என் மலர்
பிரேசில்
- ஹாட் ஏர் பலூனில் 21 பேர் பறந்து கொண்டிருந்தனர்.
- திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக ராட்சத பலூன் (hot-air balloon) மூலம் மக்கள் ஆகாயத்தில் பறப்பார்கள். பிரையா கிராண்டு என்பது இந்த ராட்சத பலூன் பறப்பதற்கு ஏற்ற இடம் திகழ்ந்து வருகிறது.
இன்று சான்டா கட்டேரினா மாநிலத்தில் ராட்சத பலூனில் 29 பேர் பறந்து கொண்டிருந்தனர். வானில் பறந்து கொண்டிருக்கும்போது, பலூன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பலூன் முழுவதுமாக எரிந்து, மக்கள் நின்று கொண்டிருக்கும் தொட்டி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை இதுபோன்ற ராட்சத பலூன் விழுந்ததில் 27 வயது பெண் ஒரவர் உயிரிழந்தார். 11 பேர் காயம் அடைந்தனர்.
- சீனாவின் மின்சார காரான ‘பைட்’ நிறுவன உற்பத்தி ஆலை பிரேசிலில் அமைந்துள்ளது.
- இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
பிரேசிலியா:
சீனாவின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான 'பைட்' நிறுவன உற்பத்தி ஆலை பிரேசில் நாட்டின் சாவ் பவுலோ நகரில் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் சீன அதிகாரிகள் மட்டுமே பதவி வகித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சீன கார் நிறுவனத்தின் மீது தொழிலாளர்கள் நலச்சங்கம் பிரேசிலியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் சீன நிறுவனம் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், குறிப்பிட்ட பணி நேரத்தைவிட அதிக நேரம் பணிபுரிய கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சீன கார் நிறுவன வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரிக்க உள்ளது. அந்த நிறுவனத்தை நாட்டில் இருந்து முழுவதுமாக அகற்ற அரசு வக்கீல்கள் நீதிபதிகளைக் கேட்டு கொண்டுள்ளனர்.
- பிரேசிலில் சமூக பாதுகாப்புத் துறை மந்திரியாக உள்ளவர் கார்லோஸ் லூபி.
- ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து சுமார் ரூ.9,000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பிரேசிலியா:
பிரேசிலில் அதிபர் லுலா டா சில்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில் சமூக பாதுகாப்புத் துறை மந்திரியாக உள்ளவர் கார்லோஸ் லூபி.
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து சுமார் ரூ.9,000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, கார்லோஸ் வீட்டில் நுழைந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சொகுசு கார், நகை உள்பட ரூ.1,500 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கார்லோஸ் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்தன.
இந்நிலையில், கார்லோஸ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.
- எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிக வயதான பெண்ணாக அறியப்பட்ட கானபரோ லூகாஸ் காலமானார்.
கானபரோ ஜூன் 8, 1908 அன்று பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுலில் பிறந்தார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.
வயது முதிர்வு காரணமாக கேசெரோஸில் உள்ள சாண்டா காசா டி மிசரிகார்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் (ஏப்ரல் 30) உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கானபரோ லூகாஸின் மரணத்துக்கு பின், இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
- போல்சனரோ வடகிழக்கு பிரேசிலில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
- அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது.
சாவ் பாவ்லா:
பிரேசிலின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெய்ர் போல்சனாரோ.
இவர் நேற்று முன்தினம் வடகிழக்கு பிரேசிலில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அவரது அரசியல் கட்சி தெரிவித்தது.
வடகிழக்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ நோர்டேவில் உள்ள ஒரு சிறிய நகரமான சாண்டா குரூசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வலி கடந்த 2018 செப்டம்பரில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட கத்திக்குத்தின் நீண்டகால விளைவுகளுடன் தொடர்புடையது என அவரது லிபரல் கட்சி தெரிவித்தது.
மருத்துவமனையில் போல்சனாரோவை கண்காணித்து வரும் மருத்துவக் குழு, அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவித்தது.
- ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
- இதில் அர்ஜெண்டினா வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ரியோ டி ஜெனிரோ:
ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேயஸ், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பேயஸ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனியின் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியோ டி ஜெனிரோ:
ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ காம்சேனா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 3-6, 4-6 என இழந்தார். இதன்மூலம் ரியோ ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- பிரிக்ஸ் அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
- பிரிக்ஸில் இணைய சவுதி அரேபியாவுக்கு அழைப்பு.
அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.
மேலும் உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது. பிறகு, 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது.
கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்தது. சவுதி அரேபியாவும் இந்த அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
- ஆடை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
- அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார்.
சார்ஜ் போடும்போது சூடாகி செல்போன்கள் வெடிப்பதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் எவ்வித பயன்பாடும் இன்றி சாதாரணமாக நம் ஆடையில் வைக்கப்பட்டிருக்கும்போது செல்போன் வெடிப்பது என்பது கொஞ்சம் அரிதாக நடக்கும் நிகழ்வு. அத்தகைய நிகழ்வு ஒன்று பிரேசிலில் நடந்துள்ளது.
காய்கறி சந்தைக்கு இளம்பெண் ஒருவர் தனது தோழருடன் சென்றிருந்தார். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பேண்ட்டின் பின்பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தொடர்ந்து அவருடைய ஆடை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
இதனால் செய்தறியாமல் அவர் அங்கும் இங்கும் ஓடியபடி அலறி துடித்தார். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இதுதொடர்பான வீடியோ பதிவாகி இருந்தநிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன.
- வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள டிராஜாகாஸ் என அழைக்கப்படும் மஞ்சள் புள்ளி ஆமைகள் அருகி வரும் உயிரினமாக உள்ளது. குறிப்பாக கடற்கரையில் அவையிடும் முட்டையை மற்ற விலங்குகள், பறவை உள்ளிட்ட உயிரினங்கள் நாசப்படுத்தி விடுகின்றன. எனவே அதனை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில் அங்குள்ள இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன. அவற்றை வனத்துறை போலீசார் பத்திரமாக மீட்டு ஆற்றில் கொண்டு விட்டனர். வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிரேசிலா:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். இந்நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென பிசியான சாலையில் மோதியது.
இந்த விபத்தில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
- வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பிரேசில் நாட்டின் தெற்கே சாவோ பவுலோ நகரில் கடுமையான இடி- மின்னலுடன் மழை பெய்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களிலேயே பெய்தது.
அப்போது அங்குள்ள குவாருலோஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து பெர்ன்ஹார்டு வார் கூறுகையில், பெரிய புயல் வீசியது. இதனால் விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது தான் விமானத்தின் வால் பகுதியில் கடுமையாக மின்னல் தாக்கியதை வீடியோ எடுத்தேன் என்றார்.






