதம் இருந்து தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறப் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பச் செல்கிறார்கள்.

     

    தேச மங்கையர்க்கரசி

    முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு அடுத்த நாளில் தன்னிடம் இருந்து பிரிந்திருந்த இச்சா மற்றும் கிரியா சக்தியான வள்ளி, தெய்வானையை மணம் புரியும் நாளாகிய 7-ஆம் நாளில் அதாவது வள்ளி தேவசேனா திருக்கல்யாண தினத்தில் விரதம் நிறைவு செய்வது மிகவும் சிறப்பானது என்று எனது குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள் சொல்லுவார்கள். ஏனென்றால் திருமணக் கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் புரியும் விதமாக முருகப் பெருமான் காட்சி தரும் நேரத்தில் நாம் எதற்காக விரதம் இருந்தோமோ அது 100% நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    மகா கந்த சஷ்டி விரதமானது கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என உறுதியிட்டு சொல்லும் அளவுக்கு நற்பலன்களை அள்ளித்தரும் விரதம். முருகன் என்றாலே இளமை. இளமை என்றால் அழகு. புற அழகல்ல அக அழகு. மனதில் கவலை இல்லாமல் இருக்கும்போதுதான் அகமும், புறமும் அழகாக இருக்கும்.

    கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள். வேலை, திருமணம், குழந்தைப்பேறு, வறுமை, நோய் போன்ற பல காரணங்களால் பலரும் அல்லல் உற்று மனக்கவலைகளுடன் வாழ்கின்றனர். அந்த மனக் கவலைகளை தீர்க்கும் மாமருந்தே முருகன்தான். முருகனிடம் நம் கவலைகளை எல்லாம் சொல்லி சரணாகதி அடைந்து இந்த கந்த சஷ்டி காலத்தில் வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.

    எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

    சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்

    கந்தா, கதிர் வேலவனே, உமையாள்

    மைந்தா, குமரா, மறை நாயகனே.

    குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெற்றோரின் இல்லம் தேடி வந்து தங்கி இருந்து தன் பிரச்சனைகளை சொல்லி அதற்கான தீர்வைக் கண்டு திரும்புவது பிள்ளைகளின் வழக்கம். நமக்கு முருகனே தாயும், தந்தையும்; நாம் அனைவரும் அவருக்கு பிள்ளைகள்; அவன் உறையும் இடமே நாம் கதி என செல்லும் வீடு. இந்த சஷ்டி காலத்தில் செந்திலம்பதி என்ற வீட்டில் வந்து தங்கியிருந்து தனது துன்பங்களை எல்லாம் அவனிடம் சொல்லி அதைத் தீர்க்க வழியும் கண்டறிந்து திரும்பும் பிள்ளைகளாகவே நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம். முருகனின் பதம் பணியாமல் வாழ்பவர்களை அருணகிரிப் பெருமான் கடுமையாகவே சாடுகிறார்.

    'கோழிக்கொடியன் அடிபணியாமல் குவலயத்தே

    வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்

    ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்

    ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப் பிறகே?'

    முருக வழிபாடு என்பது அருணகிரிநாதரைப் பொறுத்தவரை ஒரு சாதாரண வழிபாடு மட்டுமல்ல. முருகனே எல்லாம் என்ற சரணாகதி நிலை வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். அந்த பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.

    தங்கத்தை ஆபரணம் ஆகும் வரை அடித்து துன்புருத்தினால்தான் அது விலை மதிப்பு பெறும். அடிக்கு பயந்து அது மண்ணிலேயே இருந்து விட்டால் அதன் மதிப்பு இழந்து போகும். முருகனை வழிபட்டால் சோதிக்கின்றானே என்று சொல்பவர்களுக்குத்தான் இந்த வரிகள். சோதனைக்கு உட்பட்டால்தான் மாணவன் மருத்துவன் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், பொறியாளர் ஆகலாம். சோதனையைத் தவிர்க்க நினைப்பவன் அறிவற்ற வனாகவே இருப்பான்.

    வருவது வரட்டும், வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறைவில்லை என்று சொல்லி கந்தன் கழலடியே கதி என்று நம்பி வருவோரை அவன் வாரி அனைத்து அருளை மாரி எனத் தருவதில் செந்தில் ஆண்டவர் வல்லவர். தேவர் சிறை மீட்ட வேலன் நம்மையும் காத்து அருளும் பாலன். இந்த சஷ்டி காலத்தில் அவரை வழிபட்டு எல்லோரும் எல்லா நலனும் பெற்று மகிழலாம்.

    • விழாவில் 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடக்கிறது
    • விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை,பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி, அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    6-ம் திருவிழாவான நாளை மறுநாள் (திங்கள்கிழமை) பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மகா தீபாராதனை நடக்கிறது.

    மதியம் 2 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளு கிறார். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

     

    கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும் இடத்தில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    சூரசம்ஹாரம் நடக்கும் கடற்கரையில் சுவாமி ஜெயந்தி நாதர் சூரபத்மனை வதம் செய்யும் வகையில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் நடைபெறுவதற்கு நீண்ட தூரம் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் நான்கு கட்டங்களாக முதலில் யானை முகம், இரண்டாவது சிங்கமும், மூன்றாவது தன்முகம்(சூரன்), இறுதியில் சேவலாக மாறும் சூரனை வதம் செய்யும் வகையில் தனித்தனி கட்டங்களாக சுவாமி ஜெயந்தி நாதர் சூரனை சுற்றி வந்து வதம் செய்யும் வகையில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தடுப்புகளுக்கு வெளியே இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    7-ம் திருவிழாவான 28-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை,பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சனிக்கிழமை உப்பு வாங்குவதற்கு மாறாக வெள்ளிக்கிழமையே வாங்கி பூஜை அறையில் வைத்து விடலாம்.
    • இரும்புப் பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தராது. ஆனால், அதற்கு மாறாக இரும்புப் பொருட்களை கோவிலுக்கு தானம் செய்யலாம்.

    இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருள். அதனால் சனிக்கிழமைகளில் இரும்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரும்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் சனி பகவானுடன் தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது. 

    *  சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் என்பதால், இரும்புப் பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தராது. ஆனால், அதற்கு மாறாக இரும்புப் பொருட்களை கோவிலுக்கு தானம் செய்யலாம். அதனால் பலன் கூடும்.

    * எண்ணெய் மற்றும் உப்பு வாங்குவதையும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி தவிர்த்துவிடலாம்.

    * சனிக்கிழமை உப்பு வாங்குவதற்கு மாறாக வெள்ளிக்கிழமையே வாங்கி பூஜை அறையில் வைத்து விடலாம்.

    * உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வதால் ஒரு ஜாடியில் உப்பைக் கொட்டி அதில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு வைத்தால் போதும் செல்வம் செழிக்கும்.

    * சனிக்கிழமையில் புதிய ஆடைகளை வாங்குவதையும் தவிர்த்துவிட வேண்டும். அப்படியே வாங்கினாலும் கருப்பு நிற ஆடையைத்தான் வாங்க வேண்டுமாம்.

    * அன்றைய நாள் புதிய ஆடைகளையும் அணியக்கூடாது என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.

    குறிப்பாக சனிக்கிழமையில் துடைப்பம் மற்றும் கருப்பு எள் முதலானவற்றை வாங்குவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். இவற்றை சனிக்கிழமையில் வாங்கினால் சனிபகவானின் கோபம் அதிகரிக்கும் என்றும் அதனால் நம் வாழ்வில் இன்னல்கள் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. 

    • சனிக்கிழமை வழிபாட்டில் பொதுவாக சனீஸ்வர பகவானையும்,பெருமாளையும் அனுமனையும் வழிபடுவது சிறப்பு.
    • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் வெற்றியைத் தரும்.

    சனிக்கிழமை வழிபாட்டில் பொதுவாக சனீஸ்வர பகவானையும், பெருமாளையும் அனுமனையும் வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமை இவர்களை வழிபட்டால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் எள் தீபம் ஏற்றுவது, விரதம் இருப்பது, மற்றும் குறிப்பிட்ட மந்திரங்களை சொல்வது என பக்தர்கள் சனிக்கிழமை வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

    அந்தவகையில் சனிக்கிழமை வழிபாட்டில் கூடுதலாக என்னென்ன செய்தால் பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    * சனிக்கிழமை சனி பகவானின் அருளைப் பெற சாதம் வடிக்கும் போது அதில் சிறிதளவு கருப்பு எள், கெட்டித்தயிர் சேர்த்து பிசைந்து காகங்களுக்கு வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கி பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை.

    * இப்படி 21 சனிக்கிழமை தொடர்ந்து செய்து வந்தால் உங்களை வாட்டி வதைக்கும் அனைத்து தீங்கும் அகன்று வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

    * சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி, நெய் விளக்கு ஏற்றிவர நினைத்த காரியம் நடக்கும்.

    * அதேபோல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் வெற்றியைத் தரும்.

    * சனிக்கிழமையன்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும். எதிரிகள் மீதான பயம் விலகும்.

    • ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது.
    • ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள், எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெறுவார்கள்.

    படைப்புக் கடவுளான பிரம்மனிடம் இருந்த வேதங்கள் எழுதப்பட்ட சுவடிகளை, அசுரர்கள் திருடிச் சென்றனர். அவர்களிடம் இருந்து வேதங்களை மீட்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே, 'ஹயக்ரீவர்' அவதாரம் ஆகும். ஆகாயமும், பாதாளமும் அவருடைய காதுகளாகவும், கண்களைப் பறிக்கும் ஒளியுடன் கூடிய சூரிய ரேகைகள் பிடரி மயிர்களாகவும், பூமி நெற்றியாகவும், கங்கையும், சரஸ்வதியும் அழகிய புருவங்களாகவும். சந்திரனும் சூரியனும் இரு கண்களாகவும், சந்தியா தேவதை மூக்காகவும், பித்ரு தேவதைகள் பற்களாகவும், கோலோகம், பிரம்ம லோகம் இரண்டும் உதடுகளாகவும், காலராத்ரி கழுத்தாகவும் விளங்கும் சத்வ மூர்த்தியான ஹயக்ரீவர் குறித்த சில அரிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    • ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33 துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற முடியும்.

    • ஹயக்ரீவர் எழுப்பும் 'ஹலஹல' என்ற கனைப்பு சத்தம், எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாகச் சொல்கிறார்கள்.

    • ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாகச் சொன்னால், ஹயக்ரீவர் நம் அருகில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்பது ஆன்றோர்களின் நம்பிக்கை.

    • ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள், எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெறுவார்கள்.

    • பக்தர்கள் நல்வழி பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார்.

    • உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய வியாச முனிவருக்கு ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாகக் கூறப்படுகிறது.

    • தேவர்களுக்கெல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார்.

    • ஹயக்ரீவர் 'ஓம்' எனும் பிரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

    • பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

    • புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க முடியும் என்கிறாாக்ள்.

    • ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும் பக்தர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

    • ஹயக்ரீவரின் பாத கமலங்களைக் கெட்டியாக பிடித்துக்கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய தலையெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.

    • ஹயக்ரீவரை தினமும் மலர் தூவி வணங்கினால் நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகும் என்பது நம்பிக்கை.

    • திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் அலங்காரம்.
    • தேவக்கோட்டை ஸ்ரீசிலம்பணி விநாயகர் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-8 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி நள்ளிரவு 1.43 மணி வரை. பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : அனுஷம் காலை 7.08 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று சதுர்த்தி விரதம். திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் அலங்காரம். சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் வேணுகோபால திருக்கோலம் இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி. குமார வயலூர் ஸ்ரீமுருகப் பெருமான் கஜமுகாசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல். தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் பவனி. வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமாள் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு. மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகர் சிறப்பு அபிஷேகம். தேவக்கோட்டை ஸ்ரீசிலம்பணி விநாயகர் அபிஷேகம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர், திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-பரிவு

    சிம்மம்-நன்மை

    கன்னி-தனம்

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-பணிவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-அமைதி

    கும்பம்-சாதனை

    மீனம்-நற்செயல்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    ரிஷபம்

    செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து உங்களை மகிழ்விக்கச் செய்யும்.

    மிதுனம்

    உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம்.

    கடகம்

    யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    சிம்மம்

    கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

    கன்னி

    வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.

    துலாம்

    தனவரவில் இருந்த தடைகள் அகலும் நாள். தக்க சமயத்தில் உடன்பிறப்புகள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    விருச்சிகம்

    செல்வாக்கு உயரும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் கூடும்.

    தனுசு

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள்.வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்..

    மகரம்

    வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். உங்கள் மணியான யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.

    கும்பம்

    வளர்ச்சி கூடும் நாள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.

    மீனம்

    சுபவிரயம் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனைமேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    • 3-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
    • விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதியுலா வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்

    3-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கியது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

    பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

    மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி, அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவிலை சேர்கிறார்.

    6-ம் திருவிழாவான 27-ந் தேதி (திங்கள்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 28-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு 11மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வைணவ திருத்தலங்கள் 108 என்று தொகுத்து காட்டியவர் அழகிய மணவாள தாசர்.
    • திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

    மூவுலகையும் காப்பவர் பரம்பொருள் நாராயணன் எனும் திருமால். இவர் பெருமாள், மாயோன், விஷ்ணு, பரமாத்மா என பல்வேறு பெயர்களை கொண்டவர். 10 அவதாரங்களுக்கு சொந்தக்காரர். உலகத்தில் அதர்மம் அதிகரிக்கும்போது, தர்மத்தை நிலைநாட்ட பெருமாள் அவதாரங்கள் எடுப்பார் என்று வைணவம் கூறுகிறது.

    திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பை படுக்கையாக கொண்டு பள்ளிகொண்டிருக்கிறார். திருமால் பள்ளிகொள்ளும் படுக்கையாகிய ஆதிசேஷன், ஆயிரம் வாய்களைக் கொண்டது. அந்த படுக்கையில் ஒரு மலையைப் போன்று திருமால் பள்ளிகொண்டுள்ளார். அங்கு சூரியனும், சந்திரனும் விளக்குகளாக உள்ளனர். கடல் அலைகள் விசிறிகளாகின்றன.

    திருவரங்கம் ராஜகோபுரம்

     

    வைணவ திவ்ய தேசங்கள்

    பாற்கடலை போல இந்த பாரெங்கும் வீற்றிருக்கிறார் பெருமாள். அவர் வீற்றிருக்கும் தலங்கள் எண்ணிலடங்காதவை என்றாலும், அவற்றில் 108 திருத்தலங்கள், திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற வைணவ திவ்ய தேச திருத்தலங்கள் இந்த 108 திருத்தலங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் முதன்மையான தலம் திருவரங்கம் அரங்கநாதசாமி கோவில். வைணவ திருத்தலங்கள் 108 என்று தொகுத்து காட்டியவர் அழகிய மணவாள தாசர். இவர் திருமலை நாயக்கர் ஆட்சியில் அலுவலராக பணியாற்றியவர். இவர் தம் காலத்தில் சிறப்புற்று விளங்கிய வைணவ தலங்களை 108 என்று வரையறை செய்து, நாடு வாரியாக பிரித்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அது 'நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி' என்னும் நூலாக வெளிவந்துள்ளது. திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

    காவிரி டெல்டா மாவட்டங்களில்...

    108 வைணவ திவ்ய தேசங்களில் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும், 11 திருத்தலங்கள் கேரளாவிலும், 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும், 4 திருத்தலங்கள் உத்தரப்பிரதேசத்திலும், 3 திருத்தலங்கள் உத்தராகண்டிலும், 1 திருத்தலம் குஜராத்திலும், 1 திருத்தலம் நேபாளத்திலும், 2 திருத்தலங்கள் வானுலகத்திலும் உள்ளன. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வைண தலங்களை பற்றி இங்கு காணலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் கோவிலடி, கண்டியூர், திருக்கூடலூர், கபிஸ்தலம், புள்ளபூதங்குடி, ஆதனூர், கும்பகோணம், திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், திருச்சேறை, நாதன்கோவில், திருவெள்ளியங்குடி, தஞ்சை ஆகிய இடங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கை, திருச்சிறுப்புலியூர், நாகை மாவட்டத்தில் திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, நாகை ஆகிய இடங்களிலும் 108 வைணவ திவ்ய தேச தலங்கள் அமைந்துள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூர், தலைச்சங்காடு, திருஇந்தளூர், சீர்காழி, தாடாளன்கோவில், திருவாழி-திருநகரி ஆகிய இடங்களும் வைணவ திவ்ய தேச தலங்களாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே திருநாங்கூர் பகுதியில் 11 வைணவ திவ்ய தேச தலங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புராண வரலாற்று சிறப்புடைய இக்கோவில்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளையும், தாயாரையும் தரிசித்து செல்கிறார்கள்.

     

    திருநாங்கூர் வரதராஜ பெருமாள் கோவில்

    திருநாங்கூர் திருப்பதிகள்

    மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநாங்கூர் பகுதியில் 11 திருப்பதிகள் அமைந்துள்ளன. இதில் திருநாங்கூர் என்னும் ஊரில் உள்ள 6 திவ்ய தேசங்களையும், இந்த ஊரை சுற்றி அருகருகே அமைந்துள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து 'திருநாங்கூர் திருப்பதிகள்' என அழைக்கப்படுகின்றன. திருக்காவளம்பாடி, திருஅரிமேயவிண்ணகரம், திருவண்புருடோத்தமம், திருச்செம்பொன் செய்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்தவிண்ணகரம், திருத்தேவனார்த்தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளக்குளம் ஆகியவை திருநாங்கூர் திருப்பதிகளாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் கருடசேவை திருவிழாவுக்கு இந்த 11 கோவில்களின் உற்சவர் சிலைகளும் எடுத்துவரப்படும். இந்த 11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தால் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார்கள். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் பாசுரத்தால் மங்களாசாசனம் செய்வார்கள். இந்த கருட சேவையை காண்பதற்கு திரளான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள்.

    அமைந்திருக்கும் இடங்கள்

    108 திவ்ய தேசங்கள் அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:-

    சோழநாட்டு திருப்பதிகள் - 40

    நடுநாட்டு திருப்பதிகள் - 2

    தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22

    வடநாட்டு திருப்பதிகள் - 11

    மலைநாட்டுத் திருப்பதிகள் - 13

    பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18

    நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-7 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை இரவு 11.49 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : அனுஷம் (முழுவதும்)

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் காலை மோகனாவதாரம். இரவு தங்கமயில் வாகனத்தில் பவனி. மதுரை சமீபம் சோலைமலை ஸ்ரீ முருகப்பெருமான் யானை வாகன புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் சுவாமி ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. குமாரவயலூர் ஸ்ரீ முருகப் பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

    திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் அலங்காரம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-வெற்றி

    கடகம்-உதவி

    சிம்மம்-தனம்

    கன்னி-முயற்சி

    துலாம்- களிப்பு

    விருச்சிகம்-உவகை

    தனுசு- உண்மை

    மகரம்-கவனம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-நேர்மை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். குடும்ப பெரியவர்கள் உங்கள்மீது குறை கூறுவர். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.

    ரிஷபம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமணப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.

    மிதுனம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    கடகம்

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    சிம்மம்

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    கன்னி

    எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    துலாம்

    நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு.

    விருச்சிகம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு.

    தனுசு

    உள்ளத்தில் நினைத்தவை உடனடியாக நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். தொழிலில் புதியவர்கள் வந்திணைவர்.

    மகரம்

    அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும். உடல்நலம் சீராகும்.

    கும்பம்

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    மீனம்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்துவர். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாமலிருப்பது நல்லது.

    ×