என் மலர்
நீங்கள் தேடியது "மெஹிதி ஹசன் மிராஸ்"
- வங்கதேசம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு அளிக்கப்பட்டது.
சட்டோகிராம்:
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சீன் வில்லியம்ஸ் 67 ரன்னும், நிக் வெல்ஸ் 54 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டும், நயீம் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து, ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 444 ரன்கள் குவித்தது. ஷத்மான் இஸ்லாம் சதமடித்து 120 ரன்கள் எடுத்தார். மெஹதி ஹசன் மிராஸ் சதமடித்து 106 ரன்கள் அடித்தார்.
ஜிம்பாப்வே சார்பில் வின்சென்ட் மசேகேசா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
217 ரன்கள் பின்னிலையுடன் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. வங்கதேச அணியினரின் அபார பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பென் கர்ரன் 46 ரன் எடுத்தார்.
இதன்மூலம் வங்கதேசம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் வங்கதேசம் சமன் செய்தது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு அளிக்கப்பட்டது.
- வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
- இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்கா:
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ,நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, மயங்க் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் ஜிதேஷ் சர்மா பேக்கப் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மயங்க் யாதவ் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் வீரர்கள் விவரம் வருமாறு:
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன் தமிம், பர்வேஸ் ஹொசைன் எமான், தவ்ஹித் ஹிருடோய், மஹ்மதுல்லா, லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ஷேக் மெஹிதி ஹசன், ரிஷத் ஹொசைன், முஸ்தபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.
14 மாத இடைவெளிக்கு பிறகு ஆல் ரவுண்டரான மெஹிதி ஹசன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
முக்கிய வீரரான ஷகிப் அல் ஹசன் டி20 போட்டியில் இருந்து சமீபத்தில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.






