என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    அந்த வகையில், தை மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தை மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.13 மணிக்கு தொடங்கி 2-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணியுடன் நிறைவடைகிறது.

    இந்த நேரங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பவுர்ணமி கிரிவலத்தையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • இந்த வசந்த பஞ்சமியை சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி எனவும் அழைக்கின்றனர்.
    • மஞ்சள் என்பது வசந்த பஞ்சமியின் நிறம். இது ஆற்றல், செழிப்பு மற்றும் ஞானத்தை குறிக்கிறது.

    தமிழில் 12 மாதங்களுக்கும் 12 விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.

    12 நவராத்திரிகள் இருந்தாலும் இந்த 4 நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்கின்றனர் பெரியவர்கள்.

    தை மாத சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவது சிறப்பு. குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

    பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம். தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி. இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி விசேஷம். இதை மாக சதுர்த்தி என்றும் வரசதுர்த்தி என்றும் கொண்டாடுவார்கள்.

    அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாரதா நவராத்திரியின் 9-ம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

    அன்று கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபடுவார்கள். அதே போன்று சரஸ்வதியை வழிபட உகந்த மற்றொரு சிறப்பு வாய்ந்த நாள் வசந்த பஞ்சமி. பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி.

    ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமியை 'கருட பஞ்சமி' என்றும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமியை ரிஷி பஞ்சமி' என்றும் வழிபடுவார்கள். அது போலவே தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதி 'வசந்த பஞ்சமி' என்கின்றனர்.

    சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கான மிக சிறப்பான நாளாக வசந்த பஞ்சமி உள்ளது. மாணவர்கள், கலைஞர்கள், அறிவு சார்ந்த துறைகளில் இருப்பவர் அவசியம் கொண்டாட வேண்டிய திரு நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது.

    மாதந்தோறும் இரண்டு முறை பஞ்சமி திதி வந்தாலும், தை மாத வளர்பிறையில் வரும் வசந்த பஞ்சமி சிறப்புக்குரிய நாளாகும். இந்த நாளை மிக முக்கியமான வழிபாட்டு நாளாக இந்துக்கள் கருதுகிறார்கள். வசந்த காலத்தின் தொடக்கமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறப்பு பூஜைகள் செய்து சரஸ்வதியை வழிபடலாம்.

    இந்த வசந்த பஞ்சமியை சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி எனவும் அழைக்கின்றனர். இந்த ஆண்டு வசந்த பஞ்சமி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பஞ்சமி திதி நாளை அதிகாலை 2:28 மணிக்குத் தொடங்கி நாளை மறுநாள் அதிகாலை 1:46 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் சரஸ்வதியை பூஜித்து வழிபட வேண்டும்.

    நவராத்திரியில் வரும் சரஸ்வதி பூஜை அன்று செய்யப்படும் அனைத்து வழிபாடுகளையும் இந்த நாளில் மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஞானம், அறிவு, கல்வியில் வெற்றி ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிற உடையணிந்து கொள்வது நல்லது. மஞ்சள் அன்பு, செல்வ வளம், தூய்மை ஆகியவற்றை குறிப்பதாகும். சரஸ்வதி தேவியின் சிலையை வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, கேசரி படைத்து வழிபடுவது சிறப்பு. மாணவர்கள் தங்களின் புத்தகங்களை சரஸ்வதி படத்திற்கு முன் வைத்து வணங்கி, சரஸ்வதி தேவியின் அருளை பெற வேண்டும்.

    உலகத்தை பிரம்ம தேவர் படைத்த பிறகு அவரது கையில் இருந்த கமண்டலத்திலிருந்து சில துளி நீர் கீழே சிதறியது. அந்த நீரில் இருந்து உருவானவர்தான் சரஸ்வதி தேவி. அதனால் தான் இந்த நாள் சரஸ்வதிக்கு உகந்ததாக கூறப்படுகிறது. திருமணங்கள், கல்வி மற்றும் வணிக முயற்சிகள் உள்ளிட்ட புதிய தொடக்கங்களுக்கும் இந்த திருவிழா மங்களகரமானதாக கருதப்படுகிறது.

    மஞ்சள் என்பது வசந்த பஞ்சமியின் நிறம். இது ஆற்றல், செழிப்பு மற்றும் ஞானத்தை குறிக்கிறது. வழிபாடு செய்யும் முன் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, கேசரி அல்வா மற்றும் லட்டு போன்ற பாரம்பரிய மஞ்சள் நிற இனிப்புகளை தயார் செய்து சரஸ்வதி தேவிக்கு படைத்து தீப ஆராதனை செய்து வழிபட வேண்டும். இந்த நன்னாளில் விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்கள், மாலையில் அம்மனை வழிபட்ட பிறகு விரதத்தை முடிக்கலாம்.

    வசந்த பஞ்சமியின் சிறப்பு

    முருகனுக்கு உகந்தது சஷ்டி திதி, விநாயகருக்கு உகந்தது சதுர்த்தி திதி என்பது போல பஞ்சமி திதி வராகி அம்மன் வழிபாட்டுக்கு உகந்தது. ஆனால் ஒரு சில மாதங்களில் வரும் பஞ்சமி திதி மிக விசேஷமானவை.

    ஆடி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி என்று நாக தோஷங்களை போக்கும் சக்தி வாய்ந்த நாளாகும்.

    அதே போல ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும் ரிஷி பஞ்சமி குரு தோஷங்களை போக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோலத்தான் தை மாதத்தில் வளர்பிறை பஞ்சமி வசந்த பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.

    கல்விக்கு சரஸ்வதி, பகை வெல்ல வாராகி

    பொதுவாகவே பஞ்சமி என்பது வாராகி அம்மனை வழிபட உகந்த திதி. குறிப்பாக, இந்த வசந்த பஞ்சமி நாளில் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீ வாராகி மன சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிக்கும் இந்தத் தேவி, சப்த மாதர்களில் ஒருவர்.

    இந்த நாளில் விரதமிருந்து மாலை வாராகி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும். மேலும், பூமி தொடர்பான பிரச்சனைகள் தீர வாராகி வழிபாடு மிகவும் முக்கியம். குறிப்பாக, வசந்த பஞ்சமி அன்று வாராகி வழிபாடு செய்வது மிகவும் சிறப்புவாய்ந்தது.

    வசந்த பஞ்சமி திதியில், வாராகி அம்மனையும், கூடவே சரஸ்வதி தேவியையும் மனமுருக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.

    • வளர்பிறை சதுர்த்தி விரதம்.
    • குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-8 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 2.08 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : சதயம் பிற்பகல் 2.33 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்

    இன்று வளர்பிறை சதுர்த்தி விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். அப்பூதி அடிகள் நாயனார் குருபூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.

    குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-தேர்ச்சி

    மிதுனம்-பெருமை

    கடகம்-போட்டி

    சிம்மம்-கவனம்

    கன்னி-மாற்றம்

    துலாம்- களிப்பு

    விருச்சிகம்-வரவு

    தனுசு- அமைதி

    மகரம்-ஆசை

    கும்பம்-இன்பம்

    மீனம்-கடமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    மிதுனம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமண பேச்சுகள் முடிவாகும். உத்தியோகம் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    கடகம்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்காது. உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்துவர்.

    சிம்மம்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். தகுந்த ஓய்வு உடல்நலத்தை சீராக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    கன்னி

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    துலாம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    விருச்சிகம்

    முன்னேற்றம் கூடும் நாள். எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    தனுசு

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.

    மகரம்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து செயல்படுவர். உடல்நலம் சீராகும். பயணத்தால் விரயம் உண்டு.

    கும்பம்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் மாற்றங்களைச் செய்ய நினைப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    மீனம்

    கவலைகள் தீரும் நாள். வரன்கள் முடிவாகும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும். சிறிய பணியைக்கூட செய்ய அதிக அவகாசம் தேவைப்படும்.

    • தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழன், இக்கோவிலில் வழிபட்ட பின்புதான் எல்லா காரியத்தையும் தொடங்கி உள்ளார்.
    • கோவிலின் மேற்கு பக்கமாக ராஜகோபுரம் காணப்படுகிறது.

    திருவாரூர் மாவட்டம் கீழ வீதி பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சர்க்கரை விநாயகர் கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழன், இக்கோவிலில் வழிபட்ட பின்புதான் எல்லா காரியத்தையும் தொடங்கி உள்ளார். அதன்பின்னர், அவர் வம்ச வழியினர் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைத் தோங்கியது. இங்குள்ள விநாயகரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள், சர்க்கரை படைத்து வழிபட்டனர். இதனால் இவருக்கு 'சர்க்கரை விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்பு, இவரை வழிபட்ட மன்னரையும், அவரது சந்ததியினரையும் வெற்றி பெற வைத்து காத்ததால், இவர் 'சந்ததிகளை காக்கும் சர்க்கரை விநாயகர்' என அழைக்கப்பட்டார்.

    கோவிலின் மேற்கு பக்கமாக ராஜகோபுரம் காணப்படுகிறது. சுமார் நூறு பேர் அமர்ந்து விநாயகரை தரிசிக்கும் வகையில் மகாமண்டபம் அமைந்துள்ளது. விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். இவர் வெள்ளிக் கவசத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். மகாமண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து, விநாயகரை உற்று நோக்கினால், அவர் நம்மிடம் பேசுவது போல் தோன்றும். கோவில் தல விருட்சமாக அரச மரமும், நெல்லி மரமும் உள்ளன.

    திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நினைத்த காரியம் கைகூட நினைப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து விநாயகரை வேண்டிக்கொள்கிறார்கள். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள், 108 தேங்காய் உடைத்தும், நெய் விளக்கேற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சர்க்கரை, முக்கனி, சொர்ண அபிஷேகம் செய்தும், திராட்சை, வெற்றிலை, தேங்காய் படைத்தும், அருகம்புல், செம்பருத்தி போன்ற விநாயகருக்கு உகந்த மலர்களை சாற்றியும் வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் வந்துசேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவாரூர் ரெயில் நிலையத்தின் அருகிலேயே இக்கோவில் அமைந்துள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள். அரைகுறையாக நின்ற பணிகள் தொடரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோக முயற்சியில் வெற்றி உண்டு.

    ரிஷபம்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

    மிதுனம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். செய் தொழிலில் லாபம் உண்டு.

    கடகம்

    பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.

    சிம்மம்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    கன்னி

    உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். வருமானம் உயரும். சுபகாரிய பேச்சு முடிவாகும்.

    துலாம்

    கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். கடமையிலிருந்த தொய்வு அகலும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்.

    விருச்சிகம்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.

    தனுசு

    வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மகரம்

    சான்றோர்களின் ஆலோசனைகளால் தடைகள் அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக சிந்தனை மேலோங்கும்.

    கும்பம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்றும் நீடிக்கும். உறவினர் பகை உருவாகும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது.

    மீனம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வரவு திருப்தி தரும்.

    • திருவானைக்காவல் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
    • விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-7 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை பின்னிரவு 2.58 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : அவிட்டம் பிற்பகல் 2.32 மணி வரை பிறகு சதயம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்

    மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தெப்ப உற்சவம் ஆரம்பம். கற்பக விருட்சம் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. திருவானைக்காவல் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

    விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வட கரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-சிந்தனை

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-பரிசு

    சிம்மம்-நன்மை

    கன்னி-உதவி

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-பிரீதி

    தனுசு- சுபம்

    மகரம்-தனம்

    கும்பம்-போட்டி

    மீனம்-புகழ்

    • திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் பவனி.
    • மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு.

    20-ந் தேதி (செவ்வாய்)

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் பவனி.

    * மதுரை செல்லத்தம்மன் புஷ்ப சப்பரத்தில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    21-ந் தேதி (புதன்)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தைப்பூச தெப்ப உற்சவம் ஆரம்பம்.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ரத உற்சவம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் பவனி.

    * திருவானைக்காவல் சிவபெருமான் விழா தொடக்கம்.

    * மேல்நோக்கு நாள்.

    22-ந் தேதி (வியாழன்)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.

    * மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * தேரெழுந்தூர் திருஞானசம்பந்தர் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    23-ந் தேதி (வெள்ளி)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கயிலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

    * காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் விழா தொடக்கம்.

    * பைம்பொழில், குன்றக்குடி, திருவிடைமருதூர் தலங்களில் முருகப்பெருமான் விழா தொடக்கம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந் தேதி (சனி)

    * காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.

    * திருச்சேறை சாரநாதர் விழா தொடக்கம்.

    * திருமொச்சியூர், திருவாவடுதுறை, திருவானைக்காவல் தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    25-ந் தேதி (ஞாயிறு)

    * ரத சப்தமி.

    * திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் வேணுகோபாலன் திருக்கோலம்.

    * கோயம்புத்தூர் பாலதண்டாயுத பாணி விழா தொடக்கம்.

    * திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    26-ந் தேதி (திங்கள்)

    * திருப்புடைமருதூர் முருகன் வெள்ளி விருட்சப சேவை.

    * பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சை குதிரை வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

    ரிஷபம்

    யோகமான நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

    மிதுனம்

    எதிர்பாராத செலவுகளால் இன்னல் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் கூடும். எதையும் யோசித்து பேசுவது நல்லது. மறதியால் அவதியுண்டு.

    கடகம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

    சிம்மம்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    கன்னி

    எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    துலாம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். முயற்சியில் இருந்த தடைகள் அகலும். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள்.

    விருச்சிகம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். தனவரவு தாராளமாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    மகரம்

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்ப வருமானத்தை உயர்த்த திட்டம் தீட்டுவீர்கள்.

    கும்பம்

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    மீனம்

    வரவும், செலவும் சமமாகும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம்.
    • திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-6 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவிதியை பின்னிரவு 3.19 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : திருவோணம் பிற்பகல் 2.03 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் முருகன் கோவில்களில் பால் அபிஷேகம்

    இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம். திருமொச்சியூர், சூரியநயினார் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் பால் அபிஷேகம்.

    திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-ஜெயம்

    மிதுனம்-மகிழ்ச்சி

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-அமைதி

    கன்னி-ஆக்கம்

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-இரக்கம்

    தனுசு- நற்செயல்

    மகரம்-பொறுமை

    கும்பம்-அன்பு

    மீனம்-பயணம்

    • மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு தெப்பத்திருவிழா இன்று (19-ந்தேதி) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 28-ந்தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    முன்னதாக கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பைப்புல், மாவிலை, சந்தனம், குங்குமம், பூமாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    தொடர்ந்து 6.45 மணிக்கு மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 27-ந் தேதி தைக்கார்த்திகை தினத்தில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 16 கால்மண்டப வளாகத்தில் இருந்து நகரின் முக்கிய ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 28-ந் தேதி ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று காலை தெப்ப மிதவையில் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பகுளத்தை வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.

    தொடர்ந்து அன்று மாலை தெப்பக்குளத்தில் மைய மண்டபத்தில் பத்தி உலா நிகழ்ச்சியும், தொடர்ந்து மின்னொளியில் மீண்டும் தெப்ப மிதவையில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தெப்பக்குளத்தை வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.

    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தைலக்காப்பு சம்ரோஷனம்.
    • பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-5 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பிரதமை பின்னிரவு 3.11 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : உத்திராடம் நண்பகல் 1.04 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம் : மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு

    இன்று திருவோண விரதம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தைலக்காப்பு சம்ரோஷனம். கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் ரதோற்சவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-சிறப்பு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-சுகம்

    கன்னி-மேன்மை

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-கடமை

    தனுசு- நட்பு

    மகரம்-உதவி

    கும்பம்-அமைதி

    மீனம்-தாமதம்

    ×