என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: 17 ஆண்டுகளுக்கு பிறகு CSK, 10 ஆண்டுகளுக்கு பிறகு MI - வரலாற்றை மாற்றி எழுதிய RCB
- கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் வான்கடே மைதானத்தில் மும்பையை ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது.
- 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியது
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம் ஆர்சிபி அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது.
இதேபோல் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story






