என் மலர்
பாகிஸ்தான்
- சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளை வளர்ப்பு சிங்கம் ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு கட்டடத்தின் சுவர் மீது ஏறி வீதியில் குதித்த சிங்கம் அவ்வழியே வந்து கொண்டிருந்த பெண் மீது பாய்ந்து தாக்கியது பதிவாகியுள்ளது. தனது 2 குழந்தைகளையும் இந்த சிங்கம் தாக்கியதாக தந்தை ஒருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாகூரில் மக்களைத் தாக்கிய 11 மாத சிங்கம், போலீசாரால் கைப்பற்றப்பட்டு வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2023 ஆம் ஆண்டிடுக்குப்பின் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியுள்ளது.
உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் (cloud-based) போன்ற காரணத்திற்காக இந்த நவட்டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
- 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து.
- 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. குறைந்தது 25 பேராவது சிக்கியிருக்கலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்த மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது.
- ராவல்பிண்டியின் சக்லாலாவில் அமைந்துள்ள நூர் கான், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமாகும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து ஒரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது.
இந்நிலையில் சமீபத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் ராணா சனாவுல்லா இந்த தாக்குதல்கள் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் போது தனது நாடு அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குச் சென்றதாக சனாவுல்லா ஒப்புக்கொண்டார்.
இந்தியா ஏவிய பிரம்மோஸ் ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்தியிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க தங்கள் ராணுவத்திற்கு 30 முதல் 45 வினாடிகள் மட்டுமே இருந்ததாகவும், அதுதான் அவர்களின் தலைவிதியை தீர்மானித்ததாகவும் அவர் பாகிஸ்தான் செய்தி சேனலிடம் கூறினார்.
"இந்தியா நூர் கான் விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணையை ஏவியபோது, அதை பகுப்பாய்வு செய்ய நமது ராணுவத்திற்கு 30-45 வினாடிகள் மட்டுமே இருந்தன. இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.
அவர்கள் நம் தரப்பை தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அது உலகளாவிய அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்திருக்கும்" என்று சனாவுல்லா தெரிவித்தார்.
ராவல்பிண்டியின் சக்லாலாவில் அமைந்துள்ள நூர் கான், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமாகும்.
- குண்டு வெடிப்பில் அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மேளா மைதானத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அம்மாகாண முதல் மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குண்டு வெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
- காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்துகிறது.
- காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும்
ஜம்மு காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதம் ஒரு சட்டபூர்வமான போராட்டம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் உள்ள கடற்படை அகாடமியில் நடந்த விழாவில் பேசிய முனீர் "இந்தியா பயங்கரவாதம் என்று அழைப்பது உண்மையில் ஒரு சட்டபூர்வமான சுதந்திரப் போராட்டமாகும்.
சர்வதேச சட்டம் அதை அங்கீகரிக்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் இந்த இயக்கத்தை மேலும் முக்கியத்துவப்படுத்த மட்டுமே உதவும்" என்று கூறினார்.
காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்றும் முனீர் கூறினார். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்ப்பதன் மூலம் பாகிஸ்தான் தன்னை நிரூபித்துள்ளதாகவும் முனீர் தனது உரையில் கூறினார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 2019 பாலகோட் தாக்குதலையும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூரையும் முனீர் குறிப்பிட்டார்.
- பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- கைபர் பக்துன்க்வா, பஞ்சாப், சிந்து பகுதிகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.
பருவமழைக்கு முந்தைய மழை கடந்த 26ஆம் தேதியில் இருந்து பெய்து வரும் நிலையில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு மாகாணமாக கைபர் பக்துன்க்வா மிகவும் மோகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் 13 பேரும், சிந்துவில் ஏழு பேரும், பலுசிஸ்தான் மாகாணத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாபில் 39 பேர் காயம் அடைந்தனர். சிந்துவில் 16 பேரும், கைபர் பக்துன்க்வாவில் 11 பேரும், பலுசிஸ்தானில் 2 பேரும் காயம் அடைந்தனர்.
50 வீடுகளில் முற்றிலும் சேதடைந்துள்ளனர். 39 வீடுகள் லேசான சேதம் அடைந்துள்ளது.
- பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு அவமதிப்பிற்குரியது என்று கூறி நிராகரித்தார்.
- ஆயுதக் குழுக்களால் சுமார் 290 பேர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வட வசிரிஸ்தான் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தது.
வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனம் ராணுவ கான்வாய் மீது மோதியதில் 16 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இரண்டு வீடுகளின் கூரைகளும் இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபானின் ஒரு பிரிவான ஹபீஸ் குல் பகதூர் ஆயுதக் குழுவின் தற்கொலைப்படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியா ஆதரவளித்த பயங்கரவாதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் ராணுவம் குற்றஞ்சாட்டியது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு அவமதிப்பிற்குரியது என்று கூறி நிராகரித்தார்.
2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் வன்முறை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய இரு மாகாணங்களிலும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களால் சுமார் 290 பேர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
- பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
- பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்துடன் புகுந்து அதனை வெடிக்கச் செய்தான்.
இதில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 10 ராணுவ வீரர்களும், 10 அப்பாவி மக்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் அங்கிருந்த 6 வீடுகள் சேதமடைந்தன. இதில் 6 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
- நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது.
- செயற்கைக்கோள் படங்கள் மற்றும் புலனாய்வு தகவல்களை வழங்கியுள்ளது
இந்தியா குறித்த தகவல்களை சீனா தங்களுக்கு வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவுடனான இராணுவ மோதலின்போது போது சீனா தங்களுடன் ஒத்துழைத்ததாகவும், இந்தியாவின் முக்கியமான உளவுத்துறை தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
பதற்றமான காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் குறித்த தகவல்களை சீனா தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.
"சீனா செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அச்சுறுத்தலின் அளவு குறித்த தகவல்களை வழங்கியது. பரஸ்பர அச்சுறுத்தல் இருக்கும்போது, நாடுகளுக்கு இடையே தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது. மூலோபாய ரீதியாக நெருக்கமாக இருக்கும் இரண்டு நாடுகள் உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வது இயல்பானது" என்று ஆசிப் கூறினார்.
- ஸ்வாட் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியாகினர்.
- சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதி கோடை வாசஸ்தலமாகத் திகழ்கிறது.
எனவே அண்டை மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு சுற்றுலாவுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் அங்குள்ள ஸ்வாட் ஆற்றில் சுற்றுலா பயணிகள் பலர் குளித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக அங்கு தொடர் மழை பெய்து வருகிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மழை குறைவாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால் எதிர்பார்த்ததைவிட மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஸ்வாட் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில் 18 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். விசாரணையில், பலியான அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சுற்றுலா சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர்களது மறைவுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். வெள்ளப் பெருக்கில் மாயமானவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






