என் மலர்
ஆன்மிகம்
- வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
- தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை உள்ளது. சிலருக்கு தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. இப்படி தங்கம் பற்றி பலவாறாக யோசித்து கவலைப்படாமல் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்தாலே போதும். தங்கத்தையும் வாங்கலாம், உங்களிடம் உள்ள தங்கமும் நிலைத்து நிற்கும்.
* தங்கம் சேர, வெள்ளிக்கிழமை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமியை வழிபாடு செய்வது மிகவும் முக்கியம்.
* வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினம் காலை எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் மகாலட்சுமிக்கு விளக்கேற்ற வேண்டும்.
* மகாலட்சுமியை மனதாரப் பிரார்த்தித்து, தாமரை மலர்கள் அல்லது செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
* காலை அல்லது மாலை வேளையில் மகாலட்சுமிக்கு உரிய சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் அல்லது பாயாசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி, மந்திரங்கள் சொல்லி வழிபடலாம்.

* மகாலட்சுமி பூஜையின் போது நம் மனதை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்க வேண்டும்.
* வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
* தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும். ஆதலால், வெள்ளிக்கிழமை வழிபாட்டோடு சுக்கிர பகவானையும் குரு பகவானையும் சேர்த்து வழிபட வேண்டும்.
* மகாலட்சுமிக்கு உரிய கிரகம் சுக்கிரன். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வெட்டிவேரை திரியாகத் திரித்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
* தொடர்ந்து மூன்று வாரம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த விளக்கேற்றி வழிபட்டால் தங்கம் சேரும், செல்வ வளம் அதிகரிக்கும்.
மேலும் மஞ்சள், குங்குமம், பூக்கள் போன்ற மங்கலப் பொருட்களைப் பயன்படுத்தி வழிபாடு செய்வது நன்மை தரும். மகாலட்சுமியின் அருளைப் பெற வழிபாட்டின் போது கிராம்பு பயன்படுத்தலாம். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை செல்வ செழிப்பிற்காக தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
- சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் நாகா பரணக்காட்சி.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-6 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதியை இரவு 9.44 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : விசாகம் மறுநாள் விடியற்காலை 4.38 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
இன்று சந்திர தரிசனம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் நாகா பரணக்காட்சி. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. குமாரவயலூர் ஸ்ரீ முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி. வள்ளியூர் ஸ்ரீ முருகப் பெருமான் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திராத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-பணிவு
மிதுனம்-உதவி
கடகம்-ஆசை
சிம்மம்-அன்பு
கன்னி-கடமை
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-வெற்றி
தனுசு- நிறைவு
மகரம்-உண்மை
கும்பம்-இனிமை
மீனம்-கண்ணியம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
துயரங்கள் விலக துணிந்து முடிவெடுக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
ரிஷபம்
தடைகள் தானாக விலகும் நாள். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலை ஒன்றை இன்று செய்துமுடிப்பீர்கள்.
மிதுனம்
கல்யாண கனவுகள் நனவாகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கடகம்
நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரலாம். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்.
கன்னி
சொன்ன சொல்லைக் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்.
துலாம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். நாட்டுப்பற்றுமிக்கவர்கள் உங்கள் வீட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர்.
தனுசு
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.
மகரம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். பயணத்தால் பலன் கிடைக்கும்.
கும்பம்
தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகம் சம்பந்தமாக பிரபலமானவர்களை சந்திப்பீர்கள்.
மீனம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
- கந்தசஷ்டி விழா தொடக்கம்
- நாக சதுர்த்தி
இந்த வார விசேஷங்கள்
22-ந் தேதி (புதன்)
* கோவர்த்தன விரதம்.
* கந்தசஷ்டி விழா தொடக்கம்.
* சிக்கல் சிங்கார வேலவர் விழா தொடக்கம்.
* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* மெய்கண்ட நாயனார் குருபூஜை.
* சமநோக்கு நாள்.
23-ந் தேதி (வியாழன்)
* சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரணக் காட்சி.
* திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு.
* குமாரவயலூர் முருகன் சேஷ வானத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
24-ந் தேதி (வெள்ளி)
* சுபமுகூர்த்த நாள்.
* சிக்கல் சிங்கார வேலவர் மோகன அவதாரம்.
* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* பூசலார் நாயனார் குரு பூஜை.
* சமநோக்கு நாள்.
25-ந் தேதி (சனி)
* நாக சதுர்த்தி.
* தூர்வா கணபதி விரதம்.
* சதுர்த்தி விரதம்.
* குமார வயலூர் முருகன் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
* சிக்கல் சிங்காரவேலவர், வேணுகோபாலன் திருக்கோலம்.
* சமநோக்கு நாள்.
26-ந் தேதி (ஞாயிறு)
* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள், சிக்கல் சிங்கார வேலவர் தேர்.
* குமாரவயலூர் முருகன், சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
* ஐயடிகள் காடவர்கோன் குரு பூஜை.
* சமநோக்கு நாள்.
27-ந் தேதி (திங்கள்)
* சஷ்டி விரதம்.
* சுபமுகூர்த்த நாள்.
* குமாரவயலூர் முருக பெருமான் சக்திவேல் வாங்குதல்.
* திருச்செந்தூர் உள்பட முருகன் தலங்களில் கந்த சஷ்டி - சூரசம்காரம்.
* மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம்.
* கீழ்நோக்கு நாள்.
- பக்தர்கள் பலர் குழுக்களாக அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
- பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற உள்ளது.
திருச்செந்தூர்:
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினர். சில பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் பலர் குழுக்களாக அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 5.30 மணிக்கு துலாம் லக்னத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார். அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற உள்ளது. தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேளதாளத்துடன் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.
மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு நடைபெறும் சாயரட்சை தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனை பின் சுவாமி, அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடக்கிறது

6-ம் திருவிழாவான 27-ந் தேதி (திங்கள்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை சுவாமி குமரவிடங்க பெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- கோவர்த்தன விரதம்.
- மெய்கண்ட நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-5 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை இரவு 7.40 மணி வரை
பிறகு துவிதியை இரவு 9.44 மணி வரை
நட்சத்திரம் : சுவாதி நள்ளிரவு 2.02 மணி வரை. பிறகு விசாகம் நள்ளிரவு கடந்து அதிகாலை 4.36 மணி வரை.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம்
இன்று கோவர்த்தன விரதம். கந்தசஷ்டி விழா தொடக்கம். சிக்கல் சிங்காரவேலவர் விழா தொடக்கம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. மெய்கண்ட நாயனார் குருபூஜை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-நன்மை
மிதுனம்-பக்தி
கடகம்-வரவு
சிம்மம்-உற்சாகம்
கன்னி- பரிசு
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-உயர்வு
தனுசு- லாபம்
மகரம்-புகழ்
கும்பம்-நற்செயல்
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
ரிஷபம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்
புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் உண்டு. வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும்.
கடகம்
சொன்ன சொல்லை நிறைவேற்றும் நாள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும்.
சிம்மம்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். கைமாத்தாகக் கொடுத்த பணம் கைக்கு கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையை இன்று முடிப்பீர்கள்.
கன்னி
வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.
துலாம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்சுமை கூடும். விரயங்களைச் சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். நட்பு பகையாகலாம். மருத்துவச் செலவு உண்டு.
விருச்சிகம்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோக உயர்வு உண்டு.
தனுசு
நல்ல சம்பவம் நடைபெறும் நாள். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலனில் கவனம் தேவை. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மகரம்
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படும். தொழிலை விரிவுசெய்ய முன்வருவீர்கள்.
கும்பம்
ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். அயல்நாட்டு நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்றுக் கொள்வது பற்றி சிந்திப்பீர்கள்.
மீனம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அதிகாரிகளால் தொல்லை உண்டு. வரவு வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும்.
- தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை.
- திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீபாவளி ஆஸ்தானம் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்தார். ஏழுமலையானின் படைத்தளபதி விஸ்வக்சேனர் மற்றொரு பல்லக்கில் பவனி வந்தார்.
அர்ச்சகர்கள் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையானுக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது.
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை. தோமாலா அர்ச்சனை சேவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் கலந்துகொண்டு பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து காத்திருப்பு அறைகள் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர். 23,304 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3. 86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிருஷ்ண தேஜா விருந்தினர் மாளிகை வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
- அமாவாசை
- திருத்தணி முருகன் பாலாபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-4 (செவ்வாய்கிழமை)
திதி : அமாவாசை திதி மாலை 5.46 மணிக்கு மேல் பிரதமை திதி
நட்சத்திரம் : சித்திரை நட்சத்திரம் இரவு 11.35 மணிக்கு மேல் சுவாதி நட்சத்திரம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்று அமாவாசை
இன்று அமாவாசை. முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். கேதார கவுரி விரதம். வள்ளியூர் முருகன் பவனி. திருத்தணி முருகன் பாலாபிஷேகம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-கவனம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-நட்பு
சிம்மம்-சோர்வு
கன்னி-விருத்தி
துலாம்- களிப்பு
விருச்சிகம்-தொல்லை
தனுசு- முயற்சி
மகரம்-பயம்
கும்பம்-பரிசு
மீனம்-விவேகம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப்புள்ளிகள் இல்லம் தேடி வருவர். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
ரிஷபம்
சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும்.
மிதுனம்
மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிய புதிய சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதார நலன்கருதி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கடகம்
பற்றாக்குறை அகலும் நாள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம்.
சிம்மம்
முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கன்னி
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். கல்யாண முயற்சி கைகூடும்.
துலாம்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும்.
விருச்சிகம்
பெரியோர்களின் ஆசியால் பெருமைகள் சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
தனுசு
வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். பயணங்கள் பலன்தருவதாக அமையும்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப்பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
கும்பம்
மனச்சுமை அகலும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். புதிதாகத் தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகளைச்சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
- வள்ளியூர் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.
- சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-3 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி மாலை 4.14 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : அஸ்தம் இரவு 9.26 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று தீபாவளி பண்டிகை, சுப முகூர்த்த தினம், சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்று தீபாவளி பண்டிகை. சுபமுகூர்த்த தினம் (எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் விடியற்காலை 3.30 மணிக்கு மேல் 6 மணிக்குள்). வள்ளியூர் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். வெள்ளி மயில் வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் வைரக்கிரீடம் சாற்றியருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-லாபம்
சிம்மம்-சுகம்
கன்னி-வெற்றி
துலாம்- புகழ்
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- அன்பு
மகரம்-வரவு
கும்பம்-போட்டி
மீனம்-மேன்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும்.
ரிஷபம்
இல்லம் தேடி இனிய தகவல் வரும் நாள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றுப் பாதியில் நின்ற பணியை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் ஆர்வம் கூடும்.
கடகம்
கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். எதிரிகள் விலகுவர். எந்தச் செயலையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். விருந்தினர் வருகை உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். முயற்சி கைகூடும்.
கன்னி
செல்வாக்கு உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
துலாம்
விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
வாழ்த்துச் செய்திகளால் வளம் காணும் நாள். பணவரவு திருப்தி தரும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
தனுசு
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர்ப் பயணம் திகைக்க வைக்கும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். உறவினர் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.
மகரம்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
கும்பம்
எதிரிகளின் பலம் கூடும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் வரலாம். கூட்டாளிகள் குழப்பத்தை உருவாக்குவர்.
மீனம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் உயரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர்.






