என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஒரே ஓவரில் 2 விக்கெட்: டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா
- விராட் கோலி, லிவிங்ஸ்டனை ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
- 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 20ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டியில் 15ஆவது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். 3-ஆவது பந்தில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த இரண்டு விக்கெட்டுகள் மூலம் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இன்றைய போடடியில் 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Next Story






