என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது.
- இந்த போட்டியின் போது தோனி மற்றும் ஜடேஜாவை தீபக் சாஹர் வம்பிழுத்தார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
156 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.1 ஓவரில் இலக்கை எட்டி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியின் போது தோனி மற்றும் ஜடேஜாவை தீபக் சாஹர் சீண்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 7 சீசன்களாக சென்னை அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இந்த முறை மும்பை அணியில் விளையாடுகிறார்.
இந்த நிலையில் தோனி பேட்டிங் செய்ய வரும் போது, அவர் அருகில் சென்று எதோ கிண்டல் செய்யும் விதமாக பேசினார். ஆனால் தோனி அதை கண்டுகொள்ளாமல் பேட்டிங் செய்வார். போட்டி முடிந்து செல்லும் தோனியிடம் தீபக் சஹார் சிக்கினார். அப்போது தோனி அவரை விளையாட்டுத்தனமாக மட்டையால் அடிக்க முயற்சி செய்வார். அதில் இருந்து தீபக் சாஹர் தப்பித்து விடுவார். அதனை சிரித்தப்படியே தோனி கடந்து செல்வார்.
தோனி மட்டுமல்லாமல் ஜடேஜாவையும் தீபர் சாஹர் கிண்டலடிப்பார். அப்போது ஜடேஜா பேட்டால் அவரை தாக்குவதுபோல் பாவலா காட்டுவார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை கேப்டன் ருதுராஜ் கையில் கொடுப்பார். அதனை வாங்கி கொண்ட ருதுராஜ், மறைத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்.
இந்த வீடியோவை வைத்து மும்பை ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் சென்னை அணி பால் டேம்பரிங் செய்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சூதாட்டத்தில் சிக்கியதாக 2 ஆண்டு சிஎஸ்கே அணி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் பால் டேம்பரிங் செய்ததாக பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.
- ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக், ஐதராபாத் அணியை முதலில் பேட் செய்ய பணித்தார். அதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. கடந்த ஆண்டு 3 முறை 250 ரன்களை கடந்து இருந்த ஐதராபாத் ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது. அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணி, கவுண்டி அணியான சுர்ரே (தலா 3 முறை) ஆகியவை உள்ளன.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர். 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரி இதுவாகும்.
ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி எடுத்த 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். ஏற்கனவே ஐதராபாத் அணி கடந்த ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.
- ஐதராபாத் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ஐ.பி.எல். தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. நேற்றைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 200-க்கும் அதிக ரன்களை அடித்தன. எனினும், ஐதராபாத் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.
இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி.
இதன் காரணமாக நேற்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. எனினும், சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வெற்றி மூலம் கடந்த 13 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி தான் வெற்றி பெற்று வருகிறது.
முன்னதாக 2012-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. அதன்பிறகு நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல். தொடர்களில் இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி மட்டுமே வெற்றி பெற்று வருகிறது.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி வருகிற வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
சென்னை:
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி வருகிற வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்துக்கொள்ளலாம். 1,700 முதல் 7,500 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.
சென்னை:
ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். தொடர்நது ரிக்கல்டன் 13 ரன்களில் வெளியேறினார். வில் ஜேக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.
சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்கள் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 155 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 2 ரன்களில் அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களில் வெறியேறினார். சிவம் துபே 9 ரன்களும், தீபக் ஹூடா 3 ரன்களும், சாம் கர்ரன் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 17 ரன்களில் வெறியேறினார். ராசின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இறுதியில் சென்னை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு இழந்து 158 ரன்கள் எடுத்தது.
இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
- சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.
ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ளன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கியது. இதில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.
இதற்கிடையே, ஆட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரின் 4வது பந்தில் டக் அவுட்டானார்.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனையை மும்பை வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார்.
அதன்படி, மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா மோசமான இடத்தை சமன் செய்துள்ளார்.
- டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.
சென்னை:
ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி 51 ரன் சேர்த்தது. சூர்யகுமார் 29 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். இருவரையும் நூர் அகமது அவுட்டாக்கினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
கடைசி கட்டத்தில் தீபக் சஹர் 28 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி சார்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை.
ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ளன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
இதற்கிடையே, சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் ரூ.10,000க்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதுவும், போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ரூ.4,000 டிக்கெட் பிளாக்கில் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பிளாக்கில் டிக்கெட்டை விற்பனை செய்த நபரின் வீடியோ வெளியானதால் ரிசகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார்.
- தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஐதராபாத்:
18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்து அசத்தியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார். டிராவிஸ் ஹெட் 67 ரன்னில் அவுட் ஆனார். இஷான் கிஷன் 106 ரன்னுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 76 ரன்கள் கொடுத்தார்.
இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஜோப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார்.
ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள்:
ஜோப்ரா ஆர்ச்சர்: 4-0-76-0
மொஹித் சர்மா: 4-073-0
பாசில் தம்பி: 4-0-70-0
- ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
- முதலில் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா டக் அவுட்டானார்.
சென்னை:
ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்குகிறது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி வருகிறது.
மும்பை அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஐதராபாத்:
ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் 3 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது.
4வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன்-துருவ் ஜுரல் ஜோடி பொறுப்புடன் ஆடி 111 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் அரை சதம் கடந்தனர். துருவ் ஜுரல் 70 ரன்னும், சஞ்சு சாம்சன் 66 ரன்னும் எடுத்தனர்.
6வது விக்கெட்டுக்கு ஹெட்மயர்-ஷ்உபம் துபே ஜோடி 80 ரன்களை சேர்த்துப் போராடியது. ஹெட்மயர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.






