என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
    • இத்தொடரில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசிய வீரர் கிறிஸ்டியுடன்

    மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 12-21 என முதல் செட்டை இழந்தார். அடுத்த செட்டை 21-10 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் கிறிஸ்டி 21-15 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதியில், லக்ஷயா சென் 12-21, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்
    • அனில் கும்ப்ளேவிற்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    அதில், அஷ்வினுக்கு ரூ.1 கோடி பரிசும், தங்க நாணயங்கள் மூலம் 500 என வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசும், செங்கோலும் வழங்கி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கௌரவித்தது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலமாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தியாவில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையையும், தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார்.

    அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இதன் மூலமாக அனில் கும்ப்ளேவிற்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்.

    அஸ்வினின் இந்த சாதனையை பாராட்டும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் ரவிச்சந்திரன் அஸ்வின், அவர் மனைவி பிரீத்தி, இரு மகள்கள் கலந்து கொண்டு பரிசினை பெற்று கொண்டனர்.

    இந்நிகழ்வில், ஐசிசி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், இந்திய முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிகழ்வில் பேசிய அஷ்வின், "2008-ல் ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்டது. பல கோடிகள் முதலீட்டுடன் சென்னை அணி உள்ளே இறங்கியது. அந்த அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் இந்தியா சிமெண்ட்ஸூக்கு எதிரான போட்டி ஒன்றில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன்.

    அன்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள், அஷ்வின் சிறப்பாக விளையாடினாய், அஷ்வினை சிஎஸ்கே டீமில் எடுக்கிறோம் தானே, எடுத்துட்டிங்களா என சிஎஸ்கே நிர்வாகி ஒருவரைப் பார்த்து கேட்டுவிட்டார். அங்கிருந்துதான் சென்னை அணியில் என்னுடைய பயணம் தொடங்கியது.

    அந்தளவுக்கு முக்கியமான தருணம் அது. 2013-ல் ஒரு தொடரின் போது என்னை அணியிலிருந்து ட்ராப் செய்யும் முடிவில் இருந்தார்கள். டோனிதான் 'அவர் கடந்த தொடரில் சிறப்பாக ஆடியிருக்கிறார் எனக் கூறி எனக்காக இயன்றளவுக்கு ஆதரவு கொடுத்து அணியில் எடுத்தார்.

    நாளை நான் உயிரோடு இல்லையென்றாலும் என்னுடைய ஆன்மா இந்த சேப்பாக்கத்தை சுற்றிக்கொண்டேதான் இருக்கும். அந்தளவுக்கு இந்த இடம் எனக்கு முக்கியமானது" என அவர் தெரிவித்தார்.

    • நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது
    • மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது

    இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்ஸியை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிமுகம் செய்தது.

    இதற்கு முன்னதாக, மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது
    • முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    வரும் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதை தடுக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 18-ம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. PAYTM மற்றும் Insider மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐபிஎல் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
    • ஐபிஎல் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

    ஐ.பி.எல் 2024 தொடருக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் 'நீயா நானா' கோபிநாத் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியது.

    இந்நிலையில், அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பாகவுள்ள ஐ.பி..எல் போட்டியில் புதிய தொகுப்பாளராக இணைந்துள்ளார்.

    வரும் மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டிர்லிங் படைத்தார்.
    • இவருக்கு அடுத்த இடத்தில் பாபர் அசாம் 395 பவுண்டரிகள் அடித்துள்ளார்.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

    இதில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் அடித்த 2 பவுண்டரிகள் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் அவர் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

    டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் பட்டியல் வருமாறு:

    பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள்

    பாபர் அசாம் - 395 பவுண்டரிகள்

    விராட் கோலி - 361 பவுண்டரிகள்

    ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள்

    டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள்.

    • வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
    • டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்

    மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல். தொடரின் முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது.
    • தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    புதுடெல்லி:

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது. வரும் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியானது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 7-ம் தேதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2-வது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • குகதாஸ் மதுலன் யார்க்கர் பந்து வீசி விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது
    • சிஎஸ்கே அணியில் ஏற்கனவே யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய இலங்கை பந்துவீச்சாளர் மதீஷா பத்திரனா உள்ளார்.

    இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்

    மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய YORKER பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சிஎஸ்கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    புனித ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பந்துவீச்சாளர் குகதாஸ் மதுலன் யார்க்கர் பந்து வீசி விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    சிஎஸ்கே அணியில் ஏற்கனவே யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய இலங்கை பந்துவீச்சாளர் மதீஷா பத்திரனா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023 சீசனில் ஸ்டீவன் சுமித் விளையாடவில்லை.
    • 2024 சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் அவர் ஏலம் எடுக்கவில்லை.

    ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித். சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் இவரால், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முடியவில்லை. இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

    இதன்காரணமாக 2024 சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த முறையும் இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

    இந்த நிலையில் ஸ்டீவன் சுமித் அதிகாரப்பூர்வ ஆங்கில வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முதன்முறையாக மைக் பிடித்து வர்ணனை செய்ய இருக்கிறார். இந்திய வீரர் முரளி கார்த்திக் இதற்கு முன்னதாக வியைளாடிக் கொண்டிருக்கும்போது வர்ணனை செய்துள்ளார். அதேபோல் சுமித் தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.

    இவருடன் ஹர்ஷா போக்லோ, சுனில் கவாஸ்கர், லட்சுமண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், நிக் நைட், பொம்மி பங்க்வா, டேனி மோரிசன், சைடன் டவுல், ஏபி டி வில்லியர்ஸ், மேத்யூ ஹெய்டன், தீப் தாஸ் குப்தா, அன்சும் சோப்ரா, இயன் பிஷப், ஆலன் வில்கின்ஸ், கெவின் பீட்டர்சன் ஆகியோர் ஆங்கில வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர்.

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
    • இத்தொடரில் இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசிய வீரர் லீயுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 20-22 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட சென் அடுத்த இரு செட்களை 21-16, 21-19 என கைப்பற்றினார்.

    இறுதியில், லக்ஷயா சென் 20-22, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • உ.பி. வாரியர்ஸ் அணிக்கெதிராக அடித்த சிக்ஸ் பரிசளிக்க நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை தாக்கியது.
    • உடைந்த கண்ணாடியை டாடா ஃபிரேம் செய்து எலிஸ் பெர்ரிக்கு பரிசாக அளித்துள்ளது.

    பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஆர்சிபி- உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கடந்த 4-ந்தேதி சின்னசாமி மைதானத்தில் மோதின. அப்போது ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அடித்த பந்து மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே தொடரில் சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த காரின் கண்ணாடியை தாக்கியது. இதில் கண்ணாடி உடைந்து சிதறியது.

    இந்த நிலையில் ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், உடைந்த கார் காண்ணாடியை ஃப்ரேம் (Frame) செய்து எலிஸ் பெர்ரிக்கு டாடா பரிசாக அளித்துள்ளது. அத்துடன் அதில் "பெர்பரி பவர்புல்பஞ்ச் (PerryPowerfulPunch)" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 வயதான எலிஸ் பெர்ரி வலது கை பேட்ஸ்மேன் ஆவார். இந்த சீசனிலா் எலிஸ் பெர்ரி 8 போட்டிகளில் 312 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக எலிமினேட்டர் போட்டியில் 50 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×