என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மறு சீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது.
- அம்மா உணவகங்கள் மறு சீரமைப்புக்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த உணவகங்களில் உள்ள பாத்திரங்கள், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பழுதாகிவிட்டன.
இதனால் உணவு தரமாக தயாரிக்க முடியவில்லை. இதன் காரணமாக விற்பனை குறைந்தது.
இந்த நிலையில் அனைத்து அம்மா உணவகங்களையும் சீர்ப்படுத்த மாநகராட்சி நிதி ஒதுக்கியது. இதையடுத்து புதிதாக பொருட்கள் வாங்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து அம்மா உணவகங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள்.
காலை, மதியம், இரவு என 3 வேளையும் சுவையான உணவு தயாரித்து வழங்கப்படுவதால் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் அதிகளவில் உணவு அருந்துகிறார்கள்.
மறு சீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படுகிறது. இது உடனே விற்று தீர்ந்து விடுகிறது. பெரும்பாலானவர்கள் இரவில் சப்பாத்தி சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
அம்மா உணவகங்கள் மறு சீரமைப்புக்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளது. 30 உணவகங்களில் மட்டும் தான் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. அங்கு தினமும் ரூ.200 முதல் ரூ.500 வரை வியாபாரம் நடக்கிறது. குறைந்த அளவில் விற்பனை நடந்தாலும் அதனை மூட வேண்டாம் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூடிய அளவிற்கு கூட விற்பனை இல்லை. ஆனாலும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். 3030 பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் 2 ஷிப்டு அடிப்படையில் பணி செய்கின்றனர். தினக் கூலியாக அவர்களுக்கு ரூ.325 நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மாதத்திற்கு சுமார் 30 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது.
- விஜயை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாலிபர் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த நீலாங்கரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. நேற்று மாலை இந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (வயது 24) என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. அவர் எப்படி விஜய் வீட்டுக்குள் நுழைந்து மொட்டை மாடிக்கு சென்றார்? என தெரியவில்லை. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்த போலீசாா், மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாலிபர் வீட்டிற்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, விஜய் வீட்டில் வாலிபர் நுழைந்தது எப்படி? என காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
திரைப்படம் இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து படத்தை கொண்டாடினர். இந்தியாவில் தயாரித்த ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூல் பெற்ற படம் இதுவே என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
இந்நிலையில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது.
- நாளை 2-கட்ட பிரசாரத்தை நாகையில் விஜய் மேற்கொள்கிறார்.
- புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய மாவட்ட காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 'மக்கள் சந்திப்பு பிரசாரம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி உள்ளார். அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த பிரசாரம் சனிக்கிழமை நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை 2-கட்ட பிரசாரத்தை நாகையில் விஜய் மேற்கொள்கிறார். இதற்காக கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் தமிழக வெற்றிக்கழகத்தினர் போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர்.
இந்த நிலையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய மாவட்ட காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், தனியார் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் தொண்டர்கள் நடந்து கொள்ளக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட காவல் துறை விதித்துள்ளது.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கான இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புத்தூர் ரவுண்டானாவில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதியளித்த நிலையில், அண்ணா சிலை அருகே உரையாற்ற த.வெ.க.வினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
த.வெ.க.வினரின் கோரிக்கையை அடுத்து புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்ற காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
புத்தூர் அண்ணா சிலைக்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என த.வெ.க.வினர் ஒப்புதல் அளித்தனர்.
அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையை உருவாக்கி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். இதனை தொடர்ந்து நடிப்பில் தீவிரம் கவனம் செலுத்தி வந்த ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46.
ரோபோ சங்கரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் கல்லீரல் செயலிழந்ததால் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோபோ சங்கரின் உயிரிழப்பு, கல்லீரல் நோய்களின் தீவிரத்தையும், சரியான சிகிச்சையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...
கல்லீரல், கல்லீரல் நோய்களின் தீவிரம், சரியான சிகிச்சையும் முக்கியத்துவமும்
கல்லீரல் கொழுப்பு நோய் இரண்டு வகைகளாக உள்ளது:
ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.
ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய்:
அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படுகிறது. மது, உடலுக்கு தேவையற்ற நச்சாக செயல்படுவதால், கல்லீரல் அதை வெளியேற்ற முயல்கிறது. இதனால் கல்லீரல் செல்கள் சேதமடைந்து, கொழுப்பு படிந்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மேலும் மோசமடைந்தால், ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ் உருவாகலாம்.
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்:
மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், உடல் பருமன், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கை, இரண்டாம் வகை சர்க்கரை நோய், உயர் கொலஸ்ட்ரால், முறையற்ற உணவு முறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
தொடக்கத்தில் இந்நோய் அறிகுறிகளைக் காட்டாவிட்டாலும், முற்றிய நிலையில் சோர்வு, பலவீனம், வயிற்று வலி, மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல் போன்றவை தோன்றலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
கல்லீரல் வீக்கம்:
கல்லீரல் வீக்கம் பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ வைரஸ்கள், பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மூலமாகவோ, ஒரே சவரக்கத்தியை பலர் பயன்படுத்துவதாலோ பரவலாம். மேலும், அதிக மது அருந்துதல் மற்றும் மருத்துவர் பரிந்துரை இல்லாத மருந்துகளை உட்கொள்வதும் இந்நோயை உருவாக்கலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி போன்றவை இந்நோயை குணப்படுத்துவதாக நம்புவது தவறு, ஏனெனில் இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
கல்லீரல் சிரோசிஸ்:
கல்லீரல் சிரோசிஸ் என்பது கல்லீரல் திசுக்கள் வடு திசுக்களாக மாறி, நிரந்தரமாக சேதமடையும் நிலை. இதை குணப்படுத்த எந்த நாட்டு மருந்தும் இல்லை. இந்நிலையில் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டு, புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கும். உடனடி மருத்துவ சிகிச்சை மட்டுமே இதற்கு தீர்வு.
கல்லீரல் செயலிழப்பு:
கல்லீரல் செயலிழப்பு என்பது நோயின் இறுதி மற்றும் மிக ஆபத்தான நிலை. இதற்கு நாட்டு மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ தீர்வாகாது. ஒரே தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே. இந்நிலையில் நாட்டு மருந்துகளை நம்புவது உடலில் நச்சுக்களை அதிகரித்து, ரத்தப்போக்கு, சிறுநீரக செயலிழப்பு போன்ற அவசர நிலைகளை உருவாக்கலாம்.
- ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
- ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.
டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், பின்னாளில் 'தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வந்தார். 'மாரி', 'விசுவாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.
'அம்பி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு வர காத்திருந்தது.
கட்டுமஸ்தான உடல் கொண்ட ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.
ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. 'வெண்டிலேட்டர்' கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.
ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் தாமு, தனுஷ், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ, கவிஞர் சினேகன், நடிகர் ராதாரவி, சிவகார்த்திகேயன், காளி வெங்கட், நடிகை நளினி, சின்னத்திரை நடிகர் தீபக் மற்றும் துணை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
- நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
- தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.
சென்னை:
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
நண்பர் ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
- கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வேலுநாச்சியார் சிலை நிறுவப்பட்டது.
- வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.50 லட்ச செலவில் நிறுவப்பட்ட வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
- சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரி மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை 5-வது முறையாக கடந்த 1-ந்தேதி எட்டியது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கீழணையில் இருந்து பல்வேறு ஓடைகள், மதகுகள் வழியாக வீராணம் ஏரிக்கு 470 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் கடந்த வாரம் வெயிலின் தாக்கத்தில் ஏரியின் நீர் மட்டம் குறைந்த நிலையில் தற்போது தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரி 6-வது முறையாக முழு கொள்ளளவான 47.40 அடியை எட்டியது.
சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வி.என். எஸ். மதகு மூலம் 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 470 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு 247 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் ஏரியின் மதகு, கரைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீராணம் ஏரி பகுதியில் 11 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,230-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 143 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
17-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 82,160
16-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,240
15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680
14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-09-2025- ஒரு கிராம் ரூ.141
17-09-2025- ஒரு கிராம் ரூ.142
16-09-2025- ஒரு கிராம் ரூ.144
15-09-2025- ஒரு கிராம் ரூ.143
14-09-2025- ஒரு கிராம் ரூ.143
- நல்லா குடும்பம் நடத்திவிட்டு, என் காலைவாரி விட்டுவிட்டு, கேட்டால் அவங்க யாருன்னே தெரியாது சொல்லிட்டீங்க.
- 2023-ம் ஆண்டு என்னிடம் ஒரு டீல் பேசுனீங்க.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
நல்லா குடும்பம் நடத்திவிட்டு, என் காலைவாரி விட்டுவிட்டு, கேட்டால் அவங்க யாருன்னே தெரியாது. அவங்களை காங்கிரஸ் அழைத்து வந்துள்ளது எனக்கு எதிராக அரசியல் செய்ய என்று ஒரு பச்சைப்பொய்யை சொல்லி தமிழ்நாட்டு மக்களை 14 வருஷமாக ஏமாற்றி வந்தீர்களே... அது யாரு ஏமாத்தினது.
2023-ம் ஆண்டு என்னிடம் ஒரு டீல் பேசுனீங்க. தி.மு.க. வந்துருச்சி. நீ எதுவும் பேசிறாத. சென்னை பக்கமே வந்துடாத. நான் மாதம் மாதம் ரூ.50,000 தந்துவிடுகிறேன் என்று டீல் பேசுனது யாரு. போட்டது யாரு... என்று ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.






