என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 13.1.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தடைகள் தானாக விலகும் நாள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய வேண்டிய நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
ரிஷபம்
பணவரவு திருப்தி தரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தை பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.
கடகம்
வாழ்க்கைத்தரம் உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
சிம்மம்
தடைகள் தானாக விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கூடும்.
கன்னி
திருப்பங்கள் மூலம் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். மங்கல செய்தியொன்று மனை தேடிவந்து சேரும். அதிக லாபம் தொழிலில் கிடைக்கும். வாகன மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
தனுசு
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சி வெற்றி பெற வழிவகுப்பர்.
மகரம்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். புதிதாக ஏற்பாடு செய்த உத்தியோகம் அமையும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
கும்பம்
பொறுமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாள். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட பயணமொன்றில் மாற்றம் செய்வீர்கள்.
மீனம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். பாதியில் பல பணிகள் நிற்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுடிபிடி அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.






