என் மலர்
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 8.1.2026: இவர்களுக்கு வரவு திருப்தி தரும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
ரிஷபம்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
மிதுனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நிதி நிலை உயர என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
கடகம்
வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும்.
சிம்மம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
கன்னி
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும்.
துலாம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தெய்வீக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். அரைகுறையாக நின்ற பணிகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
தனுசு
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மன உறுதியுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.
மகரம்
விரயங்கள் கூடும் நாள். இட மாற்றம் உருவாகலாம். தேக நலன் கருதி செலவிட நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படும்.
கும்பம்
வரவு திருப்தி தரும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர்.
மீனம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கூட்டுத் தொழிலில் மாற்றம் உண்டு.






