என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • நடிகை அனுஷ்கா சர்மா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • கணவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு அவரது கணவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில் அவர்," என் சிறந்த தோழி, என் வாழ்க்கைத் துணை, என் பாதுகாப்பான இடம், என் சிறந்த பாதி, என் அனைத்திற்கும், எங்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒளி நீ.. உன்னை நாங்கள் தினமும் அதிகமாக நேசிக்கிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே.." என குறிப்பிட்டிருந்தார்.

    • 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்கிறேன்” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    • இந்த வீடியோவை ஆர்.சி.பி. அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆர்.சி.பி. அணி டாப் 4-க்குள் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில், "சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்ற 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி,"தற்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல், இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், நீ சிங்கம் தான் பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை ஆர்.சி.பி. அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதனையடுத்து இந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சிம்பு, "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    • மேக்ஸ் வெல் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விளக்கியுள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் தெரிவித்தார்.

    மேக்ஸ் வெல் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே சமயம் 13 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

    • நடப்பு ஐ.பி.எல் தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது திறமையை வெளிக்காட்டினார்.
    • விக்னேஷ் புதூருக்கு பதிலாக ரகு சர்மாவை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 15 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்னேஷ் புத்தூர் அறிமுகமானார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது திறமையை வெளிக்காட்டினார். இதனால் அவரை பலரும் பாராட்டி வந்தனர்.

    இந்நிலையில் தான் காயம் காரணமாக விக்னேஷ் புத்தூர் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாதிப்பு என்றே கூறலாம். விக்னேஷ் புத்தூருக்கு பதிலாக ரகு சர்மாவை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 32 வயதான இவர், உள்ளூர் போட்டிகளில் பஞ்சாப் மற்றும் புதுச்சேரி அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 11 முதல் தர போட்டிகளில், 19.59 சராசரியுடன் 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.

    முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் சறுக்கியது. முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை பந்தாடியது. 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்டது.

    கடந்த ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 210 ரன் இலக்கை 14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம் (38 பந்தில் 101 ரன்) மற்றும் ஜெய்ஸ்வாலின் (70 ரன்) அரைசதத்தின் உதவியுடன் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.



    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (426 ரன்), ரியான் பராக், துருவ் ஜூரெல் நன்றாக ஆடுகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் 'இளம் சிங்கம்' சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி மைதானத்தை அதிர வைத்ததுடன், கிரிக்கெட் உலகை வியக்க வைத்தார். அவரது அதிரடி ஜாலம் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், ஹசரங்கா, தீக்ஷனா, சந்தீப் ஷர்மா நம்பிக்கை அளிக்கின்றனர்.

    மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற அந்த அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி சரியான தருணத்தில் நல்ல நிலைக்கு திரும்பி வலுவாக இருக்கிறது.

    மும்பை அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (427 ரன்), ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மா சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் கைகொடுக்கிறார்கள்.

    இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் ராஜஸ்தான் அணி அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். எனவே அந்த அணி உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக்காக வரிந்து கட்டும். அதே நேரத்தில் தங்களது உத்வேகத்தை தொடர மும்பை அணி முழு திறனையும் வெளிப்படுத்த முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் பலம் வாய்ந்த மும்பையின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் ராஜஸ்தான் எல்லா வகையிலும் அசத்த வேண்டியது அவசியமாகும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 15 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் தோற்றதில்லை. அந்த அணிக்கு எதிராக இங்கு நடந்த கடைசி 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் ஷர்மா, யுத்விர் சிங்.

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், கார்பின் பாஷ் அல்லது மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • வங்கதேசம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு அளிக்கப்பட்டது.

    சட்டோகிராம்:

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சீன் வில்லியம்ஸ் 67 ரன்னும், நிக் வெல்ஸ் 54 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டும், நயீம் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து, ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 444 ரன்கள் குவித்தது. ஷத்மான் இஸ்லாம் சதமடித்து 120 ரன்கள் எடுத்தார். மெஹதி ஹசன் மிராஸ் சதமடித்து 106 ரன்கள் அடித்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் வின்சென்ட் மசேகேசா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    217 ரன்கள் பின்னிலையுடன் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. வங்கதேச அணியினரின் அபார பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பென் கர்ரன் 46 ரன் எடுத்தார்.

    இதன்மூலம் வங்கதேசம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் வங்கதேசம் சமன் செய்தது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு அளிக்கப்பட்டது.

    • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

    புதுடெல்லி:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 72 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    முதலிடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.

    சென்னை அணி 10 போட்டியில் 2 வெற்றி, 8 தோல்வி என கடைசி இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறவில்லை

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய சி.எஸ்.கே. 190 ரன்களைக் குவித்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேயில் மீண்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஷேக் ரஷித் 11 ரன்னும், ஆயுஷ் மாத்ரே 7 ரன்னும், ஜடேஜா 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன் - பிரேவிஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 78 ரன்கள் சேர்த்த நிலையில் பிரேவிஸ் 32 ரன்னில் அவுட்டானார்.

    சாம் கர்ரன் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 47 பந்தில் 88 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பஞ்சாப் அணி சார்பில் 19வது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங், யான்சென் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.

    பிரியான்ஷ் ஆர்யா 23 ரன்னும், நேஹல் வதேரா 5 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 6வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

    • 19 ஆவது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    • சாஹல் வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தை எம்.எஸ். தோனி சிக்சர் விளாசினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிரடியாக விளையாடிய சாம் கரண் 47 பந்தில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இப்போட்டியில் 19 ஆவது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    சாஹல் வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தை எம்.எஸ். தோனி சிக்சர் விளாசினார். ஆனால் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹூடா 3ஆவது பந்தில் 2 ரன் அடித்தார். அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 5வது பந்தில் கம்போஜ், 6ஆவது பந்தில் நூர் அகமது ஆட்டமிழக்க சாகல் ஹாட்ரிட் விக்கெட்டுகளுடன் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    • சாம் கர்ரன் 47 பந்தில் 88 ரன்கள் விளாசினார்.
    • எம்.எஸ். தோனி 4 பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் அடித்தார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3ஆவது ஓவரில் சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய இந்த ஓவரின் 3ஆவது பந்தில் ரஷீத் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 21 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து சாம் கர்ரன் களம் இறங்கினார். யான்சன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மாத்ரே (7) ஆட்டமிழந்தார். பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஜடேஜா 17 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தபோதிலும் மறுமுனையில் சாம் கர்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு பிரேவிஸ் சப்போர்ட்-ஆக விளையாடினார். சாம் கர்ரன் 30 பந்தில் அரைசதம் அடித்தார். சென்னை அணி 11.1 ஓவரில 100 ரன்னைத் தொட்டது. பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஓமர்சாய் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 14.1 ஓவரில் 126 ரன்கள் எடுத்திருந்தது. 5ஆவது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் துபே ஜோடி சேர்ந்தார்.

    16-ஆவது ஓவரை சூர்யான்ஷ் ஷெட்ஜெ வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சாம் கர்ரன் சிக்சருக்கு தூக்கினார். சிஎஸ்கே 15.3 ஓவரில் 150 ரன்னை தொட்டது. 4ஆவது மற்றும் 5ஆவது பந்தை பவுண்டரி விரட்டினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 26 ரன்கள் கிடைத்தது.

    17ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 18ஆவது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த சாம் கர்ரன் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 47 பந்தில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 17.4 ஓவரில் 172 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து துபே உடன் எம்.எஸ். தோனி ஜோடி சேர்ந்தார்.

    19ஆவது ஓவரை சாகல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை எம்.எஸ். தோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். எம்.எஸ். தோனி 4 பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 3ஆவது பந்தில் 2 ரன் அடித்தார். அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 5வது பந்தில் கம்போஜ், 6ஆவது பந்தில் நூர் அகமது ஆட்டமிழக்க சாகல் ஹாட்ரிட் விக்கெட்டுன் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை அர்ஷ்தீப் வீசினார். இந்த ஓவரில் துபே ஆட்டமிழக்க சி.எஸ்.கே. 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க ஜோடி அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்துள்ளது.
    • சிஎஸ்கே 5 போட்டிகளில் கடைசி 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடி கடைசி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் எதிரணி தொடக்க வீரர்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அடித்த 46 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். ஒரு அணியின் தொடக்க ஜோடி கூட 50 ரன்களை தாண்டவில்லை.

    இதில் சென்னை அணி மிகவும் மோசம். இன்றைய தொடக்க ஜோடியான ரஷீத்- மாத்ரா ஜேதடி 21 ரன்கள் அடித்தது. 6 இன்னிங்சில் இதுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.

    • புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் 5ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:-

    ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ஜடேஜா, பிரேவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.

    பஞ்சாப் கிங்ஸ்:-

    பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், நெஹல் வதேரா, ஷஷாங்க் சிங், இங்கிலிஷ், மார்கோ யான்சன், சூர்யான்ஷ் ஷெட்ஜெ, ஓமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், சாகல், அர்ஷ்தீப் சிங்.

    ×