என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

மோசம்..! மோசம்..! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-யின் தொடக்க ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் 21-தான்..!
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க ஜோடி அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்துள்ளது.
- சிஎஸ்கே 5 போட்டிகளில் கடைசி 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடி கடைசி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் எதிரணி தொடக்க வீரர்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அடித்த 46 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். ஒரு அணியின் தொடக்க ஜோடி கூட 50 ரன்களை தாண்டவில்லை.
இதில் சென்னை அணி மிகவும் மோசம். இன்றைய தொடக்க ஜோடியான ரஷீத்- மாத்ரா ஜேதடி 21 ரன்கள் அடித்தது. 6 இன்னிங்சில் இதுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.
Next Story






