என் மலர்
விளையாட்டு
- 6 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2 போட்டிகளில் மட்டும் 2 இலக்க ரன்களை அடித்துள்ளார்.
- அதிகபட்சமாக ஒரு போட்டியில் 37 மற்றொரு போட்டியில் 24 ரன்கள் எடுத்துள்ளார்.
டி20 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர்.
விராட் கோலி முதல் பந்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடினார். 4 பந்துகள் 1 ரன் எடுக்க திணறிய அவர் 5-வது பந்தில் புல் ஷாட்டை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்மூலம் இந்த தொடரில் 2-வது முறையாக விராட் கோலி டக் அவுட் ஆகி உள்ளார்.
மேலும் இந்த தொடரில் விராட் கோலியின் தடுமாற்றம் தொடர்கிறது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2 போட்டிகளில் மட்டும் 2 இலக்க ரன்களை அடித்துள்ளார். ஒரு போட்டியில் 24 மற்றொரு போட்டியில் 37 ரன்கள் இதை தவிர மற்ற போட்டிகள் முறையே 1,4,0,0 என ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி இந்திய ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.
இவரது ஆட்டம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவரை 3-வது இடத்தில் களமிறக்க வேண்டும் எனவும் ஒரு சிலர் அவர் பொறுமையாக நின்றால் அதிக ரன்களை விளாசுவார் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களமிறக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
- இந்தியா தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும்.
செயின்ட்லூசியா:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் 'குரூப் 1' பிரிவில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாறாக இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும். இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறவே முழு மூச்சுடன் போராட உள்ளது.
- போக்னினி 7(7)-6(4), 7(7)-6(5) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஹிஜிகட்டா 6-2, 2-6, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஸ்பெயின் நாட்டில் மல்கோர்கா சாம்பியன்ஷிப் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ரவுண்ட் ஆஃப் 32-ல் இத்தாலி வீரர ஃபேபியோ ஃபோக்னினி நெர்தலாந்து வீரர் கிஜ்ஸ் பிரவ்வெர்-ஐ எதிர்கொண்டார்.
இதில் போக்னினி 7(7)-6(4), 7(7)-6(5) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டு செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டா இத்தாலியின் லூகா நர்டியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஹிஜிகட்டா 6-2 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுத்த நர்டி அந்த செட்டை 6-2 என கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக விளையாடினர். என்றாலும ஹிஜிகட்டாவின் கையே ஓங்கியது. அவர் 7-5 என கடும் போராட்டத்திற்குப்பின் 3-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி 2-1 என வெற்றி பெற்றார்.
- இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோலி, ரோகித், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, பாண்ட்யா, ஜடேஜா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.
இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20-ஐ தொடருக்கான இந்திய அணி:-
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய்.
- கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம்.
- கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஆண்டிகுவா:
டி20 உலகக்கோப்பை தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியுள்ளது.
இதன் மூலமாக சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியுள்ளது.
இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் நாங்கள் நுழையாவிட்டாலும் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ஆடினோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக இன்றைய ஆட்டத்தை மறக்க நினைக்கிறோம். பவுலர்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் கட்டுப்படுத்தலாம் என்று போராடினார்கள். அது பாராட்டுக்குரியது. நாங்கள் இந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.
ஆனால் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான நம்பிக்கை எங்கள் ரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. தோல்வியின்போது, பாசிட்டிவான விஷயமாக அதனை பார்க்கிறேன். வெவ்வேறு மைதானங்களில் விளையாடியபோது ரசிகர்கள் நேரடியாக ஆதரவு அளித்ததோடு, சோசியல் மீடியாவில் கொண்டாடினார்கள் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.
இவ்வாறு ரோமன் பவல் கூறினார்.
- தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
- விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
உலகக் கோப்பை டி20 தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நாளையுடன் சூப்பர் 8 சுற்றும் முடிவடைய உள்ளது. இதன் முடிவில் குரூப் 2-ல் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 2 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள 4 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.
இந்த குரூப்-ல் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக ஒத்திவைத்து வந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் இந்த கேள்வியை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
எனவே, என்னைப் பொறுத்தவரை, எந்த அணிக்கு எதிராகவும் விளையாடுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். சில விஷயங்கள், அரசாங்கம் மற்றும் அரசியல் விஷயங்கள், எனக்கு இந்த விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு அது பிடிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது. நான் எப்போதும் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட விரும்புகிறேன். பிக்பாஷ் கிரிக்கெட் மூலம், அங்குள்ள ரசிகர்களிடமிருந்து எனக்கு அன்பும் ஆதரவும் கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
இவ்வாறு ரஷித் கான் கூறினார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிர்ஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிர்ஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் பலரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ஹர்பஜன் சிங்கை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
மாநிலங்களவை எம்.பி ஹர்பஜன் சிங் எதற்காக கிரிக்கெட் கமெண்ட்ரி செய்து கொண்டிருக்கிறார். இதன்மூலம் மக்களின் வரிப்பணத்தை தான் அவர் வீணடித்து கொண்டிருக்கிறார் என்று எக்ஸ் வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அந்த எக்ஸ் பதிவை ஹர்பஜன் சிங் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அதில், "என்னுடைய எம்.பி சம்பளத்தை படிக்க முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச்செலவுக்கு உதவி செய்கிறேன். அதில் ஒரு ரூபாயை கூட நான் எனக்காக செலவு செய்தது கிடையாது. நானும் வரி செலுத்துபவன் தான். உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது படிப்பதற்கு உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள், நான் உதவி செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
- இன்றைய போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
செயின்ட் லூசியா:
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 2-ல் இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.
குரூப் 1-ல் நான்கு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்திய அணி மட்டுமே தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்ற அணிகளான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் 2-ல் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. வங்காளதேசம் 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் அரையிறுதிக்கு எந்த அணி தகுதி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மிக முக்கியமான ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாறாக இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும்.
இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க கடுமையாக போராடும்.
- இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
- வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் பங்கேற்றதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை போட்டியிடும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது.
ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது.
தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது. அமெரிக்காவும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

கடந்த 2022ம் ஆண்டு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணியும் தனது டி20 உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டது. இதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.
இதன்மூலம் போட்டிகளை நடத்தும் நாடுகள் 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா பொலிவியாவை 1-0 என வீழ்த்தியது.
- உருகுவே 3-1 என பனமா அணியை எளிதாக வீழ்த்தியது.
தென்அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான கால்பந்து தொடரான கோபா அமெரிக்கா தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் அமெரிக்கா- பொலிவியா அணிகள் மோதின. இதில் அமெரிக்கா 2-0 என வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 3-வது இடத்தில் கிறிஸ்டியன் புலிசிக் முதல் குாலை பதிவு செய்தார். 44-வது நிமிடத்தில் ஃப்ளோரியன் பலோகன் 2-வது கோலை பதிவு செய்தார். இதனால் பாதி நேர ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என முன்னிலை பெற்றது, 2-வது பாதி நேரத்தில் பொலிவியா அணியால் பதில் கோல் போட முடியவில்லை. இதனால் அமெரிக்கா 2-0 என வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் உருகுவே- பனமா அணிகள் மோதின. இதில் உருகுவே 3-1 என வெற்றி பெற்றது. முதல் நேரத்தில் 16-வது நிடமிடத்தில் உருகுவே முதல் கோலை பதிவு செய்தது. மேக்சிமிலியானோ இந்த கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல்பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2-வது பாதி நேரத்தில 84-வது நிமிடம் வரை கோல் விழவில்லை. 85-வது நிமிடத்தில் உருகுவே வீரர் டார்வின் நுனேஸ் கோல் அடித்தார். அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரம் வழங்கப்பட்டதில் உருகுவே 91-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தது. மத்தியாஸ் வினா இந்த கோலை அடிக்க உருகுவே 3-0 என முன்னிலைப் பெற்றது.
94-வது நிமிடத்தில் பனமா ஆறுதல் கோல் அடித்தது. மிக்கேல் அமிர் முரில்லா இந்த கோலை அடிக்க உருகுவே 3-1 என வெற்றி பெற்றது.
இதுவரை ஏ, பி, சி பிரிவுகளில் உள்ள அணிகள் தலா ஒரு போட்டிகளில் விளைாடியுள்ளன. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்க கோஸ்டா ரிகா அணியை எதிர்கொள்கிறது.
- ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
- இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6-ந் தேதி நடைபெறும்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நாளை முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.
குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 4 அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்த தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6-ந் தேதி நடைபெறும்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க தேர்வு குழு விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பையின் இடம் பிடித்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோடும் இதில் அடங்குவர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார்.
- ஷம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது.
இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார். இவருடன் களமிறங்கிய ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலும், நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களை விளாசினார்.
இவரை தொடர்ந்து வந்தவர்களில் ஆண்ட்ரே ரசல் மட்டும் 9 பந்துகளில் 15 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். தென் ஆப்பிரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மழை நின்றதால் போட்டி மீண்டும் துவங்கியது. ஆனால் மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இதை அடுத்து பேட்டிங் செய்த கேப்டன் மார்க்ரம் 18 ரன்களையும், ஸ்டப்ஸ் 29 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கிளாசன் 22 ரன்களையும், மார்கோ யான்சென் 21 ரன்களையும் அடித்தனர்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்றைய போட்டியில் தோல்வியுற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.






