என் மலர்
உலகம்
- 6 ஆயிரம் டன் உப்புடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது.
- கப்பலில் 4 இந்தியர்கள் உள்பட 14 பேர் இருந்தனர்.
கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான்புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.
லெஸ்போஸ் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. கடும் புயலில் சிக்கி அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்தனர். இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மாயமான 12 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த பணியில் கிரீஸ் நாட்டு கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களும் தேடிவருகின்றன. கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்த 6 ஆயிரம் டன் உப்பு கடலில் கரைந்தது.
- டிசம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்களது நாட்டில் தங்க விசா தேவையில்லை
- மலேசியாவின் 5-வது மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வகையில் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவதற்கு விசா தேவையில்லை என மலேசியா அறிவித்துள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்தியாவை சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசாயின்றி தங்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய மக்கள் நீதி கட்சியின் கூட்டத்தில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எவ்வளவு நாட்களுக்கு அனுமதிக்கப்படும் என்பதை அவர் அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.
இருந்தபோதிலும், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் டிசம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கியிருக்க விசா தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலோசியாவின் 5-வது மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. சீனா 4-வது இடத்தில் உள்ளது.
மலேசியாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 9.16 மில்லியன் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். சீனால் இருந்து 4,98,540 பேரும், இந்தியாவில் இருந்து 2,83,885 பேரும் சென்றுள்ளனர்.
முன்னதாக, தாய்லாந்து இந்தியா மற்றும் தைவான் குடிமக்கள் தங்களது நாட்டிற்று வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
- இஸ்ரேலியர்களுடன் வெளிநாட்டினரையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து வருகிறார்கள்.
- தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டினரை தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமி விடுவிப்பு.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை ரிலீஸ் செய்து வருகிறார்கள். நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது, ஒவ்வொரு நாளும் 13 இஸ்ரேலியர்கள் என்ற அடிப்படையில் பிணைக்கைதிகளை விடுவிக்கின்றனர்.
அதேவேளையில் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டினரையும் விடுவித்து வருகின்றனர். அந்த வகையில நேற்று 3-வது கட்டமாக 13 இஸ்ரேலியர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுமி உள்பட நான்கு வெளிநாட்டினர் என 17 பேரை விடுவித்தது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் 4 வயது சிறுமியாகும். அவரது பெயர் அபிகெய்ல் ஈடன். இவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர். கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்ரகவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது, இவரது வீட்டிற்குள் நுழைந்து தந்தை மற்றும் தாயை சுட்டுக் கொன்றுள்ளனர்.
அப்போது பக்கத்து வீட்டில் சென்று தஞ்சம் அடைந்துள்ளார் அபிகெய்ல் ஈடன். பக்கத்து வீட்டிற்குள்ளும் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த குடும்பத்துடன் இவரையும் சேர்த்து பிணைக்கைதிகளாக பிடித்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து மூன்று குழந்கைகள், குழந்தைகளின் தாய் மற்றும் ஈடன் ஆகிய ஐந்து பேரும் காணாமல் போனர். பின்னர் பிணைக்கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் அபிகெய்ல் ஈடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "கடவுளுக்கு நன்றி, அந்த சிறுமி வீட்டில் இருக்கிறார். அவளை கட்டிப்பிடித்து சந்தோகத்தை வெளிப்படுத்த அங்கே இருக்க விரும்புகிறேன். அவள் இஸ்ரேலில் பத்திரமாக இருக்கிறாள்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு இன்னும் அதிகமான பிணைக்கைதிகளை விடுவிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பின்னர், அமெரிக்காவில் உள்ள அந்த சிறுமியின் குடும்பத்துடன் பேசியதாகவும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடமும் பேசியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி நாளை காலை 10.30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க ஒருநாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான முயற்சிகளை மத்தியஸ்தரராக செயல்பட்டு வரும் கத்தார் மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு இஸ்ரேலியர் விடுதலைக்கும் 3 பாலஸ்தீனர்களை ஜெயிலில் இருந்து விடுவிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது. அதன்படி 39 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 117 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து இஸ்ரேல் விடுவித்துள்ளது.
நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்களை விடுவிக்கவும், கசாவிற்கு மனிதாபிமான உதவிகள் சென்றடையவும் இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது.
- ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.
- இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. மேலும், பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று காசா பகுதியில் பாதுகாப்புப் படையினரை சந்தித்து பேசியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தளபதிகளுடன் பேசினார் என்றும், பாதுகாப்பு தொடர்பான விளக்கத்தைப் பெற்றார் என்றும் அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில்"எதுவும் எங்களைத் தடுக்காது. போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கான பலம், சக்தி, விருப்பம் மற்றும் உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதையே நாங்கள் செய்வோம்," என்று அவர் கூறினார்.
- வெற்றிகரமான கதாநாயகனாகவும், கலிபோர்னியா கவர்னராகவும் இருந்தார் ஆர்னால்ட்
- கென்னடி மற்றும் ரீகன் காலம் போன்று பிரசாரம் நடக்கவில்லை என்றார் ஆர்னால்ட்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், இருவரும் இப்போதே தங்களுக்கு ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா உட்பட உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட தொழில்முறை பாடிபில்டரும், பிரபல ஹாலிவுட் முன்னணி கதாநாயகனும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (76) அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்கர்களை குறித்து கவலைப்படுகிறேன். 2024 தேர்தலில் மீண்டும் ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் போட்டி என்பது ஏமாற்றமடைய செய்கிறது. இருவருக்கும் அதிக வயதாகி விட்டது என்பதனால் மட்டுமல்ல; அவர்கள் சிறப்பானவர்கள் என்று நான் கருதவில்லை.
வெள்ளை மாளிகையில் புதிய ரத்தம் வேண்டும். புதிய சிந்தனைகளை உடைய தலைவர்கள் வேண்டும். இரு கட்சிகளிலும் அப்படி ஒரு புதிய முகம் இல்லாதது கவலை அளிக்கிறது.
பைடன் பேட்டி அளித்தால் அனைத்து பத்திரிகையாளர்களும் அதை படம் பிடிக்கின்றனர். டிரம்ப் எது கூறினாலும் அதையும் படம் பிடிக்கின்றனர். தலைப்பு செய்திகள் முழுவதும் பைடன் அல்லது டிரம்ப் குறித்தே உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு புதிய முகம் எவ்வாறு உருவாக முடியும்?
நாட்டின் முன் உள்ள பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள மிகுந்த திறன் படைத்த ஒருவர் வேண்டும். ஜான் கென்னடி மற்றும் ரொனால்ட் ரீகன் காலகட்ட பிரசாரம் போன்று தற்போது நடைபெறுவதில்லை. இரு கட்சிகளிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒன்றிணைக்கும் புதிய முகம் வேண்டும்.
இவ்வாறு ஆர்னால்ட் தெரிவித்தார்.
வாக்காளர்களின் மனநிலை குறித்த ஆய்வுகளில் பல அமெரிக்கர்கள், பைடனின் மன ஆரோக்கியம் மற்றும் டிரம்ப் மீது உள்ள வழக்குகள் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். வேறு சிலர் மாறி மாறி வரும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இப்பின்னணியில், ஆர்னால்டின் கருத்தும் இதனையே பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.
- 2-வது கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த 13 பேர், தாய்லாந்தை சேர்ந்த 4 பேர் என 17 பேரை ஹமாஸ் விடுவித்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் போர் நிறுத்தம் தொடங்கியது. அன்று 13 இஸ்ரேலியர்கள், 11 வெளிநாட்டினர் என 24 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.
தொடர்ந்து நேற்று நள்ளிரவில் 2-வது கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த 13 பேர், தாய்லாந்தை சேர்ந்த 4 பேர் என 17 பேரை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள துல்கரேம் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் உளவு பார்த்து தகவல் கொடுப்பதாக அவர்களை பாலஸ்தீன போராளிகள் பிடித்தனர்.
இஸ்ரேல் படைகள் 24 மணி நேரத்தில் குறைந்தது 8 பாலஸ்தீனர்களை கொன்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளானர்.
அந்த 8 பேரையும் கும்பல் ஒன்று கொலை செய்தது. பின்னர் அவர்களது உடல்களை தெருக்கள் வழியாக இழுத்து சென்றனர். அப்போது உடல்களை கால்களால் எட்டி உதைத்தனர். அதன் பின் 8 பேரின் உடல்களை மின் கம்பத்தில் தொங்கவிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடைகள் மட்டுமின்றி இணையதள வழியாகவும் மக்கள் பொருட்களை அதிகம் வாங்குகின்றனர்
- வர்த்தகர்கள் அறிவித்த அதிக தள்ளுபடி, அதிக விற்பனைக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்
அமெரிக்காவில், நவம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை "தேங்க்ஸ்கிவிங் டே" (Thanksgiving Day) என்றும் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday) என்றும் கொண்டாடப்படுகிறது.
கருப்பு வெள்ளி என நவம்பரில் அழைக்கப்படும் இந்நாளில் தொடங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடக்கம் வரை அமெரிக்கர்கள், தங்கள் குடும்பத்தினருடன் ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதும். மேலும், வர்த்தகர்கள், தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக பல தள்ளுபடி அறிவிப்புகளையும், ஊக்க தொகை மற்றும் பரிசு பொருட்கள் போன்ற பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.
கடைவழி வர்த்தகத்தை போன்றே இணையதள வழி வர்த்தகமும் மிகவும் மும்முரமாக நடைபெறும்.
இந்நிலையில், அமெரிக்காவில் கருப்பு வெள்ளி அன்று நடைபெற்ற இணையவழி வர்த்தகம், $9.8$ பில்லியன் அளவிற்கு நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதிக தள்ளுபடிகள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்க அதிகரிக்கும் விருப்பம் ஆகியவையே இதற்கு காரணம் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்கள் மக்களால் முதலில் விரும்பப்படும் பொருட்களாக உள்ளன.
கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் அதிக செலவு செய்வதை தவிர்த்து வந்ததால், வர்த்தகர்களிடம் பொருட்கள் தேங்கி கிடந்தது. ஆனால், தற்போது விற்பனை சூடு பிடித்திருப்பதை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொய்வடைந்திருந்த சில்லறை வர்த்தகத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என தெரிவிக்கும் பொருளாதார நிபுணர்கள், அடுத்து வரும் நாட்களில் விற்பனையின் அளவு இதே போன்று நீடிக்குமா என்பது இனிதான் தெரிய வரும் எனவும் கூறுகின்றனர்.
- டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன.
- பர்லோவிச்னஸ் ரேபிடஸ் ஒரு சிறிய, வேகமான மாமிச உண்ணி ஆகும்.
பல கோடி நூறு ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தது. அதன் கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில் பிரேசிலில் கால்தடங்கள் மூலம் புதிய டைனோசர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலின் அரராகுவாரா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கால் தடங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய டைனோசர் இனம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது 60 முதல் 90 செ.மீ. (2 முதல் 3 அடி) உயரம் கொண்ட ஒரு சிறிய மாமிச விலங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்லோவிச்னஸ் ரேபிடஸ் ஒரு சிறிய, வேகமான மாமிச உண்ணி ஆகும். இது சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
- தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
- முதல் கட்டமாக இஸ்ரேல், தாய்லாந்தைச் சேர்ந்த 25 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்
காசா:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் போர் நிறுத்தம் தொடங்கியது. அன்று 13 இஸ்ரேலியர்கள், 11 வெளிநாட்டினர் என 24 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.
2-வது கட்டமாக நேற்று விடுவிக்கப்படும் பிணைக்கைதிகளின் பட்டியல இஸ்ரேலிடம் ஹமாஸ் அமைப்பு கொடுத்தது. அந்த பட்டியலை இஸ்ரேல் ஆய்வு செய்தது.
இதற்கிடையே 2-வது கட்டமாக பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டுவதாக இஸ்ரேல் குறறம்சாட்டியது. ஆனால் ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக ஹமாஸ் தெரிவித்தது.
வடக்கு காசா பகுதிக்கு நிவாரண பொருட்களை இஸ்ரேல் விநியோகிக்கவில்லை என்றும், சிறையில் நீண்டகால தண்டனையில் உள்ள கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மறுப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்தது.
இதனால் பிணைக்கைதிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் காலக்கெடு விதித்தது.
இந்நிலையில், நள்ளிரவில் 2-வது கட்டமாக பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. இஸ்ரேலை சேர்ந்த 13 பேர், தாய்லாந்தை சேர்ந்த 4 பேரை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர். அவர்கள் ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இஸ்ரேல் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி நேற்று முன்தினம் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 39 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து இஸ்ரேல் சிறைகளில் இருந்து மேலும் 39 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்ட னர். இதில் 33 சிறுவர்கள், 6 பெண்கள் ஆவார்கள்.
இதுவரை 41 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று 3-வது கட்டமாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் பெறப்பட்டுள்ளதாகவும், அதை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் நாளை முடிவடையும் நிலையில் அது நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது.
- 5 ஐரோப்பிய நாடுகள், மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி அளித்தது.
பீஜிங்:
சீனாவில் இருந்து 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காண வைத்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.
இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வர்த்தகர்கள் பலவித பரிசு பொருட்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறார்கள்
- பொருட்கள் வாங்கும் வழங்கப்படி ஜோ பைடன் பிரபலமான புத்தகத்தை வாங்கினார்
அமெரிக்காவில் ஒவ்வொரு வருட நவம்பர் மாத 4-வது வியாழக்கிழமை, "தேங்க்ஸ்கிவிங் டே" (Thanksgiving Day) என கொண்டாடப்படுகிறது. நன்றி தெரிவிக்கும் நாள் என அங்கு கொண்டாடப்படும் இந்நாளில் அமெரிக்காவில் குடும்பங்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் நன்றி கூறி, விருந்துண்டு, விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம்.
இதற்கு அடுத்த நாள் "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday) எனப்படும். கருப்பு வெள்ளிக்கிழமை எனும் பெயரில் கொண்டாடப்படும் இந்நாள், டிசம்பர் மாத இறுதியில் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான பொருட்கள் வாங்க தொடங்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கடைகளில் பல்வேறு பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, வர்த்தகர்கள் அதிக தள்ளுபடி வழங்குவதும், பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஷாம்பெயின் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை அளிப்பதும் வழக்கம்.
இந்த வியாபார கொண்டாட்டம் ஆண்டு இறுதி வரை நடந்து, பின் புது வருட கொண்டாட்டங்களுக்கு பிறகு நிறைவடையும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில தீவான நான்டுகெட் (Nantucket) பகுதியில், தன் குடும்பத்தினருடன் கோடீசுவரர் டேவிட் ரூபன்ஸ்டீன் என்பவருக்கு சொந்தமான பெரிய வீட்டில், விடுமுறையை கொண்டாடி வருகிறர். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடும்பத்தினருடன் சாலைகளில் உள்ள அங்காடிகளில் பொருட்கள் வாங்க வந்தார்.
கருப்பு வெள்ளிக்காக கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற பைடன், ஹீதர் காக்ஸ் ரிச்சர்ட்ஸன் (Heather Cox Richardson) எனும் பெண் வரலாற்று ஆசிரியர் எழுதிய "ஜனநாயகத்தின் விழிப்பு" எனும் பொருள்படும் "டெமாக்ரஸி அவேகனிங்" (Democracy Awakening) புத்தகத்தை வாங்கினார்.

"எங்கள் குடும்ப வழக்கம் இது. கருப்பு தின கொண்டாட்டத்தின் போது ஒரு புத்தக கடைக்காவது சென்று புத்தகம் வாங்குவது எங்கள் குடும்ப வழக்கம்" என இது குறித்து பைடன் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜோ பைடனை ஹீதர் பேட்டி கண்டதும், அதில் அவரை, "அமெரிக்க ஜனநாயகம் எனும் பண்டைய சித்தாந்தத்தை மீட்டு எடுக்கும் புரட்சிகரமான அமெரிக்க அதிபர்" என புகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடனுடன் வந்திருந்த அவர் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடன், தங்கள் குடும்பம் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.
- 2019 சட்ட மாற்றத்தின்படி முன்னர் நடந்த தாக்குதலுக்கு புகார் அளிக்க இயலாது
- 2022ல் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்
பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான நியூயார்க்கில், கடந்த 2022 நவம்பர் மாதம் பாலியல் தாக்குதல் குறித்த புகாரளிப்பு சட்டங்களில் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் (Kathleen Hochul) சில மாற்றங்களை கொண்டு வந்தார்.
பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்கள், அது குறித்த புகாரையும், வழக்கையும், 3 வருட காலத்திற்குள் பதிவு செய்து விட வேண்டும் என அங்கு சட்டம் இருந்தது.
2019ல் இந்த காலக்கெடு முறை நீக்கப்பட்டாலும், அது சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தி வந்தது.
எனவே, 2022ல் "அடல்ட் சர்வைவர்ஸ் ஆக்ட்" (Adult Survivors Act) எனும் பெயரில் கவர்னர் ஹோசல் கொண்டு வந்த இந்த சட்ட மாற்றத்தின்படி ஒரு ஆண்/பெண், தங்கள் வாழ்வின் முந்தைய காலகட்டத்தில் எப்பொழுதோ பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தால் கூட தற்போது அது குறித்து புகார் அளிக்கலாம் என வழிவகை செய்யப்பட்டது.
ஆனால், இந்த சட்ட மாற்றம் ஒரு வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் கொண்டு வரப்பட்டதால், அது இம்மாதத்துடன் காலாவதியாகிறது.
இதனையடுத்து, இந்த ஒரு வருட கால தொடக்கத்தில் பெரிய அளவு புகார்கள் வரவில்லை. ஆனால், விரைவில் சட்ட திருத்தம் காலாவதியாக போவதால் சமீப சில நாட்களாக பலர் தாமாக முன்வந்து புகார் அளித்து வழக்கு பதிவு செய்கின்றனர். இதுவரை 2500 பேர் புகார் அளித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, பல பிரபலங்களுக்கு எதிராக புகார்கள் வந்துள்ளது அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்க பாடகர் டிட்டி (ஷான் கோம்ப்ஸ்), முன்னாள் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, பாடகரும் நடிகருமான ஜேமி ஃபாக்ஸ், பாடகர் ஆக்ஸ்ல் ரோஸ் உட்பட பல பிரபலங்கள் இக்குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.






