என் மலர்
உலகம்
- இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை ஈரான் மீது நடத்தியது.
- இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் 60% யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது. சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது
இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்நிலையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை ஈரான் மீது நடத்தியது.
- இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் 60% யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது. சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது
இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்நிலையில், எதிர்காலத்தில் தாக்குதல் மிக பயங்கரமாக இருக்கும் எனவும் அடுத்த முறை 2000 ஏவுகணைகளை ஒரேநேரத்தில் ஏவி தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு கருதி இஸ்ரேலின் சர்வதேச பென் குரியன் விமானநிலையம் மூடப்பட்டது.
- "நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, இது ஒரு அற்புதம்" என்று ரமேஷ் கூறினார்.
- எனக்கு மயிர்க்கூச்செறிகிறது. அவர் நான் அமர்ந்த அதே 11A இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா AI 171 விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் (40), விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்தது தெரியவந்தது.
அவசரகால வெளியேறும் வழிக்கு அருகில் அமர்ந்திருந்த அவர், விபத்தின்போது விமானத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு, காயங்களுடன் தப்பித்துள்ளார். "நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, இது ஒரு அற்புதம்" என்று ரமேஷ் கூறினார்.
இந்தச் சம்பவம் உலக அளவில் வியப்பையும், 11A இருக்கை மீது ஒரு ராசி இருப்பதாகவும் நம்பவைத்தது.
தாய்லாந்து நடிகர்-பாடகர் ரூங்சக் லோய்சுசக் (47), 27 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1998 டிசம்பர் 11 அன்று, தாய் ஏர்வேஸ் விமானம் TG261 விபத்துக்குள்ளானபோது, அவரும் 11A இருக்கையில் அமர்ந்து உயிர் பிழைத்தவர். அந்த விபத்தில் 146 பேரில் 101 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத் விபத்தில் 11A இருக்கையில் ஒருவர் உயிர் பிழைத்ததை அறிந்த ரூங்சக், "எனக்கு மயிர்க்கூச்செறிகிறது. இந்திய விமான விபத்தில் தப்பியவர் நான் அமர்ந்த அதே 11A இருக்கையில் அமர்ந்திருந்தார் " என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தனது வாழ்வை இரண்டாவது பிறப்பு என்று வர்ணிக்கும் ரூங்சக், ஏர் இந்தியா விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

- சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது
- ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது.
ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் 60% யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது. சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது
இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின. ஈரானின், தெஹ்ரான், இஸ்ஃபஹான், இஸ்ரேலின், டெல் அவிவ், ஜெருசலேம், ராமத் கான், ரிஷோன் லெசியோன் உள்ளிட்ட நகரங்களில் வெடிச்சத்தங்களும் சைரன்களும் ஒலித்தவண்ணம் இருந்தன.
இஸ்ரேலின் டெல் அவிவில் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான IRON DOME ஐ ஊடுருவி ஈரான் ஏவுகணைகள் டெல் அவிவில் கட்டிடங்களை சேதப்படுத்திய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இதற்கிடையே ஈரானிய ஏவுகணைகளை இடைமறிக்க அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த மோதல்கள் காரணமாக முழு அளவிலான போர் ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது.
- "ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்; இஸ்ரேல் முடிவல்ல, இது வெறும் ஆரம்பம்" என்று கூறி IDF கூறியது.
- ரஷியா , உக்ரைன், சீனா, சூடான் உள்ளிட்ட 15 நாடுகளும் ஈரானின் ஏவுகணை வரம்பிற்குள் உள்ளன
நேற்று அதிகாலை முதல் ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.
இதற்கிடையே, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் வரம்பைக் காட்டும் வரைபடம் ஒன்றை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்டிருந்தன.
"ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்; இஸ்ரேல் முடிவல்ல, இது வெறும் ஆரம்பம்" என்று கூறி IDF இந்த வரைபடத்தை வெளியிட்டிருந்தது.
அந்த வரைபடத்தில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதியாகவும், வடகிழக்கு இந்தியா நேபாளத்தின் பகுதியாகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமூக வலைத்தளங்களில் இந்தியப் பயனர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்ததையடுத்து, IDF வெளியிட்ட விளக்கத்தில், "இந்த வரைபடம் பிராந்தியத்தின் ஒரு விளக்கப் படம். இது எல்லைகளைத் துல்லியமாக சித்தரிக்கத் தவறிவிட்டது. இந்த படத்தால் ஏற்பட்ட எந்தத் தவறுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டது.
இந்த வரைபடத்தில் ரஷியா , உக்ரைன், சீனா, சூடான் உள்ளிட்ட 15 நாடுகளும் ஈரானின் ஏவுகணை வரம்பிற்குள் உள்ளன எனக் காட்டப்பட்டிருந்தது.
- இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் ஈரான் தாக்கியது.
- இஸ்ரேல் பல ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் இடைமறித்ததாகக் கூறியது.
இஸ்ரேல் நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டன. தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டன.
இந்தத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் ஐ.நா. தூதர் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" (Operation True Promise) என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 34 பேர் காயமடைந்தனர்.

இன்று (சனிகிழமை) அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேல் பல ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் இடைமறித்ததாகக் கூறியது.
டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்வழி சைரன்கள் ஒலித்தன, மத்திய இஸ்ரேல் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டன.
இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
- இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
- "என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் அற்புதமானது மற்றும் மிகவும் வெற்றிகரமானது என்று பாராட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே எல்லாம் தெரியும் என்றும், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தாலும், இஸ்ரேலின் செயல்கள் நிலைத்தன்மையை சீர்குலைக்கவில்லை என்று கூறிய டிரம்ப் "என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ஈரானின் பதிலடித் தாக்குதலின்போது இஸ்ரேல் மீது பாயும் டிரோன்களை இடைமறிக்க அமெரிக்கப் படைகள் உதவியதாகவும் இரு மூத்த அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
- அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
- அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட கவலையளிக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியது.
நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது கவலையை வெளிப்படுத்திய மோடி, பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான இந்தியாவின் உறுதியை மோடி வலியுறுத்தினார்.
முன்னதாக, வெளியுறவு அமைச்சகம் ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியதுடன், அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட கவலையளிக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியது.
ஈரான் மீதான தாக்குதலில் சர்வதேச ஆதரவைப் பெற மோடியை நேதன்யாகு அழைத்ததாக தெரிகிறது. ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடனும் நேதன்யாகு தொலைபேசியில் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட தலைவர்களையும் நேதன்யாகு தொடர்புகொண்டார்.
- இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.
- இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.
ஆனால் கட்டுப்பாட்டை விமானம் இழந்து ஓடுபாதையை விட்டு விலகி அங்கிருந்த புல்தரையில் சிறிது தூரம் ஓடியது. இதனையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.
எனினும் இந்தச் சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரன்வேயை விட்டு விலகி புல்தரையில் ஓடி நின்ற விமானத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- சீன பிரதமர் லி கியாங்கும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.
பீஜிங்:
அகமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், சீன பிரதமர் லீ கியாங்கும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
- ஈரான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்.
- முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஈரான் மீது வான்தாக்குதல் நடத்தியது. ஈரானிய புரட்சிகர காவல்படை தலைமையகம் மற்றும் தெஹ்ரான் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தளபதி அமீர் அலி ஹஜிஜதே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதி செய்துள்ளது. இவர் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்டத்தின் தளபதியாக இருந்தார். பாலிஸ்டிக் ஏவுகணை கிடங்குகளை மேற்பார்வையிடும் படைகளின் முக்கிய கமாண்டராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- ஈரானிய முப்படை ராணுவத் தளபதி முகமது பாகெரி உட்பட பல உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
- இஸ்ரேல் வான்பரப்பு மூடப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இன்று அதிகாலை ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது "ரைசிங் லயன்" என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் நாடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் மையம் மற்றும் அணு ஆயுதத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இருக்கும் இடம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்ட தளங்கள் ஆகியவற்றைத் தாக்கியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலை நீக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த டிரோன்களை இடைமறிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வான்பரப்பு மூடப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி, ஈரானிய முப்படை ராணுவத் தளபதி முகமது பாகெரி உட்பட பல உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஈரானிய அரசு தொலைக்காட்சியின்படி, இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. இஸ்ரேல்- ஈரான் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.






