என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலின் Iron Dome கவசத்தை ஊடுருவிய ஈரான் ஏவுகணைகள்.. டெல் அவிவில் கடும் சேதம் - பதுங்கு குழியில் மக்கள்!
    X

     ஈரான் ஏவுகணையால் டெல் அவிவில் ஏற்பட்ட வெடிப்பு

    இஸ்ரேலின் Iron Dome கவசத்தை ஊடுருவிய ஈரான் ஏவுகணைகள்.. டெல் அவிவில் கடும் சேதம் - பதுங்கு குழியில் மக்கள்!

    • சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது
    • ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது.

    ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.

    ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் 60% யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது. சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது

    இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர்.

    டெல் அவிவ் மீது பாயும் ஈரான் ஏவுகணைகள்

    இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின. ஈரானின், தெஹ்ரான், இஸ்ஃபஹான், இஸ்ரேலின், டெல் அவிவ், ஜெருசலேம், ராமத் கான், ரிஷோன் லெசியோன் உள்ளிட்ட நகரங்களில் வெடிச்சத்தங்களும் சைரன்களும் ஒலித்தவண்ணம் இருந்தன.

    இஸ்ரேலின் டெல் அவிவில் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான IRON DOME ஐ ஊடுருவி ஈரான் ஏவுகணைகள் டெல் அவிவில் கட்டிடங்களை சேதப்படுத்திய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

    பதுங்கு குழிகளில் டெல் அவிவ் மக்கள்

    இதற்கிடையே ஈரானிய ஏவுகணைகளை இடைமறிக்க அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த மோதல்கள் காரணமாக முழு அளவிலான போர் ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×