என் மலர்
அமெரிக்கா
- ஆன்லைனில் இந்த கருவி எளிதில் கிடைப்பதால் இதனை பயன்படுத்தி ஏமாற்றி வந்துள்ளனர்.
- பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் வங்கியின் சொத்துகள் மற்றும் முதலீடு நிர்வாகப் பிரிவில் வேலை செய்துள்ளனர்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவனத்தை ஏமாற்றிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது ஒரு வங்கி நிறுவனம். அதுகுறித்து பார்ப்போம்...
அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வங்கி Wells Fargo. இந்த வங்கியின் நிறுவனத்தில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை அளித்திருந்தது. இந்த நிலையில், இந்த வங்கி அண்மையில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

Mouse Jiggling கருவி மூலம் கணினியின் திரையில் Mouse போல் செயல்படுவதால், பணியாளர் கணினியை பயன்படுத்தாவிட்டாலும் கணினியின் திரை off ஆகாது. ஆன்லைனில் இந்த கருவி எளிதில் கிடைப்பதால் இதனை பயன்படுத்தி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைபார்த்தார்களா அல்லது அலுவலகத்தில் பணியாற்றினார்களா என்ற விவரம் தெரியவில்லை. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் வங்கியின் சொத்துகள் மற்றும் முதலீடு நிர்வாகப் பிரிவில் வேலை செய்துள்ளனர்.
ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, Wells Fargo வங்கி ஊழியர்கள் பணித்தரத்தில் உயர்ந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதாகவும் எந்தவொரு ஒழுங்கீனத்தையும் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 43 ரன்கள் அடித்தார்.
- ஷம்சி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை நேபாளம் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 43 ரன்களும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களும் எடுத்தனர்.
நேபாளம் அணி தரப்பில் குஷால் புர்டல் 4 விக்கெட்டுகளும் தேபேந்திர சிங் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
116 என்ற இலக்கை துரத்திய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் குல்சன் ஜாவை டீ காக் ரன் அவுட் செய்தார். இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது.
நேபாளம் அணியை நிலை குலைய வைத்த தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளது.
- 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அமெரிக்கா பெற்றுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் அந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் 5 புள்ளிகளை பெற்ற அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளது. இதன்மூலம், தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது அமெரிக்கா.
இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அமெரிக்கா பெற்றுள்ளது.
அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
- இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம்.
- இப்போது சொன்னதை தவிர, இந்திய தேர்தல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன்.
வாஷிங்டன்:
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாத்யு மில்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம். வரலாற்றில் எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் நடந்ததை விட இதுதான் மிகப்பெரிய தேர்தல்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளும் பா.ஜனதா சார்பில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இடம்பெறவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மாத்யு மில்லர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
''இப்போது சொன்னதை தவிர, இந்திய தேர்தல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன். அது வாக்காளர் பிரச்சனை. அதுபற்றி இந்திய மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று அவர் கூறினார்.
- அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
- கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
அதனால், 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறியது.
பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் 5 புள்ளிகளை அமெரிக்கா பெற்றது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளே பெறும். இதனால் கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.
- ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா எனும் வாதம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
- ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்:
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.
வேற்று கிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது.
சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஏதேனும் ஒரு கோளில் ஏலியன்கள் இருப்பதாக ஒரு தரப்பினரும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏலியன்கள் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் வந்ததாகவும், சிலர் அதனைப் பார்த்ததாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிலர் கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் ஏலியன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மெக்சிகோவில் நடந்த இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்தது.
இதற்கிடையே, ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மனித வளம் பெருக்கும் திட்டம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏலியன்கள் பூமியில் மனிதர்களிடையே ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம் என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அந்த ஆய்வறிக்கையில் பூமியில் பாதாள சுரங்கம் போன்ற மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஏலியன்கள் ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம் என்றும், நிலவில் அல்லது மனிதர்களிடையே அவர்கள் நடமாட முடியும் என்றும், பூமிக்கு அவ்வப்போது வந்து செல்ல முடியும் என்றும், ஏலியன்கள் மனித உருவெடுத்து நம்மிடையே கூட வசித்து வரலாம் எனறு கூறும் ஆராய்ச்சியாளர்கள், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவிக்கின்றனர்.
- நண்பருக்கு லாட்டரியில் 100 டாலர் கிடைத்ததாக பதிவிட்டிருந்தார்.
- நானும் லாட்டரி வாங்க முடிவு செய்து, எனது அதிர்ஷ்ட எண்ணில் லாட்டரி வாங்கினேன்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் மெல்வின் புருக்ஸ். இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு வாங்கி இருந்தார். அதில் அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3.34 கோடி பரிசு விழுந்தது. இதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார்.
அதில், எனது நண்பரின் வலைதள பதிவு ஒன்றை பார்த்தேன். அதில் அவருக்கு லாட்டரியில் 100 டாலர் கிடைத்ததாக பதிவிட்டிருந்தார். எனவே நானும் லாட்டரி வாங்க முடிவு செய்து, எனது அதிர்ஷ்ட எண்ணில் லாட்டரி வாங்கினேன். அதில் எனக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.
இந்த பரிசு மூலம் தனது அடமானத்தை செலுத்த உள்ளதாகவும், எனது மனைவி மற்றும் மகள்களுக்கு உதவவும் பரிசு தொகையை பயன்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
- வடக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள டக்சன் பகுதியில் பெரிய அளவில் துப்பாக்கி சூடு நடந்தது.
- துப்பாக்கி சூடு எதற்காக நடந்தது, இதில் ஈடுபட்டவர்கள் யார், உயிரிழப்பு உள்ளதா என்பது பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்நாட்டின் வடக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள டக்சன் பகுதியில் பெரிய அளவில் துப்பாக்கி சூடு நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஆம்புலன்சுகள் மற்றும் இரண்டு மருத்துவ ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. இந்த துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தை பெரிய அளவிலான தாக்குதல் என போலீசார் தெரிவித்தனர். மேலும் விவரங்களை அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பதாக போலீசார் கூறினர். இதனால் துப்பாக்கி சூடு எதற்காக நடந்தது, இதில் ஈடுபட்டவர்கள் யார், உயிரிழப்பு உள்ளதா என்பது பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.
- டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 110 ரன்களை எடுத்தது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.
12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.
இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- நிறுவனங்களில் எலான் மஸ்க் ஒரு வினோதமான மற்றும் ஏற்கத்தகாத கலாசாரத்தை உருவாக்கியுள்ளார்.
- பாலியல் நகைச்சுவைகளும் மற்றும் பிற வகையான துன்புறுத்தல்களும் பொறுத்துக்கொள்ளப்பட்டன.
உலகின் முன்னணி கோடீஸ்வரரும் ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்ததாக அமெரிக்காவின் தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
தன்னுடைய நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸில் பணிபுரியும் சில பெண் ஊழியர்களுடன் எலான் மஸ்க் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், ஒரு பெண் ஊழியரிடம் தனது குழந்தைகளைப் பெற்றுத் தருமாறு பலமுறை கேட்டுக் கொண்டதாகவும் அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பயிற்சிக்காக வந்த பெண்ணிடமும் பாலியல் உறவு வைத்திருந்தாகவும் தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய இரு நிறுவனங்களிலும் எலான் மஸ்க் ஒரு வினோதமான மற்றும் ஏற்கத்தகாத கலாசாரத்தை உருவாக்கியுள்ளார். அந்த இரு நிறுவனங்களிலும் பாலியல் ரீதியான நகைச்சுவைகள் சுலபமாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தன. பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டது. அங்கு பாலியல் நகைச்சுவைகளும் மற்றும் பிற வகையான துன்புறுத்தல்களும் பொறுத்துக்கொள்ளப்பட்டன. புகார் அளிக்கும் பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என சில பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2013-ம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸில் இருந்து ராஜினாமா செய்த பெண் ஒருவர் "எலான் மஸ்க் தன்னிடம், உலக மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அதிக ஐ.கியூ. உள்ள குழந்தைகள் வேண்டும். எனவே, தன்னுடன் உறவு வைத்துக்கொண்டு தனது குழந்தைகளைப் பெறுமாறு பலமுறை கேட்டுக் கொண்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண், பாலியல் உறவு வைத்துக் கொள்ள, தனக்கு ஒரு குதிரையை வாங்கித் தர எலான் முன்வந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸில் பணிபுரிந்த மற்றொரு பெண், எலான் மஸ்க் இரவில் தனது வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைப்புகள் விடுத்ததாகக் கூறி, இருவருக்கும் இடையிலான உரையாடல் பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.
உயர் அதிகாரிகள் உடனான போர்டு மீட்டிங் போது எல்எஸ்டி, கோகைன், எக்ஸ்டசி போன்ற போதைப் பொருள்களைத் எலான் மஸ்க் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.
இந்நிலையில், இந்தியா, அமெரிக்கா அணிகள் இன்று நியூயார்க்கில் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
- 984 அடி நீளம் கொண்ட கப்பல் பாலத்தின் மீது மோதியதால் பாலம் சரிந்தது.
- பாலத்தின் இரும்பு மற்றும் கான்கிரீட் குப்பைகளை அகற்றும் பணி தற்போது முடிவடைந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் ஆற்றின் குறுக்கே சுமார் 2.6 கி.மீட்டர் தூரத்திற்கு மிகப் பிரமாண்ட பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலத்தை கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி 984 அடி நீளம் கொண்ட ராட்சத சரக்கு கப்பல் கடந்து செல்லும்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாலத்தின் ஒரு பகுதியில் இடித்தது. இதனால் பாலத்தின் பெரும்பகுதி (சுமார் 700 அடி) சீட்டுக்கட்டு போல் சரிந்தது.
இதனால் அமெரிக்காவின் முக்கியமான சரக்கு துறைமுகமாக விளங்கிய பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் செல்வது தடைபட்டது. இந்த பாலத்தின் கம்பிகள் மற்றும் கான்கிரீட் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி தொடர்நது நடைபெற்று வந்தது. மேலும் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடர பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 11 வாரங்களுக்குப் பிறகு இன்று பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல்கள் அந்த வழியாக செல்லும் வகையில் பாதை மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பாலம் விழுந்ததால் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பால்டிமோர் மாகாணத்தில் இழப்பை ஏற்படுத்தியதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
2023-ல் பால்டிமோர் சரக்குகளை கையாண்டதில் அமெரிக்காவின் முதன்மை துறைமுகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது. பாலம் விழுந்ததில் 6 கட்டுமான தொழிலாளர்கள் பலியானார்கள். 50 ஆயிரம் டன் இரும்பு கம்பிகள் மற்றும் கான்கிரீட் அகற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இன்ஜினீயர்கள் மற்றும் வல்லுனர்கள் இந்த பணியில் இரவு பகலுமாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.






