என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது.
    • கிடைக்கும் வருவாயை பிரித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு.

    இந்திய பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் மற்றும் சீனா செல்கிறார். ஜப்பானில் நடைபெறும் இந்தியா-ஜப்பான் இருநாட்டின் 15ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ரியோசெய் அகாசவா, இன்று அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க, ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது. அதன்மூலம் கிடைக்கும் வருவாயை பிரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த செல்ல இருந்தார்.

    பேச்சுவார்த்தை முடிவில் 550 பில்லியன் டாலர் முதலீடு திட்டத்தை முறையாக உறுதிப்படுத்த இருந்தது.

    அமெரிக்க தரப்புடன் ஒருங்கிணைப்பின் போது நிர்வாக மட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    • இரண்டாம் உலகப் போருக்கு முன்பு மருத்துவப் பட்டம் பெற்றார்.
    • ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய உலகின் மிக வயதான நபர் ஆனார்.

    ஜப்பானின் மிக வயதான பெண்மணியான மியோகோ ஹிரோயாசு 114 வயதில் இறந்த நிலையில் ஓய்வுபெற்ற மருத்துவருமான ஷிகேகோ ககாவா மிக வயதான பெண்மணியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 114.

    1911 இல் டோக்கியோவில் பிறந்த அவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், போரின் போது ஒசாகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக தனது பணியை தொடங்கினார்.

    பின்னர் அவர் சொந்த மருத்துவமனையைத் திறந்தார். அங்கு மகப்பேறு, மகளிர் மருத்துவ நிபுணராகப் பணியாற்றினார். அவர் 86 வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    டோக்கியோவில் நடைபெற்ற 2021 ஒலிம்பிக்கிற்கான ஜோதியை ஏந்திச் சென்ற ஷிகேகோ ககாவா, ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய உலகின் மிக வயதான நபர் ஆனார்.

    நீண்ட காலம் வாழ அவர்களுக்கு எந்த சிறப்பு வழக்கமோ அல்லது உணவு முறையோ இல்லை என்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தனர்.

    தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுத்துகொள்வதாகவும் வேளை உணவருத்துவதாகவும் தெரிவித்தனர்.

    ஷிகேகோ தனது இறுதி காலத்தை செய்தித்தாள்கள் படிப்பதிலும், சீட்டாட்டம் விளையாடுவதிலும், வரைவதிலும் கழிக்கிறார். 

    • ரஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
    • ரஷியாவின் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.

    ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.

    இதனை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். 

    • இரு அவைகளிலும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனி பெரும்பான்மையை இழந்தது.
    • லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறையாகும்.

    ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. இதனால் இரு அவைகளிலும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனி பெரும்பான்மையை இழந்தது.

    ஜப்பானில் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    நாடாளுமன்ற மேல்சபையில் பெரும்பான்மை பெற 125 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஏற்கனவே 75 இடங்கள் இருந்தன. எனவே இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற மேலும் 50 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 47 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெறமுடிந்தது. இதனால் ஆளுங்கட்சி இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மையை இழந்தது.

    முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கீழ்சபை தேர்தலிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியடைந்தது.

    1955-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறையாகும். இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று ஷிகெரு இஷிபா தெரிவித்துள்ளார்.

    • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கொடாய் நரோகா உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய நரோகா 21-19, 21-11 என்ற நேர் செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் வாங் சாங்-லியாங் ஜோடியிடம் 22-24, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சீனா வீராங்கனை வாங் ஜியீயிடம் 21-13, 11-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சக நாட்டு வீராங்கனை ராஷ்மிகா ராம்ராஜ் உடன் மோதினார்.

    முதல் செட்டை 21-15 என அனுபமா வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 21-18 என ராஷ்மிகா கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-18 என அனுபமா உபாத்யாயா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2வது சுற்றில் அனுபமா, சீனா வீராங்கனை வாங் ஜியீயை எதிர்கொள்கிறார்.

    • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் இந்திய ஆண்கள் ஜோடி அபார வெற்றி பெற்றது.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் காங் மின் யுக்-கி டோங் ஜு ஜோடியுடன் மோதியது.

    ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-18, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் வாங் ஜெங் ஸின்னுடன் மோதினார்.

    ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்ஷயா சென் 21-11, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பானின் பாபா வங்கா என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகள் பரவலாக பேசப்பட்டது.

    எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறும் தீர்க்க தரிசிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்களில் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவும் ஒருவர்.

    இவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பற்றி கூறியது பலமுறை உண்மையாகி உள்ளது. இந்நிலையில் ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைய தொடங்கினார். அவர் 1980 முதல் தெளிவான கனவுகளை வரைய தொடங்கிய நிலையில் இது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்ததாக கூறப்படுகிறது. 1991-ம் ஆண்டு பிரெட்டி மெர்குரியின் மரணம், 1995-ம் ஆண்டு கோபே நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி, 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறுகிறார்கள்.

    அதன்பிறகே அவர் முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக அங்கீகரிக்கப்பட்டதோடு அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் வரைந்த மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த ஆண்டு (2025)-ம் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார்.

    இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார்.

    ரியோ டட்சுகியின் இந்த கணிப்பு காரணமாக ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஜப்பானுக்கான விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரியோ டட்சுகியின் கணிப்பு காரணமாக தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

    இதனால் இன்று மீண்டும் சுனாமி ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஜப்பானியர்கள் உள்ளிட்ட ஆசிய மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக ஜப்பானின் டொகாரோ தீவுகளில் ஜூலை 3ஆம் தேதி 5.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகிவிடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது

    • டோகாரா தீவில் கடந்த 2 வாரத்தில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகின.
    • மிகப் பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாகப் பதிவானது.

    டோக்கியோ:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.

    அதன்படி, அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப் பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    அதேசமயம், எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

    இதற்காக, டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.

    • 20 நிமிடங்களில் 3,000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கி சென்றது.
    • பலர் இன்சூரன்ஸ் விவரங்களையும் வங்கிப் பின் நம்பர்களையும் கூட எழுதி வைத்துள்ளனர்.

    ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் JL8696 (போயிங் 737), ஜூன் 30 அன்று ஷாங்காயில் இருந்து டோக்கியோவிற்குப் 191 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 26,000 அடி கீழே இறங்கியது.

    20 நிமிடங்களில் 3,000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கிச் சென்றதால், ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் தானாக விழுந்தன. பயணிகளும் ஊழியர்களும் பீதியடைந்தனர்.

    பயணிகள் சிலர் உயில் எழுதத் தொடங்கி, அன்பானவர்களுக்கு கடைசி செய்திகளை அனுப்பியுள்ளனர். பலர் இன்சூரன்ஸ் விவரங்களையும் வங்கிப் பின் நம்பர்களையும் கூட எழுதி வைத்துள்ளனர்.

    பதற்றமான சூழ்நிலையிலும், விமானம் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    விமானத்தின் அழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் பயணிகளுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார்.
    • விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

    தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    2017-ல் நடந்த இந்த கொடூர சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம், 2020-ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

    தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்வார்.

    இறந்தவர்களில் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவர். பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பின்னரே அவர் அவர்களைக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார்.

    2017ல் போலீசார் ஷிரைஷியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியபோது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    வீட்டை சோதனை செய்தபோது, குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது உடல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

    ஜப்பானில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகிலேயே அதிக தற்கொலை விகிதங்களில் ஜப்பான் ஒன்று. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.

    ×