என் மலர்
விளையாட்டு
- இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2-வது இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.
துபாய்:
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், ராஞ்சி டெஸ்டில் பெற்ற இந்தியாவின் வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
அதில், 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 64.58 சதவீதம் பெற்று அதே இடத்தில் நீடித்து வருகிறது. முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது. 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 4வது இடத்தில் வங்காளதேசமும் உள்ளது.
5 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் உள்ளன.
- முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- டெல்லி அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டும், மேரிஜான் காப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்வேதா ஷிவ்ராட் 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 14.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, அபார வெற்றிபெற்றது. ஷிபாலி வர்மா 64 ரன்னும், மேக் லேனிங் 51 ரன்னும் குவித்தனர்.
சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியின் மேரிஜான் காப் ஆட்ட நாயகி விருது பெற்றார்.
- ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்தார்.
- சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.
ரஞ்சி கோப்பையின் காலிறுதி போட்டியில் ஆந்திர பிரதேசம் அணி மத்திய பிரதேசம் அணியுடன் மோதி தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் இனி எப்போதும் ஆந்திர பிரதேசம் அணிக்காக விளையாட மாட்டேன் என்று அந்த அணியை சேர்ந்த ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காகவே தான் அணியில் இருந்து விலகியதாக ஹனுமா விஹாரி தெரிவித்து இருந்தார். ஹனுமா விஹாரி குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த, ஆந்திரா அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் கே.ன். ப்ருத்விராஜ், தனது சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

அதில், "நீங்கள் கமென்ட்களில் தேடிக்கொண்டிருக்கும் நபர் நான் தான். ஆனால் நீங்கள் கேள்வியுற்ற தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று. போட்டி மற்றும் ஒருவரின் சுய மரியாதையை விட பெரியது எதுவும் கிடையாது. தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாச மொழியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணியில் உள்ள அனைவருக்கும், அன்று என்ன நடந்தது என நன்றாகவே தெரியும். இந்த அனுதாப விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விளையாடி கொள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹனுமா விஹாரி வெளியிட்டுள்ள பதிவில், "ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும்" என்ற தலைப்பில் கடிதம் ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், "ரஞ்சி கோப்பையில் அணியை சேர்ந்த வீரர் நான் தவறான மொழியை பயன்படுத்தியதாகவும், அவரை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், நான் பயன்படுத்திய வார்த்தைகள் நம் அணிக்குள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தை தான். அணியின் டிரெசிங் அறையில் இந்த வார்த்தைகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."

"ஆனாலும், ஒருவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டுள்ளார். நாம் அனைவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள், சமயங்களில் அணியில் உள்ள உதவியாளர் குழுவும் இது போன்ற சூழலை எதிர்கொண்ட சம்பவங்கள் உள்ளன. அந்த வகையில், விஹாரியே எங்களது அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு அவரிடம் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. அவர் எப்போதும் எங்களிடம் இருக்கும் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்."
"அவரது தலைமையில் நாங்கள் ஏழு முறைக்கும் அதிகாக தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். இந்த ரஞ்சி தொடர், வீரர்களாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆந்திரா ரஞ்சி வீரர்களாக எங்களுக்கு விஹாரி அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அதில் அணி வீரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
- முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி.
- இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம்.
ராஞ்சி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த தொடர் உண்மையிலேயே ஒரு கடினமான தொடராக அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதல் நான்கு போட்டிகளின் முடிவில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றி இருப்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. எங்களது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருமே திறமையான வீரர்கள். இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம்.
இருப்பினும் தற்போது கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது. முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய சவால்களுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர்.
எனக்கும் டிராவிட் பாய்க்கும் இளம் வீரர்களுக்கு சரியான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எண்ணமாக இருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் இளம்வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். துருவ் ஜுரேல் முதல் இன்னிங்சில் விளையாடிய விதம் அவரது முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிக்காட்டியிருந்தது.
அவரிடம் தெளிவான நல்ல ஷாட்டுகள் இருக்கின்றன. முதல் இன்னிங்சில் அவர் அடித்த 90 ரன்களே எங்களை இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகில் அழைத்துச் சென்றது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் அவர் சுப்மன் கில்லுடன் அமைத்த பாட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
- போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி என சச்சின் கூறினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி மீண்டும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
துருவ், இரு இன்னிங்சிலும் பந்தின் லென்த்தை கணித்து விளையாடினார். மேலும் அவரது புட்வொர்க் துல்லியமாக இருந்தது. அவருடன் குல்தீப் யாதவின் பார்ட்னர்ஷிப் முதல் இன்னிங்சில் ஆட்டத்தை நமது கையில் வைத்திருந்தது. 2-வது இன்னிங்சில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. 2-வது இன்னிங்சில் குல்தீப்பின் பந்து வீச்சு முக்கியமானது.
சுப்மன் கில் சேசிங்கில் தனது உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தி முக்கியமான அரை சதம் எடுத்தார். மேலும் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரோகித் ஆகியோர் தங்களது வேலைகளை சரியாக செய்தனர்.
போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
இவ்வாறு சச்சின் கூறினார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
- அவரை கடந்த வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி 8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
- 12 சிக்சர்கள், 33 பவுண்டரிகளுடன் 312 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
23 வயதுக்குட்பட்டோருக்கான சிகே நாயுடு கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஐதராபாத் - சவுராஸ்டிரா அணிகள் இடையேயான போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. காலிறுதி ஆட்டமான இந்த போட்டியில் டாஸ் வென்ற சவுராஸ்டிரா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய உத்திரபிரதேசம் அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 426 ரன்கள் சேர்த்தது.
இதனை தொடர்ந்து 2-வது நாள் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் ரிஸ்வி முச்சதம் அடித்து (312) அவுட் ஆனார். இதில் 33 பவுண்டரிகளும் 12 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடி வரும் உத்திர பிரதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 730 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. ரிஸ்வியின் முச்சதத்தை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஏனென்றால் இந்த ஆண்டுக்கான சிஎஸ்கே அணியில் சமீர் ரிஸ்வி இடம் பெற்றுள்ளார். அவரை கடந்த வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி 8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. டோனி தலைமையில் இளம் வயதான ரிஸ்வியின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- இந்திய அணி தரப்பில் ரோகித்- கில் அரை சதம் விளாசினர்.
ராஞ்சி:
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழலில் 53.5 ஓவர்களில் 145 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 35 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்னுடனும் (27 பந்து, 4 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 4-வது நாள் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் அரை சதம் அடித்து அவுட் (55) ஆனார். அடுத்து வந்த பட்டிதார் 6 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்னிலும் சர்ப்ராஸ் கான் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 120 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கில்- துருவ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் அரை சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து தரப்பில் பஷிர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.
- பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
- காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரஃப் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்எல் சீசனின் எஞ்சிய ஆட்டத்தையும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையையும் அவர் இழக்க நேரிடும்.
- இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தியது.
- இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
புவனேஸ்வர்:
9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தியது. இதையடுத்து 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து 3வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-0 என முன்னிலை பெற்றது. 4-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதிவரை அயர்லாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நீலகண்ட சர்மா, ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.
- சிறப்பாக விளையாடிய ரோகித் அரை சதம் விளாசி அவுட் ஆனார்.
- பட்டிதார் 0 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ராஞ்சி:
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழலில் 53.5 ஓவர்களில் 145 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 35 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்னுடனும் (27 பந்து, 4 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 4-வது நாள் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் அரை சதம் அடித்து அவுட் (55) ஆனார். அடுத்து வந்த பட்டிதார் 6 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து கில் - ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடினர். 4-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ரூட், ஹார்ட்லி, பஷிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.
- இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
- டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார்.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் 'ஹாக்ஐ' நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
- 3 முதல் 6-வது இடங்களை பெற்ற தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரட்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.
ஐதராபாத்:
10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. 3 முதல் 6-வது இடங்களை பெற்ற தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரட்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஐதராபாத்தில் நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டங்களில் தபாங் டெல்லி- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.






