என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மீண்டும் காதல் வலையில் சிக்கிய ஷிகர் தவான்.. வைரலாகும் புகைப்படம்
- 39 வயதான தவான் இந்திய அணிக்காக 269 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார்.
- ஆயிஷா முகர்ஜி- தவான் தம்பதி கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 39 வயதான தவான் 269 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார்.
தவான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜியை காதலித்து 2012-ம் ஆண்டில் கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இதற்கிடையே ஷிகர் தவான், அபுதாபியில் பணியாற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோபி ஷைன் என்ற பெண்ணின் காதல் வலையில் விழுந்து இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தன. இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் ஷிகர் தவான், சோபி ஷைனுடனான காதலை உறுதிப்படுத்தி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டு அதில், 'என் அன்பே' என்று பதிவிட்டுள்ளார். விரைவில் இருவரும் இல்வாழ்க்கையில் இணைவார்கள் என்று தெரிகிறது.
சோபி ஷைன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். தயாரிப்பு ஆலோசகராக இருக்கிறார். இவர் நார்தன் டிரஸ்ட் கார்ப்பரேஷன் என்ற அமெரிக்க நிதி நிறுவனத்தின் இரண்டாவது துணைத் தலைவராகவும் இருக்கிறார். ஷிகர் தவான் துபாய்க்குச் சென்றிருந்த போது, அங்கு சோபி ஷைனை சந்தித்ததாகவும், அதன் பின் அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து, பின்னர் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஷிகர் தவானின் இந்த புதிய வாழ்க்கைக்கு ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.






