என் மலர்
உலகம்
- ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர்.
- கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் கொப்போலா டிரைவ் ஆப் நியூ டூர்ஹாம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த திலீப்குமார் பிரம்மபட் (72), மனைவி பிந்து, மகன் யஷ்குமார் (38) என்பது தெரிய வந்தது. இவர்களை உறவினர் ஓம் பிரம்மபட் (23) சுட்டு கொன்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மாணவரான ஓம்பிரம்மபட், திலீப்குமார்-பிந்து தம்பதியின் பேரன் ஆவார். அவர் காண்டோ பகுதியில் வசித்து வந்தார். பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்து தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்தார். அவர் எதற்காக 3 பேரை கொன்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஓம்பிரம்மபட், கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
- அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது.
- ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்து விசாரணை.
எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.
தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்..
ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
- கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
- அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததால் ஆண் நண்பர் மீது ஆத்திரம்.
காதலன் காதலியுடன் செல்லும்போது எதேச்சையாக மற்ற பெண்களை பார்ப்பது உண்டு. சிலர் வேண்டுமென்றே பார்ப்பதும் உண்டு. அந்த நேரத்தில் காதலி காதலனை பார்க்கும் ஒரு முறைப்பை நாம் சினிமா படங்களில் பார்த்திருப்போம். சில சமயங்களில் இதுபோன்ற சம்பவத்தால் அடிதடியும் நடப்பது உண்டு.
இப்படி ஆண் நண்பர் ஒருவர் மற்ற பெண்களை பார்த்ததால் ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர், ஆண் நண்பரின் கண்ணில் வெறிநாய்க்கடி ஊசியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டியில் சந்த்ரா ஜிமினெஸ் என்ற 44 வயது பெண்மணி ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். ஆண் நண்பர் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததாக தெரிகிறது.
இதற்கிடையே தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு நெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) ஆண் நண்பர் வீட்டில் வாங்கி வைத்துள்ள்ளார்.
மற்ற பெண்களை ஆண் நண்பர் பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது. இதனால் ஒரு ஊசியை எடுத்து ஆண் நண்பரின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
காயம் அடைந்த அந்த ஆண் நண்பர் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்று, ஆண் நண்பரை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையின்போது, ஆண் நண்பரின் கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், ஆண் நண்பர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
- ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்தம் ஒப்பந்தம் காரணமாக பிணைக்கைதிகள் விடுவிப்பு.
- பெற்றோரை இழந்த பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தினர். இரண்டு நிமிடத்திற்குள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் சிறு குழந்தைகள் உள்பட 84 வயது முதியோர் வரை அடங்குவர்.
46 நாட்களுக்கு மேல் சண்டை நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அந்த போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
முதல் நான்கு நாட்களில் 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள செய்தி நிறுவனங்கள் முயற்சி செய்தன.
ஆனால், மருத்துவமனைகளுக்கு தகவலை பரிமாறிக் கொள்ளவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தகவல் கசிந்துள்ளது. வடக்கு காசாவில் பிடிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த 17 பேர் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் உள்ள அதிகாரி மூலம் பிணைக்கைதிகள் எதிர்கொண்ட இன்னல்கள் தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு மிகவும் குறைந்த ஊட்டச்சத்து குறைந்த உணவுகளே கொடுக்கப்பட்டடுள்ளத. மேலும், கொஞ்சமாக அரிசி உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, ஃபவா பீன்ஸ், சில நேரங்களில் பிட்டாவுடன் உப்பு கலந்த சீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து மற்ற ஏதும் வழங்கப்படவில்லை. காய்கறிகள், முட்டை போன்ற உணவுகள் வழங்கவில்லை.
பலர் தங்களுடைய எடையில் 10 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் குறைந்துள்ளனர். அவர்களுக்கு ஒளி (வெளிச்சம்) காட்டப்படவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வெளிச்சம் காட்டப்பட்டுள்ளது.

தங்களது தகவலை பரிமாறிக்கொள்ள பேனா அல்லது பென்சில் கேட்டபோது, அதற்கு ஹமாஸ் அமைப்பினர் அனுமதி அளிக்கவில்லை. எழுத்து மூலம் தகவலை பரிமாற்றம் செய்யக்கூடும் என பயந்ததால் அனுமதிக்கவில்லை. தொலைக்காட்சி, வாசிப்பு தொடர்பானதுக்கும் அனுமதிக்கவில்லை. ஒருவர் மூலம் ஒருவர் என்ற வகையில் தகவலை பரிமாறிக் கொள்ள அனுமதித்துள்ளனர். முதியவர்கள் தூங்குவதற்கு சிரமப்பட்டுள்ளனர். சேரில் இருந்தவாறு தூங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இன்னல்களை சந்தித்ததாக மருத்துவமனை அதிகாரி தகவலை பகிர்ந்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் விடுவிக்கப்பட்ட பிறகு தங்களது தாயாரை சந்திக்கும் மகிழ்ச்சியில் வந்தபோது, ஹமாஸ் தாக்குதலின்போது உயிரிழந்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் மனவேதனை அடைந்தனர்.
- ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ முக்கிய நபராக உள்ளார்.
- மரியானாவுக்கு விஷம் கொடுக்கப்பட்ட பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எப்போது விஷம் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1¾ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனின் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ மனைவி மரியானா. இந்த நிலையில் மரியானாவுக்கு கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது உடலில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. அவருக்கு உணவு மூலம் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மரியானாவுக்கு விஷம் கொடுக்கப்பட்ட பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எப்போது விஷம் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ முக்கிய நபராக உள்ளார். ரஷியாவை தாக்கும் முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர்.
- இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கோ ஹிஸ்தான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சில வாலிபர்களுடன் நடனம் ஆடும் வீடியோ வெளியானது. இதை பார்த்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊர் பெரியவர்கள் நடத்திய பஞ்சாயத்தில் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொலை செய்தனர்.
இளம்பெண் கவுரவ கொலை செய்யப்பட்டது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊர் பஞ்சாயத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியை போலீசார் மீட்டனர்.
அதே போல் இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர். இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் மற்றும் பஞ்சாயத்தில் ஆலோசனை செய்தவர்கள், பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளோம்" என்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் கவுரவ கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நேற்று 5-வது நாளாக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது.
- நேற்று இஸ்ரேல் சிறைகளில் இருந்து 30 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. காசா மீது மும்முனை தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த பகுதி நிர்மூலமாகி உள்ளது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் 4 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 24-ந்தேதி போர் நிறுத்தம் தொடங்கிய நிலையில் இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு விடுவித்தது.
இதற்கிடையே போர் நிறுத்தம் மேலும் 2 நாட்கள் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 5-வது நாளாக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது.
4 நாள் போர் நிறுத்தம் முடிவில் 50 இஸ்ரேலியர்கள், 19 வெளிநாட்டினர் என 69 பேர் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதால் நேற்று 5-வது நாளாக மேலும் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். 10 இஸ்ரேலியர்கள், 2 வெளிநாட்டினர் விடுவிக்கப்பட்டனர். அவர்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் ஒப்படைத்தனர்.
இதேபோல் நேற்று இஸ்ரேல் சிறைகளில் இருந்து 30 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 6-வது நாளாக இன்று மேலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இதற்கான பெயர் பட்டியல் இஸ்ரேல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
- சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும்.
- ஹம்பன்தோடா துறைமுகம் 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
சீனாவின் எரிசக்தி நிறுவனமான சினோபெக் நிறுவனத்திற்கு ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை ஹம்பன்தோடா துறைமுகத்தில் நிறுவ இலங்கை மந்திரி சபை அனுமதி அளித்துள்ளது. இதை இலங்கை மந்திரி காஞ்சனா விஜே சேகரா தெரிவித்தார்.
சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும். இந்த சுத்திகரிப்பு நிலையத்துடன், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் பயிற்சி மையமும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.

ஹம்பன்தோடா துறைமுகம் இலங்கையின் 2-வது பெரிய துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த துறைமுக கட்டுமானத்துக்கு சீனாவின் எக்சிம் வங்கி கடன் அளித்துள்ளது. தற்போது இங்கு சீனா மிகப் பெரிய முதலீட்டை செய்து உள்ளது.
- இரண்டு முறை தோல்வியுற்ற நிலையில், 3-வது முறையாக வடகொரியா வெற்றிகரமாக செலுத்தியது.
- ஜப்பான், தென்கொரியா, அமெரிக்க நாடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
பயாங்யாங், நவ.28-
வடகொரியா கடந்த வாரம் புதிய செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இது உளவு பார்க்கக் கூடிய செயற்கை கோள் ஆகும். விண்ணில் செலுத்தப்பட்ட வடகொரி யாவின் முதல் உளவு செயற்கைகோளும் இது தான்.
இந்த செயற்கை கோள் உளவு பார்த்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக வடகொ ரியா கூறியுள்ளது.
இந்த உளவு செயற்கை கோளானது அமெரிக்கா வின் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் கடற் படை நிலையங்களின் புகை படங்களை எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்து உள்ளது.

மேலும் ரோம்நகரம், குவாமில் உள்ள ஆண்டர் சன் விமானப்படை தளம், பேர்ல் துறைமுகம், அமெ ரிக்க கடற்படையின் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றை யும் புகைப்படம் எடுத்து உள்ளது.
இந்த புகைப்படங்களை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் பார்த்துள்ளதாக அம்மாநிலத்தில் இருந்து வெளியாகும் அதிகாரப் பூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், "உளவு செயற்கைகோளை நன்றாக சரிபடுத்தும் நடைமுறை இன்னும் 2 நாட்களில் முடிவடையும். டிசம்பர் 1-ந்தேதி முதல் இந்த செயற்கைகோள் உளவுப் பணியை தொடங்கும்" என்று தெரிவித்து உள்ளது.
ஆனால் வடகொரிய செயற்கைகோள் எடுத்து உள்ள புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை.
- 50 பிணைக்கைதிகளை விடுவிக்க 4 நாள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- மேலும் 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் செய்யப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதிலடியாக காசா மீது போர் தொடுத்தது. இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் காசா சீர்குலைந்தது. சுமார் 46 நாட்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை நான்கு நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல், தங்கள் நாட்டின் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது. இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் போர் நிறுத்தம் ஒப்பந்தும் முடிவடைகிறது.

போர் நிறுத்தம் முடிவடைந்ததும், தாக்குதலை தொடங்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார். இதனால் எகிப்து, கத்தார், அமெரிக்கா போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தின. இந்த நிலையில் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- உலகளவில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக புது சர்ச்சை.
உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் இன்று (நவம்பர் 27) மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி வெளியாகி இருக்கும் வீடியோவால் இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வீடியோவில் பேசிய அவர், "எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிகளுக்கு பின் உங்களை நான் சந்திக்கிறேன். தமிழீழ மக்களுக்காக பணி செய்ய காலம் வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன். உலகில் தனித்து நின்று தேச விடுதலைக்காக நாம் போராடினோம். தமிழீழ தாயகத்தை சிங்கள அரசு முழுவதுமாக மாற்றியமைத்துள்ளது."

"ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என எந்த நாடும் இதுவரை உதவவில்லை. ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என கூறிய எந்த நாடும் இதுவரை உதவவில்லை. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். ஆயுத போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது."
"தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழக உறவுகளுக்கு நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல, எதிராக செயல்பட்டதும் இல்லை. தேசிய தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது," என்று பேசியுள்ளார்.
உண்மையில் வீடியோவில் தோன்றி பேசியது பிரபாகரனின் மகள் துவாரகா தானா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப உதவியால் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- அமெரிக்க வெள்ளை மாளிகை மஸ்க் பொய் சொல்வதாக கூறியது
- அனைவரின் கருத்துக்களையும் ஆராயும் பழக்கம் எனக்கு இல்லை என்றார் சுனக்
அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 50 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் பிரபல சமூக கருத்து பரிமாற்றல் இணைய வலைதளமான "எக்ஸ்" செயலியில், ஒரு பயனர், "வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பை தூண்டி விடுகிறார்கள்" என கருத்து பதிவிட்டிருந்தார்.
எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில், "நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்", என பதிலளித்து பதிவிட்டிருந்தார்.
இது உலகெங்கும் உள்ள யூதர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க வெள்ளை மாளிகை எலான் மஸ்க் கூறுவதை "வடிகட்டிய பொய்" எனவும் விமர்சித்திருந்தது.
எலான் மஸ்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வந்த தங்கள் விளம்பரங்களை குறைத்து கொள்ள தொடங்கின. இதனால் எக்ஸ் நிறுவன விளம்பர வருவாயும் குறைய தொடங்கியது. இவ்வருட இறுதிக்குள் அது பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும், பல்லாயிரக்கணக்கானோரும் பங்கேற்ற யூத எதிர்ப்பிற்கு எதிரான பேரணி ஒன்று நடைபெற்றது.
இங்கிலாந்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த மாநாட்டில் எலான் மஸ்க் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில், தனது நிலைப்பாட்டை குறித்து ரிஷி சுனக் கருத்து தெரிவிக்க வேண்டும் என அந்நாட்டில் அவருக்கு ஊடகங்களில் அழுத்தம் தரப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து ஒரு பேட்டியில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இது குறித்து கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
என்னுடன் பழகும் ஒவ்வொரு மனிதரும் கூறும் கருத்துக்களையும் ஆராயும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால், யூதர்களுக்கு எதிரான வெறியையும், வன்முறை சம்பவங்களையும், அவர்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் நான் எதிர்க்கிறேன். நீங்கள் சாலையில் செல்லும் யாரோ ஒருவரா அல்லது எலான் மஸ்கா என்பது குறித்தெல்லாம் எனக்கு கவலையில்லை. தகாத வார்த்தைகளால் பொய்யாக விமர்சிப்பது அனைத்து வகையிலுமே ஏற்க முடியாதது. எல்லா வகையிலுமே யூத எதிர்ப்பு என்பது முழுவதும் தவறு.
இவ்வாறு சுனக் தெரிவித்தார்.






