என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • முதலாவதாக களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்நிலையில், முதலாவதாக களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    அதன்படி ஐதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

    • ஐபிஎல் போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • ஐதராபாத் அணியின் அதிரடியை தடுப்பதை பொறுத்தே டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, முதலாவதாக ஐதராபாத் அணி களமறிங்க உள்ளது.

    ஐதராபாத் அணியின் அதிரடியை தடுப்பதை பொறுத்தே டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 11-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
    • அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் இருந்தால், கிரிக்கெட்டின் திறமை பறிபோகும்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்த தொடரின் முதல் வெற்றியை குஜராத் பதிவு செய்தது.

    இப்போட்டி களிமண் ஆடுகளத்தில் நடத்தப்பட்டது குறித்து பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், "மும்பை அணிக்கு எதிரான மோதலுக்கு களிமண் ஆடுகளத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே எடுக்கப்பட்டது.

    ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட வகை கிரிக்கெட்டை அவர்கள் விளையாட விரும்பும் விதமும் அதில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    சிவப்பு மண் ஆடுகளத்தை விட களிமண் ஆடுகளம்தான் எங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும், எங்கள் அணியின் ஒட்டுமொத்த பலத்திற்கும் மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன.

    போட்டிகள் செல்லும் விதத்தைப் பார்த்தால், 240 முதல் 250 ரன்கள் ஸ்கோர் செய்யப்படுவதை நாம் பார்க்கிறோம். நாம் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கவேண்டும். அப்போது தான் ஆட்டம் சமநிலையுடன் இருக்கும். எல்லா ஆட்டங்களும் 240 - 250 ரன்கள் அடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வளவு அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் இருந்தால், கிரிக்கெட்டின் திறமை பறிபோகும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    • ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
    • ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.

    ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.

    அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.

    2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

    நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.

    அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.

    • ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது.
    • டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றது.

    இந்த ஆட்டத்தில் டோனி 9-வது வீரராக களம் இறங்கி 16 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 30 ரன் எடுத்தார். அவர் முன்னதாக களம் இறங்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. அஸ்வினுக்கு முன்னதாக கூட ஆட வராதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் டோனி முன்னதாக களம் இறங்க வேண்டும் என்று டெலிவிசன் வர்ணனையாளரும், சி.எஸ்.கே. முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் ஜியோ ஹாட் ஸ்டார் நிகழ்ச்சியில் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஆர்.சி.பி.க்கு எதிராக டோனி 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார். இதைப் பார்க்கத்தான் சி.எஸ்.கே. ரசிகர்கள் வருகிறார்கள். அவர் முன்னதாக களம் இறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

    இந்த ஆட்டத்தில் அஸ்வினுக்கு முன்பாக டோனி களம் இறங்கியிருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை அவர் சந்தித்து இருக்க வேண்டும். கடைசி சில ஆண்டுகளில் தன்னால் அதிரடியாக விளையாட முடியும் என்று தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்.

    டோனி இன்னும் முன்னதாக களமிறங்கினால் அவரது திறமையை அதிகமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

    ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது. ருதுராஜ் சிறப்பான தொடக்க வீரர். ருதுராஜ் அழுத்தத்தில் ஆடினார். சாம் கரணை 5-வதாக ஆட வைப்பதும் கேள்விக்குறியே. 7-வது வரிசையில் விளையாட வைக்கலாம்.

    தற்போதைக்கு, சி.எஸ்.கே. அணியில் சமநிலை இல்லை. டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கியிருந்தால் வென்று இருக்கலாம்.

    இவ்வாறு வாட்சன் கூறினார்.

    • பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.
    • பெங்களூரு அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    முதல் போட்டியில் கொல்கத்தாவை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்திய பெங்களூரு, 2 ஆவது போட்டியில் சென்னையை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தியது.

    இப்போது 3 ஆவது போட்டியில் குஜராத் அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது,. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.

    லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள். அதாவது ஒரு போட்டி பெங்களூரில் அடுத்த போட்டி வெளியூரில் என ஆர்.சி.பி. அணி விளையாடும் போட்டிகளில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணை பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    ஆர்.சி.பி. அணி ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளது. ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணையை பாருங்கள். ஒருபோட்டி பெங்களூரில், அடுத்த வெளியூரில், மறுபடியும் பெங்களூரில் அடுத்தப்போட்டி வெளியூரில்.. இது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.

    இதுபோன்ற ஒரு சவாலான சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. ஆனால் அது அவர்களின் பலமாகவும் இருக்கலாம்.

    கொல்கத்தாவில் நடப்பு சாம்பியன் கே.கே.ஆர். அணியை வீழ்த்தினார்கள். சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தினார்கள். தற்போது நல்ல ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதல் இடத்தில உள்ளது" என்று தெரிவித்தார்.

    • 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும்.
    • டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் போட்டியில் விளையாட வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    மற்றொரு போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியி எதிர்கொண்டு விளையாடுகிறது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது.

    கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து நல்ல நிலைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    ஐ.பி.எல். தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் டைட்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
    • குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2017 முதல் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் ரஷித் கான் நேற்றைய போட்டியில் முதல் முறையாக 4 ஓவர்கள் முழுமையாக பந்துவீசவில்லை.

    20 ஓவர்கள் கொண்ட போட்டியில் ரஷித் கான் 4 ஓவர்களுக்கு குறைவாக பந்துவீசியது இதுவே முதல் முறை ஆகும். நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய ரஷித் கான் 10 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 160 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

    • ஹர்திக் பாண்ட்யாவுக்கும் சாய் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • நடுவர் குறுக்கிட்டு 2 வீரர்களையும் பிரித்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இப்போட்டியின் 14வது ஓவரை சாய் கிஷோர் வீசினார். அப்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கும் சாய் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பிட்ச்சிற்கு இடையே வந்து முறைத்து கொண்டனர். உடனே நடுவர் குறுக்கிட்டு 2 வீரர்களையும் பிரித்தார். பின்பு பாண்ட்யா போ என்பது போல சைகை செய்தார்.

    பின்னர் போட்டி முடிந்ததும் மோதலை மறந்துவிட்டு சாய் கிஷோரை ஹர்திக் பாண்ட்யா கட்டியணித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

    • நாங்கள் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை.
    • பீல்டிங்கில் சொதப்பியதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜராத் எடுத்துவிட்டது.

    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

    இந்நிலையில், குஜராத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:

    நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை பட்டியலிடுவது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் நாங்கள் பல தவறுகளை செய்தோம்.

    நாங்கள் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை. பீல்டிங்கில் சொதப்பியதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜராத் அணியை அடிக்க விட்டுவிட்டோம்.

    குஜராத் தொடக்க வீரர்கள் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்கள். குஜராத் அணி தங்களுக்கு தேவையான இலக்கை நிர்ணயித்து எங்களை கடும் நெருக்கடியில் ஆழ்த்தினர்.

    தற்போது ஐ.பி.எல். தொடர் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கின்றது. அதே சமயம், எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் ரன்களை குவிக்க வேண்டும். அவர்கள் விரைவில் அதை செய்வார்கள் என நான் நம்புகிறேன்.

    நான் அதிக அளவு பந்து வீசினேன். அப்போது பந்து ஆடுகளத்தில் நின்று வருகிறது என்பதை குஜராத் வீரர்கள் கவனித்திருப்பர். அந்த வகை பந்துகளை அடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஆடுகளத்தில் நிலையான பவுன்ஸ் இல்லை. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது என தெரிவித்தார்.

    • குஜராத் அணிக்கு எதிராக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.
    • சிஎஸ்கே அணியின் ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றவர் விக்னேஷ் புத்தூர்.

    இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.

    இந்நிலையில் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடிய விக்னேஷ் புத்தூர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, விக்னேஷ் புத்தூர் நீக்கப்பட்டதற்கு எதிராக இணைய தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

    இது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் ஓர் அதிர்ச்சியூட்டும் முடிவு. ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியை மிஸ் செய்கிறேன் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

    விக்னேஷ் புத்தூரை நீக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தவறு செய்ததால், குஜராத் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாகிவிட்டது எனவும் பதிவிட்டுள்ளனர்.

    ×