என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
    • வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.

    செயின்ட்லூசியா:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் 'குரூப் 1' பிரிவில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி ஆப்கானிஸ்தான் (47 ரன்), வங்காளதேசம் (50 ரன்) அணிகளை வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.

    இந்திய அணி தோற்றாலும் பாதிப்பு இருக்காது. ஏனென்றால் ரன்ரேட் நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் மோசமாக தோற்கக் கூடாது. இந்த நிலைமை நடைபெறாமல் இருக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது நல்லதாகும்.

    இதே பிரிவில் நாளை காலை 6 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. 'குரூப் 1'-ல் இந்தியா 4 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடனும் உள்ளது. வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.

    • கடந்த 10 ஆண்டுகளில் நிறைய இலக்குகளை எட்டி உள்ளோம்.
    • வெற்றியை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றுவோம்.

    கிங்ஸ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி கொடுத்தது. அந்த அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது.

    149 ரன் இலக்கை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா 127 ரன்னில் சுருண்டது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் குல்பதின் நைப் 20 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர் கூறியதாவது:-

    இந்த வெற்றிக்காகவே நீண்ட காலம் காத்திருந்தோம். இது எனக்கு மட்டும் சிறந்த தருணம் அல்ல, என் நாட்டுக்கும் சிறந்த தருணமாகும். எங்கள் கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெரிய சாதனை. சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்களை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு நன்றி.

    கடந்த 2 மாதங்களாக கடுமையாக உழைத்தோம். ஒருவழியாக, கடைசியில் ஆஸ்திரேலியாவையும் ஜெயித்து விட்டோம். இறைவனுக்கு நன்றி. எங்கள் கிரிக்கெட் அணி பெரிய சாதனைகளை நிகழ்த்தியது கிடையாது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிறைய இலக்குகளை எட்டி உள்ளோம்.

    நாங்கள் முதல் சுற்றில் நியூசிலாந்தை தோற்கடித்தோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதல்ல. அவர்கள் உலக சாம்பியன் அணி. எங்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வெற்றி பெரிய சாதனை. இந்த வெற்றியை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது.
    • நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின.

    யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இரண்டு அணிகளும் தரவரிசை பட்டியலில் கடைசியில் இருந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்தது.

    தரவரிசை பட்டியலில் ஜெர்மனி அணி 6 புள்ளிகளிலும், சுவிட்சர்லாந்து அணி 4 புள்ளிகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கத்து. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தி விளையாடினர். ஆட்ட முடிவில் இரு அணியும் தலா 1 கோல் எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் ஜெர்மனி சுவிட்சர்லாந்து அணியைவிட முன்னிலையில் இருக்கிறது.

    • லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • இரு போட்டிகளில் ஹங்கேரி தோல்வியை தழுவி இருந்தது.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

    லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதன்படி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் ஹங்கேரி அணிகள் இடையிலான போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

    நடப்பு யூரோ கோப்பையின் முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய ஹங்கேரி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்று வாய்ப்பை எதிர்பார்க்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. ஸ்காட்லாந்து அணியும் இதேபோன்ற சூழலில் போட்டியில் களமிறங்கியது.

    அந்த வகையில், இரு அணிகளும் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சமயத்தில் ஹங்கேரி வீரர் கெவின் சோபோத் கோல் அடிக்க அந்த அணி முன்னேற்றம் கண்டது.

    போட்டி முடிவில் ஸ்காட்லாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஹங்கேரி அணி 1-0 என்ற வகையில் வெற்றி பெற்றது. 

    • நிதிஷ் குமார் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • க்ரிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் முறையே 12 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதிஷ் குமார் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்களிலும் கோரி ஆண்டர்சன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹர்மீத் சிங் 21 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக அமெரிக்க அணி 18.5 ஓவர்களில் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய க்ரிஸ் ஜோர்டான் 2.5 ஓவர்களில் 10 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இவர் தவிர சாம் கர்ரன் மற்றும் ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டோப்லெ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். மறுபுறம் கேப்டன் ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.

    எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 117 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் பில் சால்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். மறுபுறம் கேப்டன் ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அமெரிக்கா 115 ரன்களில் சுருண்டது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் பார்படாசில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்த் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 18.5 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் குமார் 30 ரன்னும், கோரி ஆண்டர்சன் 29 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் கிறிஸ் ஜோர்டான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது.
    • இன்று நடந்த இறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    பெர்லின்:

    ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், போலந்து வீரர் ஹர்காக்சை சந்தித்தார்.

    இதில் சின்னர் 7-6 (10-8), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    தரவரிசையில் முதலிடம் பெற்ற பிறகு வென்ற முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 215 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய இந்திய அணி 40.4 ஓவரில் 220 ரன்கள் எடுத்து வென்றது.

    பெங்களூரு:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. லாரா வோல்வார்ட் 61 ரன்னில் அவுட் ஆனார். டாஸ்மின் பிரிட்ஸ் 38 ரன் எடுத்தார்.

    இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 25 ரன், பிரியா புனியா 28 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஹர்மன் பிரீத் கவுர் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி 40.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.
    • இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை காலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.

    இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை காலின்ஸ்கயா 7-6 (7-0) என கைப்பற்றினார். 2வது செட்டை பெகுலா 6-4 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பெகுலா 7-6 (7-3) என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஜெசிகா பெகுலா பெறும் 5-வது சாம்பியன் பட்டம் இது என்பதும், இந்த ஆண்டில் இது முதல் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இன்று நடைபெறும் 3-வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    பெங்களூரு:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்த நிலையில் லாரா வோல்வார்ட் 61 ரன்னில் அவுட் ஆனார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாஸ்மின் பிரிட்ஸ் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிக்கா பெகுலாவை சந்தித்தார்.

    இதில் கோகோ காப் 5-7, 6-7 (7-2) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதன்மூலம் ஜெசிக்கா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் பெகுலா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை சந்திக்கிறார்.

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 127 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்ரேலியாவை ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 127 ரன்களில் ஆல் அவுட்டாக்கினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். குல்பதின் நைப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷித் கான் கூறியதாவது:

    இன்று என்னால் நன்றாக தூங்கமுடியும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் மும்பையில் நான் தூங்கவில்லை. மேக்ஸ்வெல் தனி ஆளாக அப்படிப்பட்ட உணர்வை எனக்கு தந்துவிட்டார். ஆனால் இன்று நாங்கள் அதற்கு வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது என்னால் மகிழ்ச்சியால் தூங்கமுடியாது என நினைக்கிறேன்.

    இது உலகக் கோப்பை தொடர். 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு எதிரான வெற்றி இது. இப்படிப்பட்ட அணியை நீங்கள் தோற்கடித்தால் அது உங்களுக்கு எப்போதும் பெரிய ஆற்றலை தருகிறது. மேலும் அது உங்களை தூங்க விடாது.

    எங்களுடைய நாட்டுக்கும், அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. எங்கள் வீரர்களால் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய நாட்டில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள் என தெரிவித்தார்.

    ×