என் மலர்
ஆன்மிகம்
- ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் வழக்கத்தைவிட சற்று கூடுதலாக கூட்டம் காணப்படுகிறது.
- பாத யாத்திரை பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் விழாக்கோலம் கொண்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் வழக்கத்தைவிட சற்று கூடுதலாக கூட்டம் காணப்படுகிறது.
தை முதல் நாள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு மார்கழி மாதம் முழுவதும் தென்மாவட்டங்களில் இருந்து குறிப்பாக தூத்துக்குடி நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக முருகன் படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் முன் செல்ல பின்னால் பாடல்கள் பாடி ஆடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் வழிபாடு செய்தனர். அவ்வாறு வந்த பாதயாத்திரை பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பாத யாத்திரை பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் விழாக்கோலம் கொண்டுள்ளது. தற்போது மார்கழி மாதம் என்பதால் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூபம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
- ஒரு பெண்ணின் மனதில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, அவளது தந்தைக்கு உண்டு.
- தனக்கான வேண்டுதலை நிறைவேற்றிய ராமானுஜரை, ஆண்டாள், 'அண்ணனே..' என்று அழைத்ததாக தல வரலாறு சொல்கிறது.
கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய ராமானுஜர், அந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு திருவில்லிபுத்தூரில் கோவில் கொண்டிருந்த ஆண்டாளை பார்ப்பதற்காகச் சென்றார். ஆனால் வயது வித்தியாசம் பார்க்காத ஆண்டாள், தனக்கான வேண்டுதலை நிறைவேற்றிய ராமானுஜரை, 'அண்ணனே..' என்று அழைத்ததாக தல வரலாறு சொல்கிறது.
ஒரு பெண்ணின் மனதில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, அவளது தந்தைக்கு உண்டு. அதன்பிறகு அந்தப் பொறுப்பு அவளது அண்ணனுக்கு உரியது. அதனால்தான் ராமானுஜரை, ஆண்டாள் நாச்சியார் 'அண்ணனே' என்று அழைத்திருக்கிறார்.
அன்று முதல் திருப்பாவையின் 27-ம் நாள் பாசுரத்தில் 'பால் சோறு மூட நெய் பெய்து..' என்று இருப்பதால், அக்காரவடிசலான பால்சோறு, நூறு அண்டாக்களில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக்கும் அழகர்மலையில் உள்ள கள்ளழகர் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.
இது பிற்காலத்தில் பிற வைணவ ஆலயங்களிலும் செய்யும் ஒரு நடைமுறை வழக்கமாக மாறிப்போனது. திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவரங்கம் அரங்கநாதர் கோவில், கள்ளழகர் ஆலயங்களில் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்த வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கிலோ அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்து, பலமணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் கள்ளழகருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-24 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி காலை 11.23 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : பூரம் மாலை 5.06 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமா மூலவருக்குத் திருமஞ்சன சேவை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணை காப்பு உற்சவம் ஆரம்பம். பதினாறு வண்டிச்சப்பரத்தில் பவனி வரும் காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குரு பகவானுக்குத் திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்து வைபவம், திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.
குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமா மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-ஆக்கம்
கடகம்-ஜெயம்
சிம்மம்-தாமதம்
கன்னி-சிறப்பு
துலாம்- ஆதரவு
விருச்சிகம்-தனம்
தனுசு- நிம்மதி
மகரம்-கவனம்
கும்பம்-உற்சாகம்
மீனம்-பிரீதி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
ரிஷபம்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
மிதுனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நிதி நிலை உயர என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
கடகம்
வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும்.
சிம்மம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
கன்னி
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும்.
துலாம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தெய்வீக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். அரைகுறையாக நின்ற பணிகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
தனுசு
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மன உறுதியுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.
மகரம்
விரயங்கள் கூடும் நாள். இட மாற்றம் உருவாகலாம். தேக நலன் கருதி செலவிட நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படும்.
கும்பம்
வரவு திருப்தி தரும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர்.
மீனம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கூட்டுத் தொழிலில் மாற்றம் உண்டு.
- சனி பகவானையே ஒருமுறை சிறைப்பிடித்து விடுவித்தவர் அனுமன்.
- பயம் நீங்கவும், புத்தி கூர்மை பெறவும், சொல்லாற்றல் வளரவும் அனுமன் வழிபாடு கைகொடுக்கும்.
அனுமன் ஜெயந்தி என்பது அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன் அவதரித்த தினமாகும். குறிப்பாக, தமிழகத்தில் மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் இது கொண்டாடப்படுகிறது.
2026-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுமன் ஜெயந்தி கடைபிடிக்கப்பட உள்ளது.
பொதுவாக மற்ற தெய்வங்களின் பிறந்தநாள் "திதி" அடிப்படையில் கொண்டாடப்படும். உதாரணமாக- விநாயகர் சதுர்த்தி. ஆனால், அனுமன் மற்றும் ராமபிரானுக்கு மட்டுமே அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மார்கழி மாத மூல நட்சத்திரம் வலிமை மற்றும் ஞானத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் அதிகாலையில் நீராடி, அனுமனுக்குப் பிடித்தமான வெண்ணெய் காப்பு, வடை மாலை, வெற்றிலை மாலை, சிந்துரம் பூசுதல் போன்றவை சாற்றி வழிபடுவது சிறப்பு.
அனுமன் ஜெயந்தி அன்று "ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்" என்கிற இந்த மந்திரத்தைச் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.
சனி பகவானையே ஒருமுறை சிறைப்பிடித்து விடுவித்தவர் அனுமன். அதனால், "என்னை வழிபடுபவர்களைச் சனி பீடிக்காது என்று சனி பகவான் அனுமனிடம் வரம் தந்துள்ளார். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடப்பவர்கள் அன்று அனுமனை வழிபடுவது சிறந்தது.
பயம் நீங்கவும், புத்தி கூர்மை பெறவும், சொல்லாற்றல் வளரவும் அனுமன் வழிபாடு கைகொடுக்கும்.
- பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணா மூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார்.
- யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது.
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் எனும் இடத்தில் தீர்க்காஜலேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தலத்தின் மூலவர் தீர்க்காஜலேஸ்வரர், அம்பாள் பாலாம்பிகை ஆவர். இக்கோவில் சுகப் பிரம்ம ரிஷி வழிபட்ட தலம் ஆகும். இக்கோவிலில் சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்றான யோக தட்சிணா மூர்த்தி எழுந்தருளி இருப்பது தனிச் சிறப்பாகும்.
ஒரு சமயம் பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணா மூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது நால்வரும் யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதலை ஏற்று யோகம் பற்றியும், அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார்.
ஆனால் சனகாதி முனிவர்களுக்கு தெளிவு ஏற்படவில்லை. இதனால் சிவபெருமான் தாமே யோக நிலையில் அமர்ந்து மவுனத்தின் மூலமாக ஞானமும், நிஷ்டையும் கைகூடும் தன்மையை போதித்து அருளினார். சிவபெருமானின் இத்திருக்கோலத்தை 'யோக தட்சிணாமூர்த்தி' என்று போற்றுகின்றன.
யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது. இரு பாதங்களையும் குத்திட்டு, குறுக்காக வைத்து, யோகபட்டயம் தரித்து, முன் இரண்டு கரங்களையும் முழங்கால்கள் மீது நீட்டி, பின் இரண்டு திருக்கரங்களில் அட்சய மாலை மற்றும் கமண்டலம் ஏந்தி காட்சி தருகிறார்.
இந்த யோக தட்சிணாமூர்த்தியை இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். கல்வியில் மேன்மை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், இக்கோவிலில் உள்ள சப்தகன்னிமார் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். இவர்களுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டால் மழை பொழிந்து, விவசாயம் செழிக்கும் என்கிறார்கள்.
திருவண்ணாமலையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் நெடுங்குணம் எனும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
- திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி இரவு ஆயிரூர் புதியகாவு தேவி கோவிலிலும், 13-ந் தேதி லாகா வனத்துறை சத்திரத்திலும் தங்கும்.
- சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டின் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சாமி ஐயப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அவ்வாறு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இந்த திருவாபரணங்கள் பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி தலைமையில் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அன்றைய தினம் மதியம் சாஸ்தா கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பிறகு திருவாபரணங்கள் 3 சந்தன பேழைகளில் சபரிமலை நோக்கி தலைச்சுமையாக ஊர்வலமாக புறப்படும். திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி இரவு ஆயிரூர் புதியகாவு தேவி கோவிலிலும், 13-ந் தேதி லாகா வனத்துறை சத்திரத்திலும் தங்கும்.
திருவாபரணங்கள் 14-ந் தேதி அட்டத்தோடு வழியாக மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரணங்களுக்கு தேவஸ்தான மந்திரி வாசவன், திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
தொடர்ந்து 18-ம் படி வழியாக எடுத்து செல்லப்பட்டு ஐயப்ப சாமிக்கு அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
அப்போது சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அப்போது பக்தர்கள் சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்வார்கள். மகர விளக்கையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் போலீசார் அனுமதித்துள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்கள் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகர விளக்கையொட்டி கோவிலில் 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 20-ந் தேதி காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவுபெறும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னேற்றம் கூடும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிகளுக்கு உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
ரிஷபம்
வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம்
கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வது நல்லது, ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
கடகம்
காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
சிம்மம்
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். செல்வ நிலை உயரும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்கள் ஆர்வத்தோடு உதவி செய்ய முன்வருவர். பழைய கடனில் இருந்து மீள புதிய வழிபிறக்கும்.
துலாம்
அலைபேசி வழியே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இனிமை தரும் விதம் இடமாற்றம் வரலாம்.
விருச்சிகம்
வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
தனுசு
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பயணங்களால் பலன் உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. தொழில் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
மகரம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிடிவாத குணத்தை தளர்த்திக் கொள்ளவும். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
கும்பம்
குழப்பங்கள் அகலும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை.
மீனம்
முயற்சி கைகூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். நவீனப்பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனை விழா.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-23 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி காலை 11.35 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : மகம் மாலை 4.38 மணி வரை பிறகு பூரம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனை விழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமசுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவகோட்டை ஸ்ரீஅரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீபெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீவிஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீதிருமறைக் காடர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
திருநெல்வேலி சமீபம் நாலாம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூர் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் அபயபிரதான ஸ்ரீரங்கநாதர், திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-சிந்தனை
மிதுனம்-பெருமை
கடகம்-நன்மை
சிம்மம்-ஆதரவு
கன்னி-பதவி
துலாம்- உயர்வு
விருச்சிகம்-உதவி
தனுசு- வரவு
மகரம்-ஆர்வம்
கும்பம்-பக்தி
மீனம்-நலம்
- அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.
- இந்த மலையில் கொங்கணச் சித்தர் நீண்ட காலம் தங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் அலவாய்ப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அலவாய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.
ஒரு காலத்தில் முருகப்பெருமான் மீது அதீத பக்தி கொண்ட பக்தர் ஒருவர், குழந்தை வரம் வேண்டி பழனி முருகனை தரிசிக்க சென்றார். அந்த பக்தரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அலவாய்மலையில் தான் எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை வழிபட வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்து கொடுக்கும்படியும், இந்த பணியை செய்து முடிக்கும் தருவாயில் உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் அருளினார்.
இதையடுத்து மகழ்ச்சி அடைந்த அந்த பக்தர், இத்தலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு, முருகப்பெருமான் கனவில் கூறியபடியே பக்தர்களுக்கு வசதியாக படிக்கட்டுகளை அமைத்து கொடுத்தார். இந்த திருப்பணி முடியும் வேளையில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.
இந்த மலையில் கொங்கணச் சித்தர் நீண்ட காலம் தங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மலை 'கொங்கண மலை' என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலில் முருகப்பெருமான் கையில் வேல் ஏந்தியபடி அழகுற காட்சி தருகிறார். இவர் சன்னிதிக்கு எதிரில் மயிலும், நந்தியும் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இங்கு வற்றாத சுனை ஒன்றும் உள்ளது.
கார்த்திகை மாதம் வரும் சோம வாரத்தில் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. கர்ப்பப்பையில் கோளாறு உள்ள பெண்கள் இத்தலம் வந்து முருகனை வழிபட்டு, பின்பு இங்குள்ள சுனை நீரை பருகினால் அவர்களின் குறை சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீபம்.
6-ந் தேதி (செவ்வாய்)
* சங்கடகர சதுர்த்தி
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தலங்களில் ராப்பத்து உற்சவம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந் தேதி (புதன்)
* தியாகபிரம்ம ஆராதனை விழா.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருவரங்கம் நம்பெருமாள் தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.
* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
8-ந் தேதி (வியாழன்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீபம்.
* சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
9-ந் தேதி (வெள்ளி)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், கள்ளர் திருக்கோலக் காட்சி, இரவு சந்திர பிரபையில் பவனி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (சனி)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணன் திருக்கோலக் காட்சி.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி, திருமோகூர் காளமேகப் பெருமாள், திருச்சேறை சாரநாதர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (ஞாயிறு)
* மதுரை செல்லத்தம்மன் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்து அருளிய காட்சி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (திங்கள்)
* திரைலோக்கிய கவுரி விரதம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், சுந்தரராஜர் திருக்கோலம்.
* மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.
ரிஷபம்
நன்மைகள் நடைபெறும் நாள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
மிதுனம்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமானம் உயரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தெய்வ பலம் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருக்கும். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.
சிம்மம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நீண்ட நாட்களாக நிறைவேறாத பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டு.
கன்னி
யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை இன்று சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வரவேண்டிய தொகை குறிப்பிட்டபடி வந்து சேரும். இருப்பினும் திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கும் சூழல் உண்டு.
விருச்சிகம்
வருமானம் திருப்தி தரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்கள் உதவி செய்ய முன்வருவர். வரன்கள் வாயில் தேடி வரும்.
தனுசு
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். நண்பர்கள் பகையாகலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. மனக்குழப்பம் ஏற்படும்.
மகரம்
விரயம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர். நல்ல சந்தர்ப்பங்களை நழுவ விடுவீர்கள்.
கும்பம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.






