என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்பட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா (79).

    வங்கதேச பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக்காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது.

    இதை எதிர்த்து கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்து உத்தரவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கலிதா ஜியா அப்பீல் செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவான 10 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்துசெய்து உத்தரவிட்டது.

    அத்துடன், பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது நிரூபணமாகியிருப்பதாக கூறி கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவின் தீவிர ராஜதந்திரத்திற்குப் பிறகு எகிப்து மற்றும் கத்தார், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

    ஜனவரி 20 அன்று முடிவடையும் தனது நிர்வாகத்தின் கடைசி வெளியுறவுக் கொள்கை நிறைவேற்றமாக இந்த ஒப்பந்தத்தை உருவாக்குகிறது.

    இந்த ஒப்பந்தம் காசாவில் சண்டையை நிறுத்தும். பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும்.

    மேலும் 15 மாதத்துக்கு மேலாக சிறைபிடிக்கப்பட்ட பிணைக்க்கைதிகளை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கும்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும் என்றும், ஜனவரி 19-ம் தேதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

    • இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என மெட்டா நிறுவனம் கூறியது.
    • மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு என தெரிவித்தார்.

    நியூயார்க்:

    மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2024-ல் உலகம் முழுவதும் மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தேர்தலைச் சந்தித்தன. ஆனால், ஆட்சியில் இருந்த கட்சிகள் பணவீக்கம், பொருளாதார பிரச்சனை, கோவிட்டை கையாண்டது உள்ளிட்ட ஏதாவது ஒரு விஷயம் காரணமாக ஆட்சியை பறிகொடுத்தன என தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற அடிப்படையில் 2024 ல் இந்தியாவில் நடந்த தேர்தலில் 64 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதான தங்களின் நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

    கோவிட்டிற்கு பிறகு 2024 ல் நடந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட அனைத்து அரசுகளும் தோல்வியடைந்தன என்பது தவறான தகவல்.

    80 கோடி பேருக்கு இலவச உணவு, 220 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி, கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு உதவி என வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னணியில் உள்ளது. பிரதமர் மோடியின் 3-வது வெற்றி என்பது சிறந்த நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த சான்று.

    மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் இருந்து தவறான தகவல்களைப் பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மைகளையும், நம்பகத்தன்மையயும் நிலைநிறுத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இந்திய தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது.

    இதுதொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் ஷிவ்நாத் துக்ரால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, 2024-ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்ற மார்க் ஜூக்கர்பெர்க்கின் கருத்து பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவிற்கு இது பொருந்தாது. இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம். மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு. அதன் புதுமையான எதிர்காலத்தின் மையத்தில் இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என தெரிவித்துள்ளார்.

    • போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்தன.
    • இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    டெல் அவிவ்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன் பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவை மையமாக கொண்டு வால்மார்ட் நிறுவனம் இயங்கி வருகிறது.
    • 17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது.

    உலகெங்கும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பல்பொருள் விற்பனை அங்காடி, வால்மார்ட்.

    அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வால்மார்ட் நிறுவனத்தில் அன்றாட உபயோக பொருட்கள், மளிகை, மருந்து, விளையாட்டு பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.

    இந்நிலையில், வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவின் பின்புற நிறத்தை மட்டும் அடர் நீல நிறத்தில் மாற்றி அதனை புதிய லோகோ என்று சமூக வலைத்தளங்களில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் அதன் புதிய லோகோவை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

    வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவையே பட்டி டிங்கரிங் செய்து புதிய லோகோவாக வெளியிட்டுள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அச்சம்மா செரியன், அவசர பிரிவில் பணியில் இருந்தபோது அவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் கழுத்தில் திடீரென்று குத்தினார்.
    • அச்சம்மா செரியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மான்செஸ்டர்:

    இந்தியாவை சேர்ந்தவர் அச்சம்மா செரியன்(வயது 57). இவர் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட்ஹாம் ராயல் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அச்சம்மா செரியன், அவசர பிரிவில் பணியில் இருந்தபோது அவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் கழுத்தில் திடீரென்று குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள், அவரை மீட்டு அவசர பிரிவில் சேர்த்தனர். மேலும் தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நர்சை கத்தியால் குத்திய ரோமன் ஹக்கை (வயது 37) கைது செய்து மான்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர் மீது கொலை முயற்சி மற்றும் கத்தியால் குத்தப்பட்ட பொருளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை காத்திருக்க வைத்ததால் கோபம் அடைந்து நர்சு மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

    இதற்கிடையே அச்சம்மா செரியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலையிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சம்மா செரியன் இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் ல்ட்ஹாம் ராயல் ஆஸ்பத்திரியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    • கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய கோர்ட்டு கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.
    • தற்போதைய வாரண்டின் கீழ் அவர் 48 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்படலாம்.

    சியோல்:

    தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சில மணி நேரங்களில் அவசர நிலையை திரும்ப பெற்றார். ஆனால் அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் விலக கோரி போராட்டம் வெடித்தது. இதையடுத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய கோர்ட்டு கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி அவரை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் சென்றனர். அப்போது யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதால் கைது செய்ய முடியவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் யூன் சுக் இயோல் வீட்டிற்கு சென்றனர். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு முன் திரண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து இயோலின் வக்கீல்கள், புலனாய்வு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே விசாரணைக்கு ஒத்துழைப்பதாக யூன் சுக் இயோல் தெரிவித்தார். அதன்பின் நீண்ட நேரத்திற்கு பிறகு, அவர் கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்படுவதற்கு முன்பு யூன் சுக் இயோல் வெளியிட்ட வீடியோவில் கூறும்போது, விசாரணையின் சட்டப்பூர்வத்தன்மையை ஏற்கவில்லை. ஆனால் ரத்தக்களரியைத் தடுக்க விசாரணைக்கு இணங்குகிறேன். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சரிந்து விட்டது என்றார்.

    தற்போதைய வாரண்டின் கீழ் அவர் 48 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்படலாம். அவரது காவலை நீட்டிக்க அதிகாரிகள் புதிய வாரண்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், கருத்துக்கள் மற்றும் மரபுகளின் ஒரு அங்கமாகும்.
    • தமிழ்-அமெரிக்கர்கள் சமூகங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை அங்கீகரிக்க, தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க கோரி தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி எம்.பி. தலைமையில் ரோ கன்னா, அமி பெரா, ஸ்ரீ தானேதர், பிரமிளா ஜெயபால் ,சுஹாஸ் சுப்பிரமணியம் உள்பட 15 உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்தனர்.

    இதுதொடர்பாக ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ஒரு தமிழ்-அமெரிக்கராக, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் இந்த இரு கட்சி தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், கருத்துக்கள் மற்றும் மரபுகளின் ஒரு அங்கமாகும்.

    இந்தத் தீர்மானம் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்-அமெரிக்கர்களின் வளமான மற்றும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் நம்பமுடியாத சாதனைகள் மீது வெளிச்சம் போடும் என்று நான் மனதார நம்புகிறேன். தமிழ்-அமெரிக்கர்கள் சமூகங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை அங்கீகரிக்க, தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

    இத்தீர்மானத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    தமிழ்-அமெரிக்கர்கள் ஐக்கிய பி.ஏ.சி. அமைப்பு கூறும்போது, பண்டைய தமிழ் மக்களின் வளமான வரலாற்றையும் நவீன உலகிற்கு அவர்கள் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது என்றது. வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு கூறும்போது, பெருமைமிக்க தமிழ்-அமெரிக்கர்களாக, தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதத்தை உருவாக்குவதற்கான பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தியின் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெரிவித்தது.

    அதேபோல் அமெரிக்க தமிழ் நடவடிக்கைக் குழு கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்ததுடன், தீர்மானத்தை உரிய வேகத்தில் நிறைவேற்றுமாறு பாராளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.

    • சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல்
    • ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    உக்ரைன் நாடு தனது பாதுகாப்புக்காக நேட்டோ அமைப்பில் சேர முயற்சிகள் மேற்கொண்டது. இது தனது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது என்று ரஷியா கருதியது. இதனால் உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா அதிரடியாக போர் தொடுத்தது.

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கணிசமான நகரங்களை ரஷியா தன் வசப்படுத்திக் கொண்டது. என்றாலும் உக்ரைன் நாட்டு ராணுவம் ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. அடிக்கடி இரு நாடுகளும் மாறிமாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்துகின்றன.

    உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தன. ஆனால் இதுவரை சமரச தீர்வு எட்டப்படவில்லை. இதனால் 3 ஆண்டுகளாக போர் நீடித்தபடி உள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரஷியா நாடு மீது உக்ரைன் தனது தாக்குதல் வியூகங்களை மாற்றி உள்ளது. அதன்படி ரஷியாவின் பல ராணுவ நிலைகள் மீது உக்ரைன் நாடு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. சில டிரோன்கள் ரஷியாவின் உயரமான கட்டிடங்களை பதம் பார்த்தன.

    இதையடுத்து தனது பாதுகாப்பை உக்ரைன் பகுதியில் மேலும் பலப்படுத்திய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி வந்தது. இந்தநிலையில் நேற்று ரஷியா மீது உக்ரைன் நாடு திடீர் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

    ராணுவ தொழிற்சாலை

    ரஷியாவில் உள்ள சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது உக்ரைன் நாட்டின் ஏவுகணைகள் நூற்றுக்கணக்கில் சீறிப்பாய்ந்து தாக்கின. திடீரென உக்ரைன் ஏவுகணைகள் இத்தகைய பலமுனை தாக்குதலை நடத்தும் என்று ரஷியா எதிர்பார்க்கவில்லை.

    என்றாலும் சுதாரித்துக் கொண்ட ரஷிய ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியது. நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய இந்த தாக்குதல்கள் நடந்தன.

     உக்ரைன் ஏவுகணைகள் ரஷியாவின் ராணுவ தொழிற்சாலையை தாக்கி அழித்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ராணுவ தொழிற்சாலை பீரங்கி, வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை ஆகும்.

    ஆனால் ராணுவ தொழிற்சாலைக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று ரஷியா கூறி உள்ளது.

    எண்ணை கிடங்கு

    அதுபோல ரஷியாவின் விமான எரிபொருள் சேமிப்பு நிலையமான எண்ணை கிடங்கு மீதும் உக்ரைன் குறி வைத்து ஏவுகணைகளை வீசியது. இதில் எண்ணை கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    ஆனால் அந்த எண்ணை கிடங்கை நோக்கி வந்த ஏவுகணைகளை நடுவழியில் மறித்து அழித்து விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்த எண்ணை கிடங்கு உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துக்கு முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.

    ரஷியாவின் குண்டு வீசும் போர் விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் முழுமையாக இந்த எண்ணை கிடங்கில் இருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரிய தாக்குதல்

    கடந்த சில மாதங்களில் ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தாக்குதல் காரணமாக ரஷியாவின் சில நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.

    இந்த தாக்குதல் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ரஷியா இன்று மீண்டும் அறிவித்தது.

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த போவதாகவும் ரஷியா கூறி உள்ளது. இதனால் ரஷியா- உக்ரைன் போரில் மீண்டும் பதட்டம் எழுந்துள்ளது.

    • உக்ரைன் - ரஷிய போர், சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை அந்நாடுகளில் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.
    • வட கொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது

    ரஷியா , வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷியா , வட கொரியா, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுஜ்கள் இடம் பெற்றுள்ளன.

    மேற்க்கண்ட நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    உக்ரைன் - ரஷிய போர், சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன. சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கல் இருக்கிறது. பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. வட கொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திங்கட்கிழமைக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என எதிர்பார்ப்பு.
    • 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கலாம் என எதிர்பார்ப்பு.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன் வருகிற பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி நடத்திய தாக்குதலில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் இன்னும் 94 பேர் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் வசம் உள்ளனர். இதில் சுமார் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலால் நம்பப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் "வருகிற 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய இஸ்ரேல் நோக்கி வந்த ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டுள்ளது.
    • எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் மறைவிடத்திற்கு ஓட்டம்.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு ஆகியவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று திடீரென ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மத்திய இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான மறைவிடத்திற்கு ஓடினர்.

    இதற்கிடையே ஏவுகணையை தடுத்து அழிக்கும் பாதுகாப்பு சிஸ்டம் மூலமாக ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    திங்கட்கிழமை இரவும் ஹவுதி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை இஸ்ரேல் எல்லைக்குள் நுழைவதற்குள் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஏமனின் தலைநகரான சானாவை 2014-ல் இருந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தி வரும் அதேவேளையில், சுமார் 100 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    ×