என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் வான்கடே மைதானத்தில் மும்பையை ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது.
    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியது

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் ஆர்சிபி அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது.

    இதேபோல் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் அரை சதம் அடித்து அசத்தினார். 37 ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விராட் 67 ரன்னில் பாண்ட்யா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

     இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ரோகித் சர்மா 17 ரன்களும், ரியான் ரிக்கல்டன் 17 ரன்களும், வில் ஜாக்ஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் 28 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த வர்மா, ஹர்திக் சிறப்பாக ஆடினர்.

    வர்மா 29 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்களும், ஹர்திக் 15 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 42 ரன்களும், மிட்செல் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. இதன்படி பெங்களூரு அணி ஐ.பி.எல். 2025 தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

    • முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 221 ரன்கள் குவித்தது.
    • விராட் கோலி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி அணி, விராட் கோலி (67), படித்தார் (64) , ஜித்தேஷ் சர்மா (40) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.

    முன்னதாக இந்த போட்டியில் தனது 2-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது படித்தார் மற்றும் விராட் கோலி களத்தில் இருந்தனர். அந்த ஓவரில் படித்தார் தடுத்து ஆடுவார். அப்போது பும்ரா அந்த பந்தை எடுத்து மறுமுனையில் இருந்த விராட் கோலி பக்கம் அடிக்க முயற்சிப்பார். சுதாரித்து கொண்ட விராட் கோலி கீரிஸ் உள்ளே சென்று விடுவார்.

    சிரித்தப்படி நடந்து வந்த பும்ராவிடம் விராட் கோலி என்னை அவுட் செய்ய பார்க்கிறாயா என்பது போல சிரித்தபடி பேசி செல்வார். இது தொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • விராட் கோலி, படித்தார் அரை சதம் விளாசினர்.
    • மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் அரை சதம் அடித்து அசத்தினார். 37 ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விராட் 67 ரன்னில் பாண்ட்யா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து கேப்டன் படித்தார் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். 25 பந்தில் படித்தார் அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜித்தேஷ் 40 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

    இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • விராட் கோலி, லிவிங்ஸ்டனை ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
    • 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 20ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    இந்த போட்டியில் 15ஆவது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். 3-ஆவது பந்தில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த இரண்டு விக்கெட்டுகள் மூலம் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    இன்றைய போடடியில் 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    • கிறிஸ் கெய்ல் 381 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்.
    • விராட் கோலி 386 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 20ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    இந்த போட்டியின் 3-ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டியபோது 18 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டியிலும் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    இதன்மூலம் டி20 போட்டியில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரரும், ஒட்டுமொத்தமாக 5ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    கிறிஸ் கெய்ல் (381 இன்னிங்ஸ்), அலேக்ஸ் ஹேல்ஸ் (474), சோயிப் மாலிக் (487), பொல்லார்டு (594) ஆகியோர் 13 அயிரம் ரன்களை கடந்துள்ளனர். விராட் கோலி 386 இன்னிங்கில் கடந்துள்ளார்.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • இதில் 19-ல் மும்பையும், 14-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    பெங்களூரு அணி மும்பையை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக 11 ஆட்டங்களில் ஆடியிருக்கும் பெங்களூரு அணி அதில் 3-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. அதனால் அந்த நீண்ட கால சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வரிந்து கட்டி நிற்பார்கள்.

    மொத்தத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் மும்பையும், 14-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.

    • பாகிஸ்தானுக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்தது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

    ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்தது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் மெதுவாக பந்து வீசியதற்காக பாகிஸ்தான் அணிக்கு ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • நான் ஏழு ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி இருக்கிறேன்.
    • எனது பந்துவீச்சிலும், எனது மனநிலையிலும் நான் நிறைய வேலைகளை செய்து இருக்கிறேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் ஒரு சமயம் எனக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்காதது ஜீரணிக்க முடியாததாக இருந்தது என சிராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது எனது சொந்த மைதானம். எனவே, எனக்கு இது சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது. இங்கு கூட்டத்தில் எனது குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அது எனது ஆட்டத்தை மேலும் உயர்த்த உதவியது. நான் ஏழு ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி இருக்கிறேன். எனது பந்துவீச்சிலும், எனது மனநிலையிலும் நான் நிறைய வேலைகளை செய்து இருக்கிறேன். அது இப்போது சிறப்பாக எனக்கு உதவி செய்கிறது.

    ஒரு சமயம் எனக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்காதது ஜீரணிக்க முடியாததாக இருந்தது.ஆனால் நான் எனது மனநிலையை மாற்றிக் கொண்டு எனது உடல் தகுதி மற்றும் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேலை செய்தேன். நான் என்ன தவறு செய்திருந்தாலும் அதை முன்னேற்றிக் கொண்டு எனது பந்துவீச்சை அனுபவித்து வீசினேன்.

    ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் தொடர்ந்து நமக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எப்போதுமே இருக்கும். ஆனால் என்னை நானே தேற்றிக்கொண்டு ஐபிஎல் இல் விளையாட வந்தேன். நாம் என்ன பந்து வீச முயற்சி செய்கிறோமோ அதை சரியாக செய்தால் நாம் உச்சத்தில் இருக்கலாம். பந்தை இன் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் செய்தால் அது நிச்சயம் வேலை செய்யும். இது எனக்கு நல்ல அனுபவமாக உள்ளது.

    என்றார் சிராஜ்.

    • சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் தோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்தது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போதே பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    லண்டன்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) பட்லர் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் இங்கிலாந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

    இதனையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து பட்லர் விலகுவதாக அறிவித்தார். அதன தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு கேப்டன் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் புதிய கேப்டனாக (ஒருநாள் + டி20) ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • ஒரு வீரருக்காக ஒரு அணியை விடுவது என்பது இந்த விளையாட்டுக்கு செய்யும் அநீதியாகும்.
    • 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் தோனியால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி கடந்த சில போட்டிகளில் அதிரடியாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். அவர் ஓய்வு பெற வேண்டும் என பரவலாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

    இந்த நிலையில் தோனி 35 வயதிலேயே ஓய்வு பெற்றுருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னார்ள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

     

    தோனி எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும். விக்கெட் கீப்பருடைய வயது 35 தான். அதற்கு நானே ஒரு உதாரணம். நான் ஒரு வீரராக விளையாடும்போது உச்சகட்டத்தில் விளையாடவில்லை என்றால் எனது மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்திக்கும். நீங்கள் 15 ஆண்டுகாலம் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இளம் தலைமுறையினர் உங்களைப் பார்த்து ஈர்க்கப்பட மாட்டார்கள்.

    2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் தோனியால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அவர்கள் அப்போதே அதை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

    ஒரு வீரருக்காக ஒரு அணியை விடுவது என்பது இந்த விளையாட்டுக்கு செய்யும் அநீதியாகும். அப்படி செய்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருக்கும். நான் இரண்டு, மூன்று சிஎஸ்கே போட்டிகளை பார்த்தேன். தோனி வரும்போது மிகப் பெரிய சத்தம் எழுந்தது.

    ஆனால் சிஎஸ்கே அணிக்கு இப்போது புள்ளிகள் தான் முக்கியம். அவர்கள் (சிஎஸ்கே) புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் தான் இது நடக்கிறது என்றால் நீங்கள் இந்த நேரத்தில் என்ன அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    என ரஷீத் லத்தீப் கூறினார்.

     

    • தொடர்ந்து 3 தோல்வியை சி.எஸ்‌.கே. அணி சந்தித்துள்ளது.
    • பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப இயலும்.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற் றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22- ந் தேதி தொடங்கியது.நேற்றுடன் 19 லீக் ஆட்டங் கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.

    2-வது ஆட்டத்தில் பெங்களூருவிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது. கவுகாத்தியில் விளையாடிய 3-வது போட்டியில் 6 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்றது. அதைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் 25 ரன்னில் வீழ்ந்தது. சி.எஸ். கே. 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்சை நாளை (செவ்வாய்க்கிழமை) நியூ சண்டிகரில் (முலான்பூர்) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.

    தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே. அதில் இருந்து மீளூமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    சென்னை சூப்பர் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. 4 போட்டியிலும். 2-வது தான் பேட்டிங் செய்தது. இதனால் நாளை போட்டியிலாவது அணுகுமுறையை மாற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பவர் பிளேயில் ரன் குவிப்பது மிகவும் அவசியமாகும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப இயலும்.

    பஞ்சாப் அணி சி.எஸ்.கேவை வீழ்த்தி 3- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் முறையே குஜராத் ( 11 ரன்), லக்னோவை (8 விக்கெட்) வீழ்த்தியது. 3- வது போட்டியில் ராஜஸ்தானிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது.

    அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமை யிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    ×