என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் உற்சவம் ஆரம்பம்.
    • விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-19 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி இரவு 7.27 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : அசுவினி காலை 10.14 மணி வரை பிறகு பரணி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பவுணர்மி, மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமி திருமஞ்சனம், நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று பவுர்ணமி. கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சை ஸ்ரீ பெருவுடையார் கோவிலில் அன்னாபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம்.

    விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-உவகை

    சிம்மம்-ஈகை

    கன்னி-ஆதரவு

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-ஆசை

    தனுசு- சுகம்

    மகரம்-பெருமை

    கும்பம்-நற்செயல்

    மீனம்-வெற்றி

    • 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர்.

    வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாட்களிலும் சென்று வழிபடலாம். இங்கு ஒவ்வொரு நாளும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை (கோரக்கர் பிறந்த நாள் என்பர்) அன்று வழிபடுவது சிறப்பாகும்.

    வியாழக்கிழமைகளில் காலை முதல் உபவாசம் இருந்து இரவு வழிபட்டு, பிரசாதம் உண்டு, கோவில் வளாகத்தில் தங்கி உறங்கி, விடியல் நீராடி கோரக்கரை வழிபட்டு திரும்பினால் மனக்கவலைகள் அகலும்.

    மேலும், பவுர்ணமி அன்று வழிபட்டால் ஒரு மாதம் வழிபட்ட பலன் கிடைக்கும். அதிலும், ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அன்னாபிஷேக வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அன்று கோரக்கரை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பரணி தினத்தன்று வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து, 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதுமட்டுமின்றி, கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். மன வளர்ச்சி குன்றியோர் இங்கு வந்து சென்றால் மனநலம் பெறுகிறார்கள்.

     

    களவுபோன பொருட்கள் திரும்ப கிடைக்கின்றன. தொலை தூர பயணம் மேற்கொள்ளும் போது இவரை வணங்கி புறப்பட்டால் சிறப்பான பயணமாக அமைவதோடு செல்வ வளமும் கூடும் என்கின்றனர் பக்தர்கள்.

    கருவறையில் உள்ள சிவன், உமை, சித்தர் திருவடிகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்ப பிரச்சினைகளை நீக்குவதோடு, வெளியில் சொல்ல முடியாத கவலைகளையும் அகற்ற துணையாகிறது. நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.

    கோரக்கர் படத்தை வீடுகளில் வைத்து பூஜிப்பதும், பயண நேரங்களில் சட்டை பையில் வைத்து கொண்டு பயணிப்பதும் நன்மை தருவன. இவரை இயல், இசை, நாடக கலை வல்லுநர்கள் வழிபட்டு புதிய வாய்ப்புகளை பெற்று உயர்கிறார்கள்.

    சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர். அதனால் அவரை தொழுவது சித்தர் உலகையே பூஜித்து கோடி புண்ணியப்பலன் பெறுவதற்கு சமமாகும்.

    • பெண்ணோ இல்லை சுவாமி, அடுப்பு சாம்பலை இதோ அந்த எருக்குழியில் போட்டு வைத்து இருக்கிறோம்
    • ‘என்ன சித்தரே’ என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.

    கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியில் இருந்து பிறந்தவர் தான் 'கோரக்கர்'.

    மச்சேந்திரன்

    ஒரு முறை சிவபெருமானும்- பார்வதி தேவியும் கடற்கரையில் அமர்ந்து இருந்தனர். அப்போது சிவபெருமான், பார்வதி தேவிக்கு மந்திர உபதேசம் செய்து கொண்டு இருந்தார். கடலுக்குள் இருந்த மீன்களுள் ஒன்று அந்த மந்திரத்தை கிரகிக்க சிவனின் அருளால் அந்த மந்திரம் மீனின் வயிற்றில் இருந்து மனிதனாக உருவெடுத்தது. சிவனின் அருளால் பிறந்த அவனுக்கு மச்சேந்திரன் என்ற பெயரும் ஏற்பட்டது.

    திருநீறு

    சித்தனாக விளங்கிய மச்சேந்திரன் ஒரு முறை அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஏன் அழுகிறாய்? என கேட்க அந்த பெண்ணோ குழந்தையின்மை காரணமாக தான் என்றாள். மலடியான அப்பெண்ணின் துன்பம் தீர்க்க மச்சேந்திரன், தாயே! இது திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய் என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்றுவிட்டார். இதனை கண்ட அவரது தோழி யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய் எனக்கூறி, அதனை வீசி எறிந்து விடு, என்றாள். தோழியின் பேச்சை கேட்டு பயந்து போன அந்த பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.

    கோரக்கா...

    சில ஆண்டுகள் கடந்தன. மீண்டும் மச்சேந்திரரை சந்திக்கும் வாய்ப்பு அந்த பெண்ணுக்கு கிடைத்தது. அவள் அழுது கொண்டே நடந்ததை கூறினாள். மேலும், இதுவரை தனக்கு குழந்தை இல்லை என்பதையும் கூறினாள். அவளது நிலைமையை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்காமல் சரி பெண்ணே, உன் வீட்டு அடுப்பு சாம்பலை எங்கே கொட்டுவீர்கள்? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா? என கேட்டார்.

    அதற்கு அந்த பெண்ணோ இல்லை சுவாமி, அடுப்பு சாம்பலை இதோ அந்த எருக்குழியில் போட்டு வைத்து இருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்த சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது என்றாள். இதனை கேட்ட மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகம் இருக்கிறது எனக்கூறி கொண்டு எருக்குழிக்கு அருகே சென்று 'கோரக்கா.. கோரக்கா...' என குரல் கொடுத்தார்.

    வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை...

    'என்ன சித்தரே' என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா என்றார் சித்தர். அப்போது சாம்பலை கொடுத்த நாளில் இருந்து, இதுவரை 10 ஆண்டுகளை கடந்த நிலையில், 10 வயது சிறுவன் ஒருவன் தெய்வீக லட்சணங்களுடன் உள்ளிருந்து எழுந்து வெளியே வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர்.

    சுவாமி! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமையை அறியாமல் அதனை வீசி எறிந்து, இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை நான் இழந்து விட்டேனே... எனக்கூறி கதறி அழுது கொண்டே மகனை அரவணைத்து கொண்டாள். ஆனால், அவளது மகன் அவளை உதறி தள்ளிவிட்டு தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாயே.

    என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை. நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன் என்றான். இருப்பினும் என் தாய் என்ற முறையில் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான்.

    சித்தி பெற்றார்

    தான் செய்த தவறுக்கு வருந்திய அந்த தாயோ செய்வதறியாது வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின், கோரக்கர் மச்சேந்திர சித்தரின் மாணாக்கர் ஆனார். மச்சேந்திரரிடம் இலக்கணங்களோடு ஞானநெறியும் கற்று குருகுலவாசம் இருந்தவர். நாலா திசைகளிலும் அலைந்து சித்தி பெற்றார்.

    • வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சப்பரத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் கோவில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    அப்போது அங்கிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 18-ந்தேதி வரையில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் காந்திமதி அம்பாள் எழுந்தருளி வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 13-ந் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார்.

    14-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.15-ந் தேதி அதிகாலை 4:30 மணி முதல் 5.30 மணிக்குள் நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இரவு 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது. 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது. 18-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர். 

    • ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.
    • அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும்.

    நமக்கு உணவு தரும் சிவனுக்கே அரிசி உணவை அபிஷேகம் செய்து படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். நாளை (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஐப்பசி மாதப் பவுர்ணமி தினத்தன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

    பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையான அழகுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பவுர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

    சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

    அன்னாபிஷேகத்தன்று சிவபெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை சோறும் ஒரு சிவலிங்கம் என்று கருதப்படுகிறது. எனவே அன்று அன்னாபிஷேக கோலத்தில் சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம் ஆகும்.

    இதையே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றும் கூறுவார்கள். அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும். சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம். ஒவ்வொரு அபிஷேக பொருளுக்கும் ஒரு பலன் உண்டு. பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் சகல காரியங்களிலும் சிவன் நமக்கு வெற்றித்தருவார். இத்தகைய அபிஷேகங்களில் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது அதிக சிறப்புடையதாகும்.

    ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிட்சமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்று தெரியுமா? ஐப்பசி பவுர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின் சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுவார்கள். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது.

    சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியில் இருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருவார். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.

    பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தை விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுப்பார்கள். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படும். சிவபெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

    தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிவபெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் (கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம்.) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்கிவிடும்.

    புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிந்து விடும். 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குவார்கள். அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக கொண்டு வந்து சிவபெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக சாற்றப்படும். சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.

    அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறும். பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறும். மாலை ஐந்து மணிக்கு சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படும். பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீப ஆராதனையும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திரசேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுவான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

    நாளைய பவுர்ணமி அதிக பிரகாசம்

    அன்னாபிஷேகம் செய்யப்படுவதன் பின்னணியில் மற்றொரு புராண கதை:-

    தட்சனுக்கு ஐம்பது பெண்குழந்தைகள். அவர்களில் அசுபதி தொடங்கி ரேவதி வரையிலான இருபத்தேழு பெண்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து தந்தான். சந்திரன் கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரிடத்தும் மட்டும் மிகவும் பிரியமாக நடந்துகொண்டான். அதிலும் ரோகிணியிடம் மட்டும் அதிக நேசம் காட்டினான்.

    மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். தட்சன் வெகுண்டு சந்திரனை அழைத்துக் காரணம் கேட்டான். சந்திரன் செய்வதறியாது திகைக்கவே இன்றிலிருந்து உனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேயக்கடவது என்று சாபமிட்டான். சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயத் தொடங்கின.

    இதனால் சந்திரன் கைலாசம் சென்று பரமேஸ்வரனை வணங்கித் தஞ்சம் கேட்டான். பரமேஸ்வரனும் சந்திரனுக்கு அடைக்கலம் தந்து மூன்றாம் பிறைச்சந்திரனை தூக்கித்தன் தலைமேலே சூட்டிக் கொண்டான். சந்திரனை நோக்கி உன் தவறை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயவும், பின் வளரவும் அருளினோம். ஆயினும் ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று மட்டும் உன் பூரண பதினாறு கலைகளுடன் நீ மிளிர்வாய் என ஆசிகள் வழங்கினார்.

    அத்தகைய ஐப்பசி மாதப் பவுர்ணமி புனித நாளினில் தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அதனைக் கொண்டே ஈசனுக்கு அன்னம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றோம்.

    அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது என வேதங்கள் தெரிவிக்கின்றன.

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் அன்னாபிஷேகம்.
    • பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

    இந்த வார விசேஷங்கள்

    4-ந் தேதி (செவ்வாய்)

    * திருநெல்வேலி காந்திமதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.

    * திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

    * கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உற்சவம் ஆரம்பம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கப் பூமாலை சூடியருளல்.

    * சமநோக்கு நாள்.

    5-ந் தேதி (புதன்)

    * பவுர்ணமி.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் அன்னாபிஷேகம்.

    * தென்காசி உலகம்மை, சங்கரன்கோவில் கோமதியம்மன், தூத்துக்குடி பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை, பத்தமடை மீனாட்சியம்மன் தலங்களில் விழா தொடக்கம்.

    * தஞ்சை பெரியகோவில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    6-ந் தேதி (வியாழன்)

    * கார்த்திகை விரதம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    7-ந் தேதி (வெள்ளி)

    * திருநெல்வேலி காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    * மாயாவரம் கவுரிநாதர் கடைமுக உற்சவம்.

    * உத்திரமாயூரம் வள்ள லார் சன்னிதியில் பஞ்ச மூர்த்திகளுடன் உற்சவம் ஆரம்பம்.

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    8-ந் தேதி (சனி)

    * திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் உற்சவம் ஆரம்பம்.

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * வீரவநல்லூர் மரகதாம்பிகை, தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி அம்மன் தலங்களில் பவனி வரும் காட்சி.

    * சமநோக்கு நாள்.

    9-ந் தேதி (ஞாயிறு)

    * மாயாவரம் கவுரி மாயூர நாதர் நாற்காலி மஞ்சத்தில் பவனி.

    * திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு.

    * திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் சந்திர பிரபையில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    10-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் அன்ன வாகனத்தில் பவனி. உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-18 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தசி இரவு 9.42 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம் : ரேவதி காலை 11.42 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோவில்களில் அபிஷேகம்

    ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உற்சவம் ஆரம்பம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உண்மை

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-ஆதாயம்

    கடகம்-நிம்மதி

    சிம்மம்-யோகம்

    கன்னி-பணிவு

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- மாற்றம்

    மகரம்-உவகை

    கும்பம்-கடமை

    மீனம்-பயணம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வருமானம் உயரும்.

    ரிஷபம்

    வீண்பழிகள் அகலும் நாள். வீடுமாற்றங்கள் நன்மை தரும். வங்கிகளில் வைப்புநிதி உயரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் உதவி உண்டு.

    மிதுனம்

    பஞ்சாயத்துக்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடப்பிறந்தவர்களின் வருகை உண்டு.

    கடகம்

    முயற்சிகள் கைகூடும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு காரணமானவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

    சிம்மம்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். தனவரவில் தடைகள் உண்டு.

    கன்னி

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வந்த வரன்கள் திரும்பிச் செல்லலாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    துலாம்

    வருமானம் திருப்தி தரும் நாள். திட்டமிட்டுச் செயலாற்றிச் சிறப்புப் பெறுவீர்கள். நண்பர்களின் மத்தியில் தனி முத்திரை பதிப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

    விருச்சிகம்

    வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச்சந்திப்பீர்கள்.

    தனுசு

    பற்றாக்குறை அகலும் நாள். மன அமைதிக்காக ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதை நம்பியும் யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

    மகரம்

    வளர்ச்சி கூடும் நாள். வராத பாக்கிகள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். வீடுமாற்றங்கள் ஏற்படலாம்.

    கும்பம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

    மீனம்

    ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரியும் நாள். உறவினர் வழி ஒத்துழைப்பு மனதிற்கு இதமளிக்கும். குடும்பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளைச் சமாளிப்பீர்கள்.

    • நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது.
    • பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல-மகர விளக்கு சீசன் முதல் அடுத்த ஆண்டு (2026) மண்டல சீசன் வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் தேதி குறித்த விவரங்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.

    நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந்தேதி நடைபெறும். தொடர்ந்து 20-ந்தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

    பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டு 17-ந்தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும்.

    இவ்வாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    பூசல்கள் அகன்று புதிய பாதை புலப்படும் நாள். வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி ஏற்படும்.

    ரிஷபம்

    வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

    மிதுனம்

    மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். மற்றவர்கள் கடுமையாக நினைத்த வேலையொன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

    கடகம்

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையலாம். கல்யாண முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் மீது குறை கூறுவர். ஆரோக்கிய பாதிப்புகள் உண்டு.

    கன்னி

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள்.

    துலாம்

    கை நழுவி சென்ற சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

    விருச்சிகம்

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    தனுசு

    அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மகரம்

    சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை பெறவேண்டிய நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.

    கும்பம்

    மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடுவீர்கள். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரிடலாம்.

    மீனம்

    லாபகரமான நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பாராட்டும், புகழும் கூடும். 

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • சாலிசந்தை ஸ்ரீ கருணாயானந்த சுவாமிகள் குரு பூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-17 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திரயோதசி இரவு 11.49 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 1.02 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    பிரதோஷம், சுபமுகூர்த்த தினம், சிவன் கோவில்களில் சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி

    இன்று பிரதோஷம், சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை. சாலிசந்தை ஸ்ரீ கருணாயானந்த சுவாமிகள் குரு பூஜை.

    திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் காட்சியளருல். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவள்ளி அம்மாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-தாமதம்

    சிம்மம்-ஆக்கம்

    கன்னி-ஓய்வு

    துலாம்- உற்சாகம்

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- வரவு

    மகரம்-நன்மை

    கும்பம்-உழைப்பு

    மீனம்-புகழ்

    • கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
    • மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந் தேதி மாலையில் நடந்தது.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று மாலையில் சுவாமி குமர விடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்காக தெப்பக்குளம் அருகில் வந்து அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    அன்று இரவு 12 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    29-ந் தேதி (புதன்கிழமை) இரவு குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். 30, 31, மற்றும் நேற்று வரை 3 நாட்களிலும் தினமும் மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடைபெற்று வந்தது.

    திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள்

     

    கந்த சஷ்டி திருவிழா 12-ம் நாளான இன்று விழா நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    இன்று மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா நிறைவு நாள் மற்றும் ஞாயிறு விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்

    அவர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    ×