Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 ஜனவரி 2026: முருகன் கோவில்களில் பால் அபிஷேகம்

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 ஜனவரி 2026: முருகன் கோவில்களில் பால் அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு தை-6 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவிதியை பின்னிரவு 3.19 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : திருவோணம் பிற்பகல் 2.03 மணி வரை பிறகு அவிட்டம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் முருகன் கோவில்களில் பால் அபிஷேகம்

இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம். திருமொச்சியூர், சூரியநயினார் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் பால் அபிஷேகம்.

திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-இன்பம்

ரிஷபம்-ஜெயம்

மிதுனம்-மகிழ்ச்சி

கடகம்-ஆதரவு

சிம்மம்-அமைதி

கன்னி-ஆக்கம்

துலாம்- மகிழ்ச்சி

விருச்சிகம்-இரக்கம்

தனுசு- நற்செயல்

மகரம்-பொறுமை

கும்பம்-அன்பு

மீனம்-பயணம்

X

Maalai Malar
www.maalaimalar.com