என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் சேர்த்தார்.
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் சூர்யகுமார் 467 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசமாக்கியுள்ளார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 117 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நடப்பு தொடரில் களம் இறங்கிய 11 ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து 11 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்காக 10 ஆட்டங்களில் தொடர்ந்து 25 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
மேலும் இந்த ஐ.பி.எல்.-ல் சூர்யகுமாரின் ரன் எண்ணிக்கை 467-ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத்தின் சாய் சுதர்சனிடம் (456 ரன்) இருந்து தட்டிப்பறித்தார்.
- 39 வயதான தவான் இந்திய அணிக்காக 269 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார்.
- ஆயிஷா முகர்ஜி- தவான் தம்பதி கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 39 வயதான தவான் 269 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார்.
தவான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜியை காதலித்து 2012-ம் ஆண்டில் கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இதற்கிடையே ஷிகர் தவான், அபுதாபியில் பணியாற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோபி ஷைன் என்ற பெண்ணின் காதல் வலையில் விழுந்து இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தன. இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் ஷிகர் தவான், சோபி ஷைனுடனான காதலை உறுதிப்படுத்தி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டு அதில், 'என் அன்பே' என்று பதிவிட்டுள்ளார். விரைவில் இருவரும் இல்வாழ்க்கையில் இணைவார்கள் என்று தெரிகிறது.
சோபி ஷைன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். தயாரிப்பு ஆலோசகராக இருக்கிறார். இவர் நார்தன் டிரஸ்ட் கார்ப்பரேஷன் என்ற அமெரிக்க நிதி நிறுவனத்தின் இரண்டாவது துணைத் தலைவராகவும் இருக்கிறார். ஷிகர் தவான் துபாய்க்குச் சென்றிருந்த போது, அங்கு சோபி ஷைனை சந்தித்ததாகவும், அதன் பின் அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து, பின்னர் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஷிகர் தவானின் இந்த புதிய வாழ்க்கைக்கு ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
- 9 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் டாப்-4 இடத்திற்குள் உள்ளது.
- கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 3 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மொத்தமுள்ள 70 லீக்கில் இதுவரை 50 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆனால் எந்த அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) இன்னும் உறுதி செய்யவில்லை.
ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் ஆடுகின்றன. இதில் அதிகாரபூர்வமாக 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவை. குறைந்தது 8 வெற்றியாவது பெற வேண்டும். தற்போது லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்குவதால், இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் முக்கியத்துவம் பெறும்.
இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மல்லுகட்டுகின்றன.
9 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் டாப்-4 இடத்திற்குள் உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 209 ரன்கள் குவித்தும், சூர்யவன்ஷியின் 35 பந்து சதத்தால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. ஆனாலும் குஜராத்தை பொறுத்தவரை பேட்டிங்கில் மிக வலுவாக காணப்படுகிறது. கேப்டன் சுப்மன் கில் (4 அரைசதத்துடன் 389 ரன்), சாய் சுதர்சன் (5 அரைசதம் உள்பட 456 ரன்), ஜோஸ் பட்லர் (406 ரன்) அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். கடந்த ஆட்டத்தில் முதுகுவலியால் பீல்டிங் செய்ய வராத சுப்மன் கில், இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித்கான் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 3 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வென்றால் தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் சிக்கல் தான்.
தனது கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சை 154 ரன்னில் மடக்கிய ஐதராபாத் அணி அந்த இலக்கை 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஹர்ஷல் பட்டேலின் 4 விக்கெட்டும், இஷான் கிஷனின் அதிரடியும் (44 ரன்) வெற்றிக்கு உதவின. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென், இஷான் கிஷன் ஆகிய சூறாவளி பேட்ஸ்மேன்கள் ஒருசேர மிரட்டினால் எழுச்சி பெறலாம். பந்து வீச்சில் கேப்டன் கம்மின்ஸ் முழுமையாக கைகொடுக்க வேண்டியது அவசியம். 4 ஆட்டங்களில் அவருக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை. இதே போல் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பந்து வீச்சும் (8 ஆட்டத்தில் 6 விக்கெட்) எடுபடவில்லை.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஐதராபாத்தில் சந்தித்த லீக்கில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பதம் பார்த்தது. அதற்கு அவர்களது இடத்தில் வட்டியும், முதலுமாக பதிலடி கொடுக்க ஐதராபாத் வீரர்கள் தீவிரம் காட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
மொத்தத்தில் இவ்விரு அணிகளும் 5 முறை நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 4-ல் குஜராத்தும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ராகுல் திவேதியா, கரிம் ஜனத் அல்லது ரூதர்போர்டு, ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா அல்லது அர்ஷத் கான்.
ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, காமிந்து மென்டிஸ் அல்லது வியான் முல்டெர், நிதிஷ்குமார் ரெட்டி, கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனட்கட், முகமது ஷமி, ஜீசன் அன்சாரி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 48 ரன்கள் சேர்த்தார்.
நடப்பு தொடரில் களம் இறங்கிய 11 ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல்லில் தொடர்ந்து 11 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் 2014-ம் ஆண்டில் ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்காக 10 ஆட்டங்களில் தொடர்ந்து 25 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நடப்பு ஐ.பி.எல்லில் சூர்யகுமாரின் ரன் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்தது. இதையடுத்து, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத்தின் சாய் சுதர்சனிடம் (456 ரன்) இருந்து தட்டிப் பறித்தார்.
- ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை பஞ்சாப்பும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.
ராஜஸ்தான் அணி 11 போட்டியில் 3 வெற்றி, 8 தோல்வி என எட்டாவது இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.
- சந்தீப் சர்மா இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்விகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்த சந்தீப் சர்மா கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்தீப் சர்மா இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி வெறும் 9 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மாவுக்கு பதில் ஆகாஷ் மத்வால் சேர்க்கப்பட்டார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்தது.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் குவித்தது.
ஜெய்ப்பூர்:
18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது.
முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா- ரிக்கல்டன் ஜோடி 116 ரன்கள் சேர்த்த நிலையில் ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோகித் 53 ரன்களில் அவுட்டானார்.
அடுத்து இணைந்த சூரியகுமார் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி கடைசி வரை நின்றது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
ஹர்திக் பாண்ட்யா, சூரியகுமார் தலா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் ஓவரில் அதிரடி வீரர் சூர்யவன்ஷி டக் அவுட்டானார். 2வது ஓவரில் 2 சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 4வது ஓவரில் நிதிஷ் ரானா, 5வது ஓவரில் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் அவுட்டாகினர்.
அடுத்து வந்த ஷுபம் துபே, துருவ் ஜுரலும் நிலைத்து நிற்கவில்லை
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் 6-வது தொடர் வெற்றி இதுவாகும். அத்துடன், புள்ளிப்பட்டியலிலும் மும்பை அணி முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.
- 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- ராஜஸ்தான் அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை.
18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் - ரிக்கல்டன் களம் இறங்கினர்.
நிதானமாக விளையாடிய ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோகித் 53 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக சூரியகுமார் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய பாண்ட்யா 48 ரன்களும் சூரியகுமார்42 ரன்களும் அடித்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் பராக், தீக்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையது ராஜஸ்தான் அணியில் வைபவ் சூரியவன்ஷி - ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறினார்.
14 வயதே ஆனா வைபவ் சூர்யவன்ஷி குஜராத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 35 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்த போட்டியிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
- நிதானமாக விளையாடிய ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது.
- அதிரடியாக விளையாடிய ரோகித் 53 ரன்கள் அடித்து அவுட்டானார்.
18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் - ரிக்கல்டன் களம் இறங்கினர்.
நிதானமாக விளையாடிய ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோகித் 53 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக சூரியகுமார் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய பாண்ட்யா, சூரியகுமார் ஆகியோர் தலா 48 ரன்கள் அடித்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் பராக், தீக்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 11.1 ஓவர் முடிவில் 112 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
- ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில ரோகித் உள்ளார்.
18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் - ரிக்கல்டன் களம் இறங்கினர்.
நிதானமாக விளையாடிய ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோகித் 53 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் மும்பை அணிக்காக 6000 ரன்களை கடந்து ரோகித் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில ரோகித் உள்ளார். ஆர்,சி.பி. அணிக்காக விளையாடி வரும் கோலி இதுவரை 8447 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.
- பெண்களை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.
18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. பெண்களை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.
இந்த போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளாசும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளில் சூரிய சக்தி தகடுகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
- இன்று ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தால் அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும்.
18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்டது.
ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 210 ரன் இலக்கை 14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டலான சதத்தால் 15.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.
அதனால் இன்றைய ஆட்டத்திலும் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் ரேசில் முன்னணியில் உள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றிபெற மும்பை அணி முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் ராஜஸ்தான் அணி அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.






