Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 ஜனவரி 2026: முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 ஜனவரி 2026: முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-29 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி மாலை 5.36 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : விசாகம் பின்னிரவு 2.20 மணி வரை பிறகு அனுஷம்

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், திருத்தணி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், திருத்தணி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

திருநெல்வேலி மூன்றாம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய திருத்தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயாார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-தாமதம்

ரிஷபம்-செலவு

மிதுனம்-சுபம்

கடகம்-வரவு

சிம்மம்-சாந்தம்

கன்னி-நன்மை

துலாம்- மேன்மை

விருச்சிகம்-அமைதி

தனுசு- சுகம்

மகரம்-பாராட்டு

கும்பம்-இன்பம்

மீனம்-கண்ணியம்

X

Maalai Malar
www.maalaimalar.com