என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக்கும் ஜெசிகா பெகுலாவும் மோதின.
    • இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.

    ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் மோதின.

    இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். இகா 2-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஜெசிகா பெகுலா முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

    • 3 டெஸ்ட் கொண்டதாக இறுதிப்போட்டி இருந்தால் சவால் நிறைந்ததாக இருக்கும்.
    • இறுதிப்போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால் இரு அணிக்கும் சமவாய்ப்பாக இருக்கும்.

    மெல்போர்ன்:

    3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள நாதன் லயனின் வீடியோ பதிவில் 'நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாக நடப்பதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் ஒரு செஷனில் சரியாக செயல்படாவிட்டாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் நீங்கள் தோற்க நேரிடலாம். ஆனால் 3 ஆட்டங்கள் கொண்ட இறுதிப்போட்டியாக இருந்தால் ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும்.

    அத்துடன் ஆதிக்கம் செலுத்தினால் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற முடியும். 3 டெஸ்ட் கொண்டதாக இறுதிப்போட்டி இருந்தால் சவால் நிறைந்ததாக இருக்கும். மேலும் இந்த இறுதிப்போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால் ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக இல்லாமல் இரு அணிக்கும் சமவாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் போட்டியில் சவாலும், விறுவிறுப்பும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வில்வித்தையில் ஹர்விந்தர் போலந்து வீரரை 6-0 என வீழ்த்தினார்.
    • க்ளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்தது.

    பாரா ஒலிம்பிக்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்றி நள்ளிரவு இன்று அதிகாலை நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்தினர்.

    வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் போலந்தின் லூகாஸ் சிஸ்ஜெக்கை எதிர்கொண்டார். இதில் ஹர்விந்தர் 6-0 (28-24, 28-27, 29-25) என போலந்து வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார்.

    அதன்பின் நடைபெற்ற க்ளப் த்ரோ (F51) போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்தது. தரம்பீர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான பிரனாவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா ஐந்து தங்கம், 9 வெற்றி, 10 வெண்கல பதக்கம் என 24 பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்தியாவுக்கு 7-வது நாளான புதன்கிழமை 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டிராவிஸ் ஹெட் 17 பந்தில் அரை சதம் விளாசினார்.
    • முதல் 6 ஓவரில் ஆஸ்திரேலியா 113 ரன்கள் குவித்தது.

    ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேயில் அதிக ரன்கள் விளாசிய அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது. டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 113 ரன்கள் குவித்தது.

    5-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 30 ரன்களும் 6-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 26 ரன்களும் அதிகபட்சமாக குவித்தனர். குறிப்பாக ஹெட் 17 பந்தில் அரை சதம் விளாசினார். 

    • ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்- டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலிய டி20 அணியில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் அறிமுகமானார். அவர் அறிமுக போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    இதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ஸ் 12 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட் 25 பந்தில் 80 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த ஜோஸ் இங்கிலீஸ் - ஸ்டோய்னிஸ் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

    • இன்று நடந்த குண்டு எறிதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது.
    • இதன்மூலம் இந்தியா மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதுவரை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பவர் லிப்டிங் பெண்கள் 45 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சகினா கதுன் போட்டியிட்டார். இதில் சகினா கதுன் 7-வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பில் ஏமாற்றம் அளித்தார்.

    • ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார்.
    • விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் கூறினார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் 12000 ரன்களை கடந்த அவர் 34 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்த அவர் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய 4 வீரர்களையும் மிஞ்சியுள்ளார்.

    அதனால் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. அத்துடன் விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் போன்ற அந்நாட்டின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட்டை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஜோ ரூட்டின் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கிறது. அதே போல் விராட் கோலியின் புள்ளிவிவரங்களையும் நான் பார்க்கிறேன். இதை நான் இயன் சேப்பல், ரிக்கி பாண்டிங் போன்ற ஆஸ்திரேலியர்கள் பார்வையில் பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 பேட்டிங் சராசரி மகத்துவத்திற்கான பெஞ்ச மார்க் அல்லவா?

    அதே சமயம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் விராட் கோலியை தேர்ந்தெடுப்பேன். ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் அவர் சதமடித்துள்ளதாக எனக்குத் தெரியவில்லை.

    ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் போட்டியிலேயே பெர்த் மைதானத்தில் நான் பார்த்த சிறந்த சதத்தை அடித்தார். அந்த வித்தியாசமான சதத்தை அடித்த விராட் கோலியை ஆஸ்திரேலிய மண்ணில் நான் தேர்ந்தெடுப்பேன்.

    என்று கூறினார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் ரூட் 1 டெஸ்ட் சதம் கூட அடித்ததில்லை. ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். 

    • முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

    லண்டன்:

    இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் அறிமுகமாகிறார்.

    இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

    டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், ஜோஷ் ஹல், ஷோயிப் பஷீர்.

    • இன்று நடந்த குண்டு எறிதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது.
    • இதன்மூலம் இந்தியா மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதுவரை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், வில்வித்தை ரிகவர் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் தகுதிச் சுற்றில் வென்று காலிறுதிக்கு முந்தைய

    சுற்றுக்கு தேர்வானார்.

    தொடர்ந்து நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹர்விந்தர் சிங் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

    • இந்திய அணிக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று நீண்ட காலமாகிவிட்டது.
    • தற்போது அந்த நிலையை மாற்றியமைக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன்.

    சிட்னி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் 22 முதல் ஜனவரி 8 வரை நடக்கவுள்ளது. ஒவ்வொரு 2 டெஸ்ட் போட்டிக்கும் இடையில் போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த அணியாலும் கம்பேக் கொடுக்க முடியும்.

    இதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த முறை விளையாடிய 2 முறையும் இந்திய அணி கோப்பையுடன் திரும்பியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பார்டர் கவாஸ்கர் கோப்பை வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா அணி திண்டாடி வருகிறது. சொந்த மண்ணிலேயே தொடர்ச்சியக 2 முறை இந்திய அணியுடன் தோல்வியடைந்திருப்பதால், ஆஸ்திரேலியா அணி பழிதீர்க்க தீவிரமாக உள்ளது.

    இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று நீண்ட காலமாகிவிட்டது. தற்போது அந்த நிலையை மாற்றியமைக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். எதிர்வரும் டெஸ்ட் போட்டிகள் இரு அணிகளுக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும். இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். இந்த தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்.

    இந்திய அணியும் எங்களை வீழ்த்தி இருக்கிறார்கள். அதேபோல் நாங்களும் ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளோம். அதுதான் இம்முறை எங்களுக்கு உதவியாக இருக்கும்.

    இவ்வாறு கம்மின்ஸ் கூறியுள்ளார். 

    • வங்கதேசத்திற்கு எதிராக 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே பாபர் அசாம் சேர்த்துள்ளார்.
    • ஐசிசி தரவரிசையில் 12-வது இடத்திற்கு பாபர் அசாம் தள்ளப்பட்டார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இந்த தொடரில் மோசமாக விளையாடிய பாபர் அசாம், 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் கடந்த 5 வருடத்தில் முதல் முறையாக டாப் 10-ல் இருந்து பாபர் அசாம் வெளியேறி 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் டெஸ்ட்டில் 50-க்கு மேற்பட்ட ரன்களை கடைசியாக 2022-ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சர்ரே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டர்ஹாம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இதனையடுத்து விளையாடிய சர்ரே அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ், லௌரி எவான்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த டோமினிக் சிப்லி மற்றும் சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இறுதியில் சர்ரே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்ஹாம் அணியை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில் இப்போட்டியில் சர்ரே அணியின் விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸ் எளிதான ரன் அவுட் ஒன்றை தவறவிட்டுள்ள நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. டாம் கரன் வீசிய வைட் யார்க்கர் பந்தை பாஸ் டி லீக் கவர் திசையில் அடித்துவிட்டு ரன் ஓட முயற்சித்தார். அப்போது அந்த இடத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்து வில் ஜேக்ஸ் அற்புதமாக பந்தை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் பேட்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பாதி களத்தில் நிற்க, வில் ஜேக்ஸ் பந்தை விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸிடம் த்ரோ அடித்தார். ஆனால் பந்தை சரியாக பிடிக்க தவறிய நிலையில், தனது கைகளால் மட்டுமே ஸ்டம்பினை தகர்த்தார். பிறகு அவர் தனது தவறை உணர்ந்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்த நேரத்தில், ஜோன்ஸ் பாதுகாப்பாக தனது கிரீஸிற்கு திரும்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    ×