என் மலர்
விளையாட்டு
- இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் டி20 போட்டி பெங்களூருவின் நாளை நடக்கிறது.
- பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மோதுகிறது. இதில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது.
இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ரிஷப் பண்ட் இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். அவர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் ஆகியோருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓராண்டுக்கும் மேலாக விலகி உள்ளார். ஆனாலும் அவர் அடிக்கடி இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் மைதானத்திற்கு வந்து சக வீரர்களுடன் பேசி மகிழ்வார். அந்த வகையில் இப்போது இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்துள்ளார்.
- 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது.
- 32 வயதான நசிர் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
துபாய்:
அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது. ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி (மேட்ச் பிக்சிங்), ரகசிய தகவல் பரிமாற்றம், சூதாட்டம் நோக்கில் சந்தேக நபர்கள் அணுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான இந்தியாவின் கிரிஷன் குமார் சவுத்ரி, பராக் சங்வி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ரிஸ்வான் ஜாவித், சலியா சமன், பேட்டிங் பயிற்சியாளர் அசார் ஜாய்தி, உதவி பயிற்சியாளர் சன்னி தில்லான், அணி மேலாளர் ஷதப் அகமத் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் 32 வயதான நசிர் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் சந்தேகத்துக்குரிய நபரிடம் இருந்து பெற்ற விலை உயர்ந்த பரிசுப்பொருள் விவரத்தை மறைத்து ஊழல் தடுப்பு விதியை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) குற்றம் சுமத்தியது. அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், நசீர் ஹூசைன் இரண்டு வருடங்கள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹொசைன் 2011 மற்றும் 2018 க்கு இடையில் வங்காளதேசத்திற்காக 115 போட்டிகளில் விளையாடி, 2,695 ரன்கள் மற்றும் 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இவரது தடைக்காலம் 2025 -ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னர் அவர் ஓய்வு பெறாவிட்டால் அதன்பின் கிரிக்கெட்டை மீண்டும் தொடர முடியும்.
- சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் டோனிக்கு ஏற்கனவே அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- ரோகித்துடன் நான் இணைந்து விளையாடிய போது மறுமுனையில் இருந்து அவர் எனக்கு பல ஆதரவை கொடுத்திருக்கிறார்.
- ரோகித் கொடுத்த ஆதரவால் தான் நான் நல்ல தொடக்கத்தை அணிக்காக கொடுத்திருக்கிறேன்.
மும்பை :
இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் இணைந்து பல நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள்.இந்த ஜோடி 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 5148 ரன்கள் இணைந்து குவித்துள்ளனர். இந்த நிலையில் ஷிகர் தவான், தன்னுடைய இடத்தை அணியில் இருந்து இழந்தார். அவருக்கு பின் கில் நன்றாக விளையாடினாலும் இன்னும் டி20, டெஸ்ட் என அனைத்து போட்டிகளிலும் ஷிகர் தவானுக்கு மாற்று வீரனை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில் தமது வெற்றிக்கு ரோகித் சர்மா பங்கு இருப்பதாக ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது:-
ரோகித்துடன் நான் இணைந்து விளையாடிய போது மறுமுனையில் இருந்து அவர் எனக்கு பல ஆதரவை கொடுத்திருக்கிறார். ரோகித் கொடுத்த ஆதரவால் தான் நான் நல்ல தொடக்கத்தை அணிக்காக கொடுத்திருக்கிறேன். பெரிய ஸ்கோரை சேஸ் செய்வதிலும் சரி பெரிய ஸ்கோர் எடுப்பதிலும் சரி நாங்கள் அடித்தளம் நன்றாக அமைத்தோம்.
அதற்கு காரணம் ரோகித்தின் ஆதரவு தான். என்னுடைய பல சிறந்த செயல்பாடுகளுக்கு ரோகித்தின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்காது. இதற்காக ரோகித்துக்கு அந்த பாராட்டுகளை கூற நான் கடமைப்பட்டு இருக்கிறேன். நானும் ரோகித்தும் இணைந்து பல இன்னிங்ஸ் வரை ஆடியிருக்கிறோம்.
அதில் குறிப்பாக மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது ஒருநாள் போட்டியில் நாங்கள் இருவரும் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அது எங்களுடைய சிறந்த ஆட்டமாக நான் பார்க்கிறேன். இரண்டாவது சிறந்த ஆட்டம் என்றால் 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் நானும் ரோகித் சர்மாவும் இணைந்து 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அது சிறந்த இன்னிங்ஸ்தான்.
என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
தற்போது தவான் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும் வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு அதன் அணிக்கு வெற்றியை பெற்று தர போராடுவார்.
- நம்மிடம் இருக்கும் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.
- ரன் சேர்க்க வேண்டும் என்றால் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.
லாகூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்று ரசிகர்கள் சுப்மன் கில்லை பாராட்டி வரும் நிலையில் அதற்கு ஏற்றார் போல் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பாக கில் விளையாடினார்.
ஆனால் சமீப காலமாக கில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படி தான் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது என கில் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவரிடம் உள்ள திறமைக்கு அவர் அநியாயம் செய்து வருகிறார். கில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் நம்மிடம் இருக்கும் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைக்கிறார். 20 ரன்கள் அடித்து விட்டு அதன் பிறகு ஒரு தேவையில்லாத ஷாட் அடி ஆட்டமிழந்து விடுகிறார். கடந்த ஆண்டு கில் நன்றாக விளையாடிய போது இந்த தவறை அவர் செய்யவில்லை. ரன் சேர்க்க வேண்டும் என்றால் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.
எந்த ஸ்பெஷல் ஷார்ட்டும் ஆடாமல் தொடர்ந்து பேட்டிங் செய்தாலே ரன்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அனைத்து பந்து உங்களுடைய இஷ்டத்திற்கு விளையாட கூடாது என்பதை கில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பந்திற்கும் எப்படி விளையாட வேண்டும் என்பதை ரியாக்ட் தான் செய்ய வேண்டும். தவிர இப்படி தான் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
என்று சல்மான் பட் கூறியுள்ளார்.
- சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார்.
- சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் அயிட்டனா பொன்மதி வென்றார்.
லண்டனில் 2023-ம் ஆண்டுக்கான பிபா-வின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலண்ட்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இருவருமே 48 புள்ளிகள் பெற்றிருந்தனர். ஆனால், அதிக தேசிய அணியின் கேப்டன்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் அவர் விருத்தினைத் தட்டிச் சென்றார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். சிறந்த அணியின் மேலாளர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் பெப் கார்டியோலா வென்றார்.
சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார். சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் அயிட்டனா பொன்மதி வென்றார்.
- கேப்டன் ரோகித் சர்மா 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார்.
- நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பெங்களூரு:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொகாலியில் நடந்த முதல் போட்டி மற்றும் இந்தூரில் நடந்த 2-போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது.
இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. தொடரை முழுமையாக ( ஒயிட்வாஷ்) கைப்பற்றும் வேட்கையில் உள்ளது.
கடந்த 2 போட்டியிலும் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் ஷிவம் துபே, ஜெய்ஷ்வால் ஆகியோரும், பந்துவீச்சில் அக்ஷர் படேல், அர்ஷ்தீப்சிங் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
கேப்டன் ரோகித் சர்மா 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் இந்த போட்டியில் ரன்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜிதேஷ் சர்மா இடத்தில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ், ஆவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். முகேஷ்குமார், பிஷ்னோய் கழற்றி விடப்படலாம்.
இப்ராகிம் சர்தான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும 7 முறை மோதிய போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ்-18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
- புரோ கபடி லீக்கின் 1000-வது போட்டி இதுவாகும்.
ஜெய்ப்பூர்:
புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ளன.
பாட்னா பைரேட்ஸ் அதிகபட்சமாக 3 முறையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 3 தடவையும், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.
10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. அதை தொடர்ந்து பெங்களூரு, புனே, சென்னை, நொய்டா, மும்பையில் நடைபெற்றன. 7-வது கட்ட போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூல் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. புரோ கபடி லீக்கின் 1000-வது போட்டி இதுவாகும். இதையொட்டி அஜய் தாக்கூர், அனுப்குமார், சேரலாதன், மஞ்சித் சில்லர், ரிஷங் தேவதிகா ஆகிய முன்னாள் பிரபல வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
1000-வது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 35-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களுருவை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 6-வது வெற்றியாகும். பெங்களூருக்கு 8-வது தோல்வி ஏற்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர்-மும்பை அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 31-29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர் அணி பெற்ற 9-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்த அணி 53 புள்ளிகளுடன் புனேயை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றது. புனே அணி 52 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி (43 புள்ளி), குஜராத் (39), அரியானா (39), பெங்கால் (38), அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் வெற்றி பெற்றார்.
மெல்போர்ன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.
இதில் நாகல் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டனாக எம்.எஸ்.டோனி உள்ளார்.
- 2-வது டி20 போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் டோனி சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.
புதுடெல்லி:
சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டனாக எம்.எஸ்.டோனி உள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி 41 போட்டிகளில் (72 ஆட்டம்) வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
நாளை நடைபெறும் 3வது போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 53 போட்டிகளில் விளையாடி 41-ல் வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
- ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் முன்னணி வீரர் ஆண்டி முர்ர்ரே தோல்வி அடைந்தார்.
- ஜோகோவிச், ரூப்லேவ், சின்னர் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்ன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், ஆண்டி ரூபலேவ், சின்னர் ஆகியோர் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இந்நிலையில், முன்னணி வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜெண்டினா வீரர் தாமஸ் மார்ட்டினுடன் மோதினார். இதில் தாமஸ் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று முர்ரேவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்பு.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






