என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மும்பைக்கு எதிராக முழுமையாக பந்துவீசவில்லை... ரஷித் கானுக்கு முதல் முறை...!
- குஜராத் டைட்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2017 முதல் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் ரஷித் கான் நேற்றைய போட்டியில் முதல் முறையாக 4 ஓவர்கள் முழுமையாக பந்துவீசவில்லை.
20 ஓவர்கள் கொண்ட போட்டியில் ரஷித் கான் 4 ஓவர்களுக்கு குறைவாக பந்துவீசியது இதுவே முதல் முறை ஆகும். நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய ரஷித் கான் 10 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 160 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.






