என் மலர்tooltip icon

    சீனா

    • 1375 ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் போது இந்த கோபுரம் கட்டப்பட்டது.
    • 2017 ஆண்டில் இந்த கோபுரத்தின் கூரை ஓடுகள் சேதமடைந்தன.

    சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள 650 ஆண்டுகள் பழமையான ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்த சமயத்தில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படவில்லை.

    கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    1375 ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் போது இந்த கோபுரம் கட்டப்பட்டது. 2017 ஆண்டில் இந்த கோபுரத்தின் கூரை ஓடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரோபோக்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    • குத்துச்சண்டை போட்டிக்காக தீவிர பயிற்சியில் மனித ரோபோக்கள் ஈடுபட்டு வருகின்றன.

    சீனாவின் ஹாங்சூ (Hangzhou) நகரில் மனித ரோபோக்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்த குத்துச்சண்டை போட்டிக்காக தீவிர பயிற்சியில் மனித ரோபோக்கள் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பயிற்சியில் ஈடுபடும் மனித ரோபோக்களின் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    • சீனாவில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

    பீஜிங்:

    சீனாவில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    • பிரேசில், கொலம்பியா மற்றும் சிலி நாட்டுத் தலைவர்களுடன் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார்.
    • சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

    மற்றவர்களை மிரட்டி பணியவைக்க நினைத்தால் தனிமைப்படுத்தப்படுவீர்கள் - அமெரிக்காவுக்கு சீன அதிபர் எச்சரிக்கை செலுத்தும் போக்கைக் காட்டும் நாடுகள் இறுதியில் தனிமையில் விடப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    பிரேசில், கொலம்பியா மற்றும் சிலி நாட்டுத் தலைவர்களுடன் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜி ஜின்பிங், வர்த்தகப் போர்கள் யாருக்கும் பயனளிக்காது என்றும், வெற்றியாளர்கள் யாரும் இல்லை என்றும் கூறினார். உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து, ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் உலக அமைதியும் ஸ்திரத்தன்மையும் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே டிரம்ப் சீனா மீது வரிவிதிப்பு மூலம் தொடங்கிய வர்த்தகப்போரை முடிவுக்குக் கொணடுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தை முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

    இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது. அதன்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது உரையில் அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்துள்ளார். 

    • இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • பெரும்பாலான உலக நாடுகள், இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள மாநிலத்தின் முக்கிய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடத்தும்போது இந்தியா அவற்றை வெற்றிகரகமாக முறியடிக்கிறது. மேலும், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் டிரோன் தாக்குதல் நடத்துகிறது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான சீனா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைதி, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என மிகவும் கடுமையாக சீனா வலியுறுத்தியுள்ளது.

    இந்தியாவை விட சீனா பாகிஸ்தானுக்கு மிகவும் நட்பு நாடாகும். இருந்தபோதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் தாங்கள் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது.

    இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டபோது, வர்த்தம் அளிப்பதாக சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில், எங்களுக்கு தெளிவான ஆதரவு தர சீனா முன் வந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

    • சீனாவின் நிலைப்பாட்டை நேற்று இருநாடுகளின் தரப்பிலும் தெரிவித்து விட்டோம்.
    • அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் நிதானம், அமைதி, பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

    சீனாவின் நிலைப்பாட்டை நேற்று இருநாடுகளின் தரப்பிலும் தெரிவித்து விட்டோம். அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியுள்ளார்.

    முன்னதாக, இந்தியா- பாகிஸ்தான் மோதலில் நாங்கள் தலையிட மாட்டோம். இருநாடுகளுக்கிடையே இது பிராந்திய போராகவோ, அணுஆயுத போராகவோ மாற வேண்டாம் என எதிர்பார்க்கிறோம். அதிகபட்சமாக போர் பதற்றத்தை குறைக்க முயற்சி எடுக்க முடியும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    • சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது,

    "இந்தியாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் வருந்தத்தக்கது, இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும்.

    சீனா எல்லா வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நலனுக்காக இரு தரப்பினரும் செயல்படவும், அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார்.

    • வரி விதிப்பு தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது.
    • பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

    பீஜிங்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றதும் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். ஏப்ரல் 2-ம் தேதி இந்த பரஸ்பர வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தது.

    ஒவ்வொரு முறை அமெரிக்கா சீனா மீது வரி விதித்த போதும், பதிலடியாக, அமெரிக்கா மீது சீனா வரி விதித்தது. தற்போது சீனாவின் மீதான அமெரிக்க வரி 245 சதவீதத்தில் வந்து நின்றது.

    மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், 90 நாட்கள் பரஸ்பர வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார்.

    இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. 90 நாள் கெடு ஜூலை 9-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது என்றும், அது குறித்து பரிசீலித்து வருகிறோம் என சீனா தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் பலமுறை தொடர்புடைய தரப்பினர் மூலம் சீனாவிற்கு செய்திகளைத் தெரிவிக்க முயன்று வருவதால், சீனா மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறது. வரி விதிப்பு பிரச்சனைகள் குறித்து பீஜிங்குடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.

    சீன அரசு செய்தி தொடர்பாளர், வரி மற்றும் வர்த்தகப் போர்கள் அமெரிக்காவால் ஒருதலைப்பட்சமாகத் தொடங்கப்பட்டன. அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். தவறான நடைமுறைகளை சரிசெய்தல், ஒருதலைபட்ச வரிகளை நீக்குதல் போன்ற பிரச்சனைகளில் தயாரிப்புகளைச் செய்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
    • இந்த மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்தாகும்.

    சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சியாங் நகரில் உள்ள உணவகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

    இன்று மதியம் 12.25 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.

    தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மீட்புப்பணிகளுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த உணவக தீ விபத்து, இந்த மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்து. முன்னதாக, வடக்கு சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

    • சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை போனில் அழைத்தார் என்று தெரிவித்திருந்தார்.
    • பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது, தவறாக வழிநடத்தும் செயல்.

    வரி விதிப்புகளுக்குப் பிறகு, அதைப் பற்றி பேச சீன அதிபர் தன்னை அழைத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீனா மறுத்துள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். சீனா இதற்கு பதிலடியாக எதிர் வரிவிதிப்பை அறிவித்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்துக்கொண்ட நிலையில் சீன இறக்குமதிகளுக்கான வரி 245 ஆக அதிகரிக்கப்பட்டது.

    இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இரு நாடுகளுக்கிடையேயும் வர்த்தக போர் வலுவடைந்து வரும் சூழ்நிலையில், சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை போனில் அழைத்தார் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீன வர்த்தக அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும் வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த ஆலோசனையோ, பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என்று அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

    பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது, தவறாக வழிநடத்தும் செயல் என்றும், வரிப் போரை தொடங்கியது அமெரிக்கா தான், அதை உண்மையிலேயே சரி செய்ய விரும்பினால், முதலில் அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும்.

    அடுத்தவர்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, சீனாவிற்கு விதித்த வரிகள் அனைத்தையும் முழுமையாக நீக்க வேண்டும் என்றும் சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது. 

    • சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் தொடர் சீனாவில் இன்று தொடங்குகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-திரிசா ஜோடி காயம் காரணமாக விலகியது.

    பீஜிங்:

    பிரபல பேட்மிண்டன் தொடரான சுதிர்மன் கோப்பை தொடர் (கலப்பு அணிகள்) சீனாவில் இன்று தொடங்குகிறது. இதுவரை நடந்த 18 தொடரில் சீனா (13), தென் கொரியா (4), இந்தோனேஷியா (1) என 3 அணிகளே கோப்பை வென்றன.

    இந்திய அணி ஒருமுறைகூட டாப் 3-ல் இடம்பிடித்தது இல்லை.

    இந்த முறை 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி டி பிரிவில் டென்மார்க், இங்கிலாந்து, இந்தோனேஷியா என வலிமையான அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

    லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 போட்டி நடக்கும். புள்ளிப்பட்டியலில் டாப் 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணியில் சிந்து, லக்ஷயா சென், பிரனாய் என அனுபவ நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் நட்சத்திர ஜோடியான சாத்விக்-சிராக் ஜோடி காயம் காரணமாக விலகியது.

    இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவிலும் காயத்ரி கோபிசந்த்-திரிசா ஜோடி காயம் காரணமாக விலகியுள்ளது.

    • தங்கம் விற்க கொண்டு சென்றால் பல மணிநேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டி உள்ளது.
    • விண்ணப்பம், கையொப்பம் என்று தேவையும் இல்லை.

    தங்கம் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்தாலும் அதனை வாங்கும் ஆர்வம் மக்களிடையே நிலவுகிறது. ஏன் என்றால் அவசர தேவைக்கு தங்கத்தை வைத்தோ, விற்றோ பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது நடுத்தர மக்களின் எண்ணம். சரி, தங்கம் விற்க கொண்டு சென்றால் பல மணிநேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டி உள்ளது. இதனால் சில நேரங்களில் மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரும். இதனை சரி செய்யும் வகையில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம்.

    ஆம், தங்க வர்த்தகத்தில் உயர் தொழில்நுட்ப திருப்பமாக, ஷாங்காயில் உள்ள ஒரு மால் பயனர்கள் தங்கள் தங்க நகைகளை விற்று 30 நிமிடங்களுக்குள் பணம் பெற அனுமதிக்கும் ஒரு ATM-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பம், கையொப்பம் என்று தேவையும் இல்லை.

    சீனாவின் கிங்ஹுட் குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம் தங்கப் பொருட்களை பகுப்பாய்வு செய்து, உருக்கி, எடைபோட்டு, அவற்றின் தூய்மையை தீர்மானித்து, அதற்குச் சமமான தொகையை நேரடியாக விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூன்று கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கப் பொருட்களை குறைந்தபட்சம் 50 சதவீத தூய்மை நிலையுடன் ஏற்றுக்கொள்கிறது.

    40 கிராம் தங்க நெக்லஸ் ஒரு கிராமுக்கு 785 யுவான் (தோராயமாக ரூ. 9,200) விலை போனது. இதனால் அரை மணி நேரத்தில் 36,000 யுவான்களுக்கு மேல் (சுமார் ரூ. 4.2 லட்சம்) பணம் ஒருவருக்கு கிடைத்தது.



    ×