என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இன்று (மே 9) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டு பிளெசிஸ் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். பாப் டு பிளெசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.
இன்றைய போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலி, 47 பந்துகளை எதிர்கொண்டு 92 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி ஆறாவது அரைசதம் விளாசியுள்ளார். நடப்பு தொடரில் அதிக ரன்களை விளாசிய விராட் கோலி ஆரஞ்சு தொப்பி தக்க வைத்துள்ளார்.
- அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- ரிஸர்வ் வீரர்கள் பட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம் பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் 20 அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது,
அதன்படி 15 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். சரித் அசலங்கா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளர். மேலும் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணிக்காக 6-வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி:
வனிந்து ஹசரங்க (கேப்டன்), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷா பதிரானா, மற்றும் தில்ஷன் மதுஷங்க.
ரிஸர்வ் வீரர்கள்: அஷித ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியானகே.

- பாட் கம்மின்ஸ் மற்றும் அணியின் பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள் யோசிப்பதைப் போன்று வேறு யாரும் யோசித்து நான் பார்த்ததில்லை.
- உன்னால் முடிந்தவரை அதிரடியாக விளையாடு என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரார்ங்கனைகளாக ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இதில் ஷஃபாலி வர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஸ்மிருதி மந்தனா - தயாளன் ஹேமலதா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா 33 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 30 ரன்களிலும் ஹெமலதா 37 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் இருந்த ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் மற்றும் நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் திலாரா அக்தர், சோபனா மோஸ்ட்ரி, ருபியா அக்தர், கேப்டன் நிகர் சுல்தானா உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் இணைந்த ரிது மோனி - சோரிஃபா கதும் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் சிறப்பாக விளையாடிய ரிது மோனி 37 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய சொரிஃபா கதும் 28 ரன்களையும், ரபேயா கான் 14 ரன்களை சேர்த்தனர்.
இதனால் வங்கதேச அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
- கடைசி போட்டியில் வங்காளதேசத்தை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- ஸ்மிரிதி மந்தனா (33), தயாளன் ஹேமலதா (37), சர்மன்ப்ரீத் கவுர் (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 156 ரன்கள் குவித்தது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்காளதேசத்தை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஸ்மிரிதி மந்தனா (33), தயாளன் ஹேமலதா (37), சர்மன்ப்ரீத் கவுர் (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 156 ரன்கள் குவித்தது.
பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் வங்கிய வங்காளதேச வீராங்கனைகளால் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ராதா யாதவ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடரின் சிறந்த வீராங்கனை, 5-வது போட்டியின் சிறந்த வீராங்கனை விருதுகளை ராதா யாதவ் வென்றார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.
தர்மசாலா:
17-வது ஐ.பி.எல். தொடரின் இன்று தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.
பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.
- உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார்.
- சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் லக்னோ - ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 75* (28), டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள் அடித்து 9.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது.
இதனால் கோபமடைந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா போட்டியின் முடிவில் கேப்டன் கேஎல் ராகுலை திட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலனாது. இதற்கு ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் 16 கோடி சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை இப்படி திட்டலாமா? என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை திட்டுவது சரியல்ல என்று முன்னாள் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் கிரேம் ஸ்மித் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார். ஏனெனில் அவருடைய அணி முழுமையான தோல்வியை சந்தித்ததால் உணர்ச்சிகள் உருண்டோடின. இருப்பினும் இந்த உரையாடல்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடந்திருக்க வேண்டும். சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.
என்று கூறினார்.
- ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பாரீஸ்:
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடந்த அரையிறுதியின் 2-வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என பின்தங்கியிருந்த நிலையில் 88', 90+1' ஆகிய கடைசி நிமிடங்களில் ஜோஸ்லு அடித்த கோல்களால் ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி பெற்றது.
ரியல் மாட்ரிட் தரப்பில் ஜோசலு வெற்றிக்குரிய 2 கோல்களையும் அடித்தார். பேயர்ட் முனிச் தரப்பில் அல்போன்சோ டேவிஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
அரையிறுதியின் முதல் டெக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரியல் மாட்ரிட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
- ஒலிம்பிக்கில் அதிகாரப்பூர்வ டைம்கீப்பராக ஒமேகா உள்ளது.
- நீரஜ் சோப்ரா தோகாவில் நடைபெற இருக்கும் டைமண்ட் லீக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்கில் ஆசியாவிலேயே ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீரர் இவர் ஆவார்.
இவரை சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட ஆடம்பர கடிகார நிறுவனமான ஒமேகா (OMEGA) விளையாட்டு தூதராக இணைத்துள்ளது.
தோகாவில் டைமண்ட் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், அங்குள்ள ஒமேகா ஷாப்பிற்கு நீரஜ் சோப்ராவை அழைத்துள்ளது.
ஒமேகா ஒலிம்பிக் தொடருக்கான அதிகாரப்பூர்வ டைம்கீப்பராக உள்ளது. 1932-ல் இருந்து டைகீப்பராக இருந்து வருகிறது. பாரிஸ் நகரில் இந்த வருடம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் ஒமேகாவிற்கு 31-வது தொடர் ஆகும்.
டைமண்ட் லீக்கிற்குப் பிறகு புவனேஸ்வரில் நடைபெறும் பெடரேசன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்திய மண்ணில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து நீரஜ் சோப்ரா கலந்து கொள்ளும் போட்டி இதுவாகும்.
மிகவும் பிரபலமான நிறுவனத்தின் ஒரு பகுதியாக இணைய இருப்பது மிகவும் ஆர்வமாக உள்ளது என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
- மங்கோலியாவுக்கு உதிரி வகையில் 3 ரன்கள் கிடைத்தன.
- ஆறு பேட்ஸ்மேன்கள் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 2017-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 49 ரன்னில் ஆல்அவுட் ஆனது. டி20 கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஸ்கோர் இது என பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக மங்கோலியா அணி 12 ரன்னில் சுருண்டது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே இது 2-வது மிகவும் குறைந்த ஸ்கோராக பார்க்கப்படுகிறது.
ஜப்பான் முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மங்கோலியா 8.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 12 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
ஜப்பான் வேகப்பந்து வீச்சாளர் கஜுமா கட்டோ-ஸ்டாஃபோர்டு 3.2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதற்கு முன்னதாக ஸ்பெயின் அணிக்கெதிராக இஸ்லே ஆஃப் மான் ((the Isle of Man) பிரிட்டிஷ்- அயர்லாந்து இடையிலான தீவு) 10 ரன்களில் ஆல்அவுட் ஆனது டி20 வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர் ஆகும்.
12 ரன்னில் 3 ரன்கள் உதிரியாக வந்ததாகும். 11-வது வீரராக களம் இறங்கிய வீரர் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், ஆறு பேர் டக்அவுட் ஆனார்கள்.
- மும்பை அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
- இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று அணி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
நடப்பு ஐ.பி.எல். தொடர் மும்பை அணிக்கு ஒரு மோசமான சீசனாக அமைந்துள்ளது. மும்பை அணி விளையாடிய 12 போட்டிகளில் 8 தோல்வி, 4 வெற்றி உட்பட 8 புள்ளிகளுடன் இத்தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணி இதுவாகும்.
10 ஆண்டுகளுக்கு பின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் களமிறங்கிய மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் ஏராளமானோர் இருந்த போதும், அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் தோல்வி குறித்து தங்களது கருத்தை பயிற்சியாளரிடமும், அணியின் நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோல்வியின் போது ஒரு வீரரின் மேல் பழியை போடுவதும் மும்பை வீரர்களால் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற எனர்ஜி இல்லை. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி ஸ்டைலே காரணம் என்று கூறியுள்ளனர்.
இதற்கு மும்பை அணி நிர்வாகிகள், அணி 10 ஆண்டுகளாக ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வந்துள்ளது. அதனால் வழக்கமாக தலைமை மாற்றத்தின் போது வரும் சவால் தான் மும்பை அணிக்கும் வந்துள்ளது. இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று கூறியுள்ளனர்.
- ஐ.பி.எல் தொடரில் ஆடி வரும் ஜோஷ் லிட்டில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.
- டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.
இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இதையடுத்து அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரிலும் ஆட உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர், முத்தரப்பு டி20 தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் ஆடி வரும் ஜோஷ் லிட்டில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் முத்தரப்புக்கு டி20 தொடருக்கான அயர்லாந்து அணி விவரம்; பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடெய்ர், ரோஸ் அடெய்ர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.
- நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது.
- சஞ்சீவ் கோயங்கோ செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறியது.
இந்நிலையில், ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டனான கே.எல்.ராகுலிடம் கடிந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்த பயனர்கள், டிரெஸிங் அறையில் நடக்க வேண்டிய விவாதங்கள் பொதுவெளியில் நடக்கிறது. சஞ்சீவ் கோயங்கோ செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
A player of such calibre KL Rahul needing to bear the wrath of the team owner on field in national media is depressing to say the least ! #pathetic
— Mahi (@mahiban4u) May 8, 2024
U guys are disappointed - we get it ! Talk it out in a team meeting behind closed doors fgs !
pic.twitter.com/H0xSbPnQ55






