search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரா ஒலிம்பிக்: வில்வித்தை, க்ளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்கம்- மொத்தம் 24 பதக்கம்
    X

    பாரா ஒலிம்பிக்: வில்வித்தை, க்ளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்கம்- மொத்தம் 24 பதக்கம்

    • வில்வித்தையில் ஹர்விந்தர் போலந்து வீரரை 6-0 என வீழ்த்தினார்.
    • க்ளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்தது.

    பாரா ஒலிம்பிக்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்றி நள்ளிரவு இன்று அதிகாலை நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்தினர்.

    வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் போலந்தின் லூகாஸ் சிஸ்ஜெக்கை எதிர்கொண்டார். இதில் ஹர்விந்தர் 6-0 (28-24, 28-27, 29-25) என போலந்து வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார்.

    அதன்பின் நடைபெற்ற க்ளப் த்ரோ (F51) போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்தது. தரம்பீர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான பிரனாவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா ஐந்து தங்கம், 9 வெற்றி, 10 வெண்கல பதக்கம் என 24 பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்தியாவுக்கு 7-வது நாளான புதன்கிழமை 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×