என் மலர்
பிரேசில்
- ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனியின் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியோ டி ஜெனிரோ:
ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ காம்சேனா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 3-6, 4-6 என இழந்தார். இதன்மூலம் ரியோ ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- பிரிக்ஸ் அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
- பிரிக்ஸில் இணைய சவுதி அரேபியாவுக்கு அழைப்பு.
அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.
மேலும் உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது. பிறகு, 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது.
கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்தது. சவுதி அரேபியாவும் இந்த அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
- ஆடை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
- அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார்.
சார்ஜ் போடும்போது சூடாகி செல்போன்கள் வெடிப்பதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் எவ்வித பயன்பாடும் இன்றி சாதாரணமாக நம் ஆடையில் வைக்கப்பட்டிருக்கும்போது செல்போன் வெடிப்பது என்பது கொஞ்சம் அரிதாக நடக்கும் நிகழ்வு. அத்தகைய நிகழ்வு ஒன்று பிரேசிலில் நடந்துள்ளது.
காய்கறி சந்தைக்கு இளம்பெண் ஒருவர் தனது தோழருடன் சென்றிருந்தார். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பேண்ட்டின் பின்பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தொடர்ந்து அவருடைய ஆடை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
இதனால் செய்தறியாமல் அவர் அங்கும் இங்கும் ஓடியபடி அலறி துடித்தார். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இதுதொடர்பான வீடியோ பதிவாகி இருந்தநிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன.
- வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள டிராஜாகாஸ் என அழைக்கப்படும் மஞ்சள் புள்ளி ஆமைகள் அருகி வரும் உயிரினமாக உள்ளது. குறிப்பாக கடற்கரையில் அவையிடும் முட்டையை மற்ற விலங்குகள், பறவை உள்ளிட்ட உயிரினங்கள் நாசப்படுத்தி விடுகின்றன. எனவே அதனை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில் அங்குள்ள இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன. அவற்றை வனத்துறை போலீசார் பத்திரமாக மீட்டு ஆற்றில் கொண்டு விட்டனர். வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிரேசிலா:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். இந்நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென பிசியான சாலையில் மோதியது.
இந்த விபத்தில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
- வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பிரேசில் நாட்டின் தெற்கே சாவோ பவுலோ நகரில் கடுமையான இடி- மின்னலுடன் மழை பெய்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களிலேயே பெய்தது.
அப்போது அங்குள்ள குவாருலோஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து பெர்ன்ஹார்டு வார் கூறுகையில், பெரிய புயல் வீசியது. இதனால் விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது தான் விமானத்தின் வால் பகுதியில் கடுமையாக மின்னல் தாக்கியதை வீடியோ எடுத்தேன் என்றார்.
- உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
- மனித உரிமைகளை மீறும் செயல்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் அதிபர் டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது. நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல் என்று பிரேசில் தெரிவித்து இருக்கிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கி வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த 88 பேர் விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர். மேலும், விமானத்தில் குளிரூட்டி இயக்கப்படவில்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்டவர்களில் சிலர் குற்றம்சாட்டினர்.
மேலும், சிலர் விமானத்தினுள் அதிக வெப்பம் காரணமாக சிலருக்கு மயங்கினர் என்றும், பயணிகள் கழிவறையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்ட பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பயணிகளை மிக மோசமாக நடத்தியது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அப்பகுதி முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
- அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயிருந்தார்.
தென்கிழக்கு பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, இபடிங்கா நகரில் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 80 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால், அப்பகுதி முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
நிலச்சரிவால் அழிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் எட்டு வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டான். இதுதவிர, அருகிலுள்ள நகரமான சாண்டானா டோ பரைசோவில் மற்றொரு உடலையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நகரின் பெத்தானியா பகுதியில் உள்ள மலையின் ஓரத்தில் உள்ள ஒரு தெருவில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவு அதன் பாதையில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயிருந்தார்.
அவரின் நிலைமை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இருப்பினும் அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீட்கப்பட்டனர்.
- அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தோனேசியா.
- 2009 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இந்தோனேசியா இணைந்ததாக பிரேசில் அறிவித்து இருக்கிறது. தெற்கு ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருக்கிறது.
இது தொடர்பாக பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு ஆசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு உலகளாவிய நிர்வாகத்தின் நிறுவனங்களை சீர்திருத்தும் விருப்பத்தை மற்ற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், உலகளாவிய தெற்கிற்குள் ஒத்துழைப்பை வழங்கவும் சாதகமாக பங்களிக்கிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை ஏற்றுள்ள பிரேசில், இந்தோனேசியாவை அமைப்பில் இணைப்பது தொடர்பான முயற்சிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கியதாக தெரிவித்தது.
2009 ஆம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முழு உறுப்பினர்களாக இணைந்தன.
- கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்தது.
- கீழே விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்ததில் 10 பேரும் பலியாகினர்.
பிரேசிலா:
பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர். சாலொ பாலோ மாகாணத்தில் அமைந்துள்ளது சுற்றுலா நகரமான கிராமடோ.
இந்நிலையில், கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்தது.
கீழே விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்த விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். அதேவேளை வீட்டில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டயர் திடீரென வெடித்ததால் பயணிகள் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.
- எதிரே வந்த லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலா:
பிரேசில் நாட்டின் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து நேற்று மாலை சால் பாலோ நகர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 45 பயணிகள் பயணம் செய்தனர்.
தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸின் டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது பஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் 38 பேர் பலியானது குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் மட்டும் சாலை விபத்து தொடர்பான சம்பவங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாரி மீது பயணிகள் பஸ் மோதியதில் 38 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
பிரேசிலியா:
பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி அதிபரான ஜெயிர் போல்சனரோவை தோற்கடித்து, இடதுசாரி வேட்பாளரான லுலா டி சில்வா வெற்றிப் பெற்றார். இதையடுத்து, அவரது தலைமையில் புதிய அரசு அமைந்தது.
இந்த நிலையில் 2022-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் அதிபர் லுலா டி சில்வா தலைமையிலான அரசை கவிழ்க்க பெரும் சதி நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது. ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் டி சில்வா, துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோரை படுகொலை செய்யவும் சதி திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






