என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
    • தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

    முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.

    இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இந்நிலையில், விஜய் வாகனம் மீது ஏறி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் கூறினார். அப்போது, தொண்டர் ஒருவர் விஜய்க்கு ஆள் உயர வேல் ஒன்றை பரிசாக அளித்தார்.

    விஜய் வேலை பெற்றுக் கொண்டு தொண்டர்களிடம் காண்பித்தபடி கையசைத்தார்.

    • சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் செய்யப்பட்டது.
    • ஐ. நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பி இருந்தது.

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும் இவ்விவகாரத்தை அடிக்கடி ஐ.நா.சபையில் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.

    இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து விவகாரத்தை ஜெனீவாவில் உள்ள ஐ. நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பி இருந்தது.

    இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து இருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்திய தூதர் அனுபமா சிங் பேசியதாவது:-

    மனித உரிமைகள் கவுன்சிலின் நடவடிக்கைகளை அரசியலாக்க ஒரு குறிப்பிட்ட நாடு தொடர்ச்சியாகவும் வேண்டுமென்றே முயற்சிப்பதில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

    இதுபோன்ற நடவடிக்கைகள் இந்த கவுன்சிலின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாகவும் உள்ளது.

    சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் முக்கிய கொள்கைகளை வேண்டுமென்றே மீறுகிறது. பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் கூடிய எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாகவே சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    நீடித்த ஒத்துழைப்பு என்பதுபயங்கரவாதத்தில் இல்லை. அது நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. எனவே இந்த கவுன்சில் தன்னை திசைதிருப்பல் மற்றும் திரிபுபடுத்தலுக்கான தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. சிந்து நதி நீர் ஒப்பந்த பிரச்சினையை எழுப்புவதன் மூலம் இந்த மன்றத்தை பாகிஸ்தான் அரசியலாக்க முயற்சிக்கிறது. ஐ.நா.சபையை தவறாக பயன்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி அல்லது அமித் ஷா இங்கே வருகிறார்கள் என்று வச்சிக்கோங்க.
    • இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க.., இந்த மாதிரி வயர் கட் பண்ணுவீங்க..,

    நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதவாது:-

    மக்களை சந்திப்பதற்கு, சொந்தங்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள். அந்த இடத்தில் பெர்மிஷன் இல்ல. இந்த இடத்தில் பெர்மிஷன் இல்ல. அதற்கான காரணங்களை நீங்கள் கேட்டீர்கள் என்றால், அனைத்தும் சொத்தையாக இருக்கும். அங்க பேசக்கூடாது, இங்க பேசக்கூடாது. ஐந்து நிமிடம்தான் பேசனும், 10 நிமிடம்தான் பேசனும்..,

    நான் பேசுறதே 3 நிமிசம்தான். அந்த நேரத்தல நான் அத பேசக்கூடாது, இத பேசக் கூடாதுன்னு சொன்னா? நான் எதைத்தான் பேசறது? அரியலூருக்கு போகும்போது, ஒரு ஏரியாவுக்குள் நுழையும்போதே மின்சாரம் தடை. திருச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது ஸ்பீக்கருக்கு சென்ற வயர் கட்.

    உதாரணத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் இங்கே வருகிறார் என்று வச்சிக்கோங்க., பிரதமர் மோடி அல்லது அமித் ஷா இங்கே வருகிறார்கள் என்று வச்சிக்கோங்க. இதேபோன்ற கண்டிஷன் போடுவீங்க.., இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க.., இந்த மாதிரி வயர் கட் பண்ணுவீங்க.., கட் பண்ணிதான் பாருங்களேன். முடியாதுல... பேஷ்மென்ட் அதிரும்ல. நீங்கதான் மறைமுக உறவுக்காரர்கள் ஆயிற்றே. பேருந்துக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே... மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள்.

    நேரடியாகவே கேட்கிறேன். CM சார் மிரட்டு பார்க்கிறீங்களா?. அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை சார். கொள்கையை பேருக்கு வச்சிக்கிட்டு, குடும்பத்தை வச்சி கொள்ளையடிக்கிற உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமான உழைச்சி சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?.

    இவ்வாறு விஜய் ஆவேசகமாக பேசினார்.

    • தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
    • தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, திருச்சி, அரியலூரை தொடர்ந்து இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.

    இதில், தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார்.

    அப்போது அவர், சனிக்கிழமைகளில் மட்டும் பிரசார பயணம் நடந்துவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

    பிரசாரத்தில் விஜய் கூறியதாவது:-

    உங்கள் எல்லாரையும் வந்து பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் வார இறுதி நாட்கள், ஓய்வு நாட்களில் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.

    அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலுக்கு முன்பு தி.மு.க.காரர்கள் வந்து செய்வோம்... செய்வோம்.. என்று சொன்னார்களே செய்தார்களா?
    • குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?

    நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * திருச்சி, அரியலூர் கடந்த வாரம் சென்றிருந்தேன், பெரம்பலூர் பகுதிக்கு வர முடியாததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

    * தேர்தலுக்கு முன்பு தி.மு.க.காரர்கள் வந்து செய்வோம்... செய்வோம்.. என்று சொன்னார்களே செய்தார்களா?

    * எதையும் செய்யாமல் செய்வோம் செய்வோம் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள்.

    * குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?

    * 2026-ல் இரண்டே இரண்டு பேருக்குள்ள தான் போட்டி... ஒன்னு தி.மு.க. இன்னொன்னு த.வெ.க.

    * இந்த பூச்சாண்டி வேலைகள் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா, கெத்தா தேர்தலை சந்திக்க வாங்க சார்.

    * கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் நீங்களா...? இல்லை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டின் உள்ளும் இருக்கும் நானா...? என பார்த்துவிடலாம் சார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல் மூட்டைகள் பல ஆண்டுகளாக மழையில் நனையும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுத்தீர்களா?
    • என் சொந்த மக்களை சந்திக்க எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள். நான் தனியாள் இல்லை.

    நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?

    * நாகை மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி, வேதாரண்யம் உப்பு ஏற்றுமதியை வளர்த்தெடுக்கவில்லையே ஏன்?

    * நாகையில் மூடப்பட்ட ரெயில் பெட்டி தொழிற்சாலையை திறந்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    * தஞ்சை, நாகை சாலை பணிகள் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது, அதை ஏன் முடிக்கவில்லை.

    * நெல் மூட்டைகள் பல ஆண்டுகளாக மழையில் நனையும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுத்தீர்களா?

    * உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சந்திக்க வர வேண்டும் என்பதற்காக தான் சனிக்கிழமையில் வருகிறேன்.

    * அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வுநாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.

    * அதை பேசாதீர்கள், இதை பேசாதீர்கள் என்றால் நான் எதைத்தான் பேசுவது?

    * பேருந்துக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே... மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள்.

    * என் சொந்த மக்களை சந்திக்க எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள். நான் தனியாள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் செயினை பறித்ததாக குற்றச்சாட்டு.
    • த.வெ.க. தொண்டர்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் இன்று நாகைப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். விஜய் பேச்சை கேட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, த.வெ.க. தொண்டர்கள் திடீரென வடமாநில வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார்.

    பெண் ஒருவர் மகளுடன் கூட்டத்திற்கு சென்றபோது, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த பெண்ணின் நகை கூர்ந்து கவனித்ததாகவும், இதனால் அந்த பெண் தன் மகளிடம் நகையை கழற்றி கொடுத்து பையில் வைக்கச் சொன்னதாகவும் தெரிகிறது.

    பையில் இருந்த நகையை வடமாநிலத்தவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் த.வெ.க. தொண்டர்கள் அந்த வாலிபரை அடித்து உதைத்துள்ளனர். ஆனால், அந்த நபரிடம் நகை இல்லை. நகையை பறிகொடுத்த அந்த பெண், அந்த வாலிபர் மற்றொரு நபரிடம் நகையை கொடுத்துவிட்டார். 4 சவரன் செயின் என அந்த பெண் அழுதபடியே தெரிவித்தார். மேலும், போலீசாரிடம் கூறியபோது அவர்கள் எந்த நடடிவக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

    முழு விசாரணைக்குப்பின்தான் என்ன நடந்தது என்பது தெரியும். இந்த சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    'டாணாக்காரன்' பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி மார்ஷல் படத்தில் நடிக்கிறார்.

    காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

    இதனிடையே, 'டாணாக்காரன்' பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்கிறார். இது கார்த்தியின் 29-வது படமாகும். இப்படத்திற்கு 'மார்ஷல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். படத்தின் வில்லனாக நடிகர் ஆதி பினிஷெட்டி நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்றது அது முடிவடைந்த நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.

    • வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரையில் சுற்றுலா பகுதிகளை முன்னேற்றம் செய்யலாம், செய்தார்களா...
    • நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம்.

    நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * மீனவர்களின் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக தி.மு.க. கிடையாது.

    * இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களை என பிரித்து பார்க்க நாம் பாசிச பா.ஜ.க.வும் கிடையாது.

    * பாரம்பரிய கடல்சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம், மீன் தொடர்பான ஆலை அமைத்திருக்கலாம்.

    * CM சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா..

    * ஒவ்வொரு முறை வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவரும் போதெல்லாம் சிரித்துக்கொண்டே பேசுகிறார் CM.

    * கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்காமல் சொந்த கும்பத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

    * வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரையில் சுற்றுலா பகுதிகளை முன்னேற்றம் செய்யலாம், செய்தார்களா...

    * நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம்.

    * மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?

    * நாகை மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

    * நாகை பேருந்து நிலையத்தில் சுகாதாரம் இல்லை, ரெயில் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை.

    * நான் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல, எப்போதோ வந்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம்.
    • மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை.

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் அவரது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கியது.

    இதில் அவரை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட காரணத்தினால் திருச்சி மாநகரம் ஸ்தம்பித்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை 7 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு 5 மணி நேரம் ஆனது. வழி நெடுகிலும் பிரசார வாகனத்தை பல்லாயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டனர்.

    நள்ளிரவு வெகுநேரம் ஆனதால் திருச்சி மற்றும் அரியலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டார். பெரம்பலூர் மாவட்ட பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் விஜயின் இரண்டாம் கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் இன்று நடைபெறுகிறது. இதற்காக விஜய் தனி விமானத்தில் இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 9:25 மணிக்கு வந்தடைந்தார். இன்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    ஆனால் இன்று முன்னெச்சரிக்கையாக துணை ராணுவப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நுழைவு வாயில் பகுதியிலேயே தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. விமான நிலைய பணியாளர்கள், அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், டிக்கெட் வைத்திருந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    மாநகருக்குள் நுழையாமல் புறநகர் பகுதி வழியாக செல்வதால் இன்று திட்டமிட்டபடி அவர் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் விஜய் கார் மூலம் புதுக்கோட்டை ரோடு மாத்தூர், சூரியூர் ரிங் ரோடு, துவாக்குடி டோல் கேட் வழியாக தஞ்சாவூர் பைபாஸில் நாகை வந்தார். இதைத்தொடர்ந்து பிரசார வாகனம் மூலம் விஜய் நாகை வந்தடைந்தார். புத்தூர் ரவுண்டானா பகுதியில் அலைஅலையாய் தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.

    நாகை வந்தடைந்த விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் வாளை பரிசாக அளித்தனர். அப்போது புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு த.வெ.க. தொண்டர்கள் வழிவிட்டனர்.

    இந்நிலையில் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் எல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க... தொண்டர்களை நலம் விசாரித்து விட்டு  உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதா அருளோடு பேசுகிறேன்.

    * அண்ணா அவர்களுக்கு ஒரு வணக்கம். பெரியார் அவர்களுக்கு ஒரு வணக்கம்.

    * என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

    * இப்ப நான் எந்த மண்ணில் நின்று கொண்டு இருக்கிறேன் தெரியுமா...

    * எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம்.

    * மதவேறுபாடு இல்லாத மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நாகை மக்களுக்கு சிரம் தாழ்ந்த ஸ்பெஷல் வணக்கம்.

    * என்றும் மீனவர்கள் நண்பன் நான்.

    * மீன் ஏற்றுமதியில் 2-வது இடம் வகிக்கும் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் எந்த வசதியும் செய்யப்படவில்லை.

    * மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை.

    * இலங்கை கடந்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நான் பேசியது குற்றமா?

    * மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் சமயத்தில் நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பது கடமை.

    * நாகப்பட்டினத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் புரட்சி என அடுக்குமொழியில் பேசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று இந்தியா- ஓமன் அணிகள் மோதினர்.
    • இந்த போட்டியில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது குரூப் கடைசி லீக் போட்டியில் ஓமனை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய ஓமன் அணி 167 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக டாஸ் போடும் போது இரு அணி கேப்டன்களும் லெவனில் ஆடும் வீரர்களை மறந்து விட்டனர். அதன்படி டாஸ் போடும் போது இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்று ஹர்ஷித் ராணா மற்றும் மற்றொரு வீரர் என சூர்யகுமார் யோசிக்க ஆரமித்தார். சிரித்தப்படியே அட கடவுளே.. நான் ரோகித் போல ஆகிவிட்டேன் என கூறி சிரித்தார்.

    அதன்பிறகு ஓமன் அணி கேப்டனிடன் எத்தனை மாற்றங்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரும் 2 மாற்றம் என கூறி விட்டு ஒரு வீரரை மறந்து விட்டார். சிரித்து கொண்டே இரண்டு மாற்றம் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது.
    • இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை.

    பாவ்நகர்:

    பிரதமர் மோடி, குஜராத்தின் பாவ்நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

    இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான். வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நாட்டின் தோல்வியும் அதிகமாகும். நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால் நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கான தீர்மானத்தை மற்றவர்களைச் சார்ந்து இருக்க விட்டுவிட முடியாது. இந்த சார்பு எதிரியை நாம் ஒன்றாக தோற்கடிக்க வேண்டும். இதற்கு சுயசார்பு இந்தியாதான் ஒரே தீர்வாகும்.

    இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியர்களின் அனைத்து ஆற்றலையும் காங்கிரஸ் புறக்கணித்தது. இதனால் சுதந்திரம் அடைந்து 6 முதல் 7 தசாப்தங்களுக்குப் பிறகும் இந்தியா அதற்கு தேவையான வெற்றியை அடையவில்லை. காங்கிரஸ் அரசின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×