என் மலர்
நீங்கள் தேடியது "Sunriseers Hyderabad"
- ஐபிஎல் போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- ஐதராபாத் அணியின் அதிரடியை தடுப்பதை பொறுத்தே டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, முதலாவதாக ஐதராபாத் அணி களமறிங்க உள்ளது.
ஐதராபாத் அணியின் அதிரடியை தடுப்பதை பொறுத்தே டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 11-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






