என் மலர்
விளையாட்டு
- இந்திய அணியில் சர்பராஸ் கானுக்கு பல வருடங்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.
- யோயோ சோதனைகளை நிராகரித்து விட்டு ஒரு வீரர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை மதிப்பிடவும்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்திய மண்ணில் 36 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து வென்றுள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்தியா ஆள் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. அதே சமயம் இரண்டாவது இன்னிங்சில் சர்பராஸ் கான் 150 ரன்களும் ரிஷப் பண்ட் 99 ரன்களும் குவித்தததால் 462 ரன்களை இந்திய அணி எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை இந்திய அணி தவிர்த்து.
சர்பராஸ் கான் உடல் பருமனாக இருக்கிறார் என்று கூறி அவருக்கு சில ஆண்டுகளாக வாய்ப்பு வழங்காமல் இருந்து வந்ததை குறிப்பிட்டு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ்டாருக்கு எழுதிய கட்டுரையில், "உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய சதங்கள் அடித்தும் இந்திய அணியில் சர்பராஸ் கானுக்கு பல வருடங்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு தேவையான மெலிதான இடுப்பு அவருக்கு இல்லை என்று அவர்கள் நம்பியதே இதற்கு காரணம். ஆனால் களத்தில் சர்பராஸ் பேட்டிங் அவருடைய இடுப்பை விட அபாரமாக இருந்தது.
துரதிஷ்டவசமாக இந்திய கிரிக்கெட்டில் பல முடிவெடுக்கும் யோசனைகள் உள்ளன. அவற்றை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. இந்த ஃபிட்னஸ் தூய்மைவாதிகள் விரும்பும் மெல்லிய இடுப்பை கொண்டிருக்காத மற்றொரு வீரர் ரிஷப் பண்ட். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். இதற்கிடையே அவர் நாள் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அதற்கு 6 மணி நேரம் உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டியது மட்டுமல்லாமல் பந்துகளை சேகரிக்க ஸ்டம்ப்புகளுக்கு ஓடுவதும் தேவைப்படுகிறது. எனவே தயவு செய்து இந்த யோயோ சோதனைகளை நிராகரித்து விட்டு ஒரு வீரர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை மதிப்பிடவும். ஒரு வீரர் நாள் முழுவதும் பேட் செய்யவோ அல்லது 20 ஓவர்கள் வீசவோ முடிந்தால் அவரது இடுப்பு எவ்வளவு மெலிதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்பது அர்த்தம்" என்று எழுதியுள்ளார்.
- வங்கதேசம் - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
- இந்த டெஸ்ட் போட்டியில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா படைத்தார்.
இதற்கு முன்பு பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 12602 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்து 11817 பந்துகளிலேயே ரபாடா 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- வங்கதேசத்தில் 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- தீபிகா இறுதிப்போட்டியில் தோல்வியடைவது இது 5-வது முறையாகும்.
- உலகக் கோப்பையில் இதுவரை 5 சில்வர் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மெக்சிகோவின் ட்லாக்ஸ்காலாவில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு சீன வீராங்கனை லி ஜியாமனும், இந்திய ரிகர்வ் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியும் முன்னேறினர். இதில் லி ஜியாமனிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் தீபிகா குமாரி.
முதல் முறையாக உலகக் கோப்பையில் கலந்து கொண்ட சீன வீராங்கனை லி ஜியாமனு தங்கப்பதக்கத்தை வென்று அசத்தி உள்ளார்.
தீபிகா இறுதிப்போட்டியில் தோல்வியடைவது 5-வது முறையாகும். ஒன்பது உலகக் கோப்பையில் பங்கேற்ற இவர், இதுவரை 5 சில்வர் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியா சார்பில் உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை டோலா பானர்ஜி ஆவார். 2007-ம் ஆண்டு நடந்த போட்டியில் இவர் தங்கப்பதக்கம் வென்றார்.
தீபிகா குமாரி 3 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையில் கலந்து கொண்டுள்ளார். தாய்மை காரணமாக அவர் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
- நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
- ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும்.
மும்பை :
ஐபிஎல் 2025-ம் ஆண்டிற்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 மற்றும் 25-ம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும். கடந்த ஐபிஎல் மெகா ஏலம் 2022-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் நடக்க இருக்கிறது.
ஐபிஎல் மெகா ஏலத்தை சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக பிசிசிஐ குழு தற்போது சவுதி அரேபியாவுக்கு சென்று எந்த இடத்தில் நடத்துவது, சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தான் ஒளிபரப்பு செய்யப்படும்.
அதே வேலையில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தினால் ஆஸ்திரேலிய போட்டிகளை யாரும் பார்க்க மாட்டார்கள். இதனால் தேதியை மாற்ற டிஸ்னி நிறுவனம் கோரிக்கை விடுக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 12 அல்லது ஒரு மணிக்கு முடிந்துவிடும்.
இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தை மதியம் தொடங்கி இரவு வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா ஆவார்.
- வங்கதேசத்துக்கு எதிராக ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்ததுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை ரபாடா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) உள்ளார். அவரை தொடர்ந்து 2 முதல் 6 இடங்கள் முறையே ஷான் பொல்லாக் (421), மக்காயா ந்தினி (390), ஆலன் டொனால்ட் (330), மோர்னே மோர்கல் (309), ககிசோ ரபாடா (300) ஆகியோர் உள்ளனர்.
மேலும் மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையும் ரபாடா படைத்துள்ளார். அந்த வகையில் முதல் நான்கு இடங்கள் முறையே ரபாடா (11817 பந்துகள்), பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் (12602),
தென் ஆப்பிரிக்கா வீரர்கள் டேல் ஸ்டெய்ன் (12605), ஆலன் டொனால்ட் (13672) ஆகியோர் உள்ளனர்.
- 2-வது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
- ரிஷப் பண்ட் ஆட இயலாமல் போனால் 2-வது டெஸ்டில் துருவ் ஜூரல் இடம் பெறுவார்.
பெங்களூரு:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் வருகிற 24-ந்தேதி புனேயில் தொடங் குகிறது.
இந்த டெஸ்டில் விக்கெட் கீப்பரான ரிஷப்பண்ட் ஆட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் 2-வது டெஸ்டில் இருந்து விலகுவார்.
முதல் டெஸ்ட் போட்டியின்போது அவ ருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கீப்பிங் செய்ய வில்லை. துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்தார். அதே நேரம் அவர் பேட்டிங் செய்து 99 ரன் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க காரணமாக இருந்தார்.
ரிஷப் பண்டின் காயம் குறித்து அணி நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா ஒப்பு கொண்டார். இதனால் அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ரிஷப்பண்ட் ஆட இயலாமல் போனால் 2-வது டெஸ்டில் துருவ் ஜூரல் இடம் பெறுவார்.
- சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனையாக சுசி பேட்ஸ் வரலாறு படைத்தார்.
- மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பை கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் (334 போட்டிகள்) விளையாடிய வீராங்கனையாக சுசி பேட்ஸ் வரலாறு படைத்தார். 37 வயதான இவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்துள்ளார். மிதாலியின் 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணிக்காக மொத்தம் 333 போட்டிகளில் விளையாடினார்.
அதிக போட்டிகள் விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில், பேட்ஸ் மற்றும் மிதாலிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் உள்ளனர்.
சுசி பேட்ஸ், ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து இதுவரை நியூசிலாந்து அணிக்காக மொத்தம் 163 ஒருநாள் மற்றும் 171 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர், மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 168 இன்னிங்ஸ்களில் மொத்தம் 4584 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 5178 ரன்கள் எடுத்து நியூசிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பேட்டிங் மற்றும் இல்லாமல் பந்து வீச்சிலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முறையே 78 மற்றும் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- 3-வது இடத்தில் பேட் செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- சில ஆண்டுகளாக நான் எப்படி பேட்டிங் செய்கிறேன் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியை தழுவியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மையில் ரஞ்சி கோப்பையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் என்னை ஒரு டாப் ஆர்டர் பேட்டராகக் கருதுகிறேன் என தமிழக வீரர் வாஷிங்டர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது நிர்வாகத்தின் முடிவு. இந்த வாய்ப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். நம்பர் 3 இல் பேட் செய்ய இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். மேலும் என்னால் பங்களிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் நிச்சயமாக என்னை ஒரு டாப் ஆர்டர் பேட்டராகக் கருதுகிறேன். 3-வது இடத்தில் பேட் செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது. நான் அணியில் எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும். இது ஒரு குழு விளையாட்டாகும்.
எனது திறமைகள் மற்றும் கடந்த சில ஆண்டுகளாக நான் எப்படி பேட்டிங் செய்கிறேன் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அணி என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது என்பதில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்.
இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.
- 36 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்டில் வெற்றி பெற்றது சிறப்பு வாய்ந்த உணர்வை தருகிறது.
- அணி வீரர்களுக்கு இது பெருமைமிக்க தருணம்.
பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே 36 ஆண்டுக்கு பிறகு வீழ்த்தி வரலாறு படைத்தது.
இது குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறுகையில்:-
36 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்டில் வெற்றி பெற்றது சிறப்பு வாய்ந்த உணர்வை தருகிறது. அணி வீரர்களுக்கு இது பெருமைமிக்க தருணம். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுவோம். அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் கடும் சவாலாக இருக்கும் என்பதை அறிவோம். இந்திய அணியில் ஆற்றல் மிக்க வீரர்கள் நிறைய பேர் உள்ளனர்.
முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் ஆட்டம் கொஞ்சம் சமநிலையில் இருந்தது. 8-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திராவும், டிம் சவுதியும் இணைந்து திரட்டிய 137 ரன்களே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத வில்லியம்சன் அடுத்த டெஸ்டுக்கு திரும்புவாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஓரிரு நாட்களில் அது தெளிவாகி விடும்' என்றார்.
- அணிக்கு தொடர்ந்து நம்பிக்கையான விஷயங்களை பகிர்வது முக்கியம்.
- தோற்றாலும் நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும்.
பெங்களூரு டெஸ்ட் தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த டெஸ்ட் குறித்து நான் அதிகமாக கவலைப்படபோவதில்லை. ஏனெனில் முதல் இன்னிங்சில் அந்த 3 மணி நேரம் (46 ரன்னில்சுருண்டது) மோசமாக விளையாடியதை வைத்து இந்திய அணி எப்படிப்பட்டது என மதிப்பிடுவது நியாயமாக இருக்காது.
அணிக்கு தொடர்ந்து நம்பிக்கையான விஷயங்களை பகிர்வது முக்கியம். தோற்றாலும் நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும். இந்த டெஸ்டில் செய்த சிறிய தவறின் விளைவால் (டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்தது) தோல்வியை தழுவினோம். ஆனால் அதற்காக எல்லாமே முடிந்து விட்டதாக அர்த்தம் அல்ல. இப்போது நாங்கள் பதற்றமின்றி, அமைதியான சூழலை உருவாக்கி, மனதளவில் வலுவாக இருக்க வேண்டியது முக்கியம்.
தொடரின் முதல் டெஸ்டில் தோல்வி காணும் இது போன்ற சூழலை ஏற்கனவே சந்தித்த அனுபவம் உண்டு. ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் டெஸ்டில் தோற்று அதன் பிறகு வரிசையாக 4 டெஸ்டுகளில் வெற்றி பெற்றோம். எனவே கிரிக்கெட்டில் இவ்வாறு நடப்பது சகஜம் தான். இன்னும் இரு டெஸ்ட் போட்டிகள் உள்ளது. அவற்றில் ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அடுத்த டெஸ்டில் சிறப்பாக ஆட முயற்சிப்போம். ஒரு போட்டியின் அடிப்படையில் எங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள மாட்டோம்.
முதல் இன்னிங்சில் நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. ஆனால் 2-வது இன்னிங்சில் சரிவில் இருந்து மீண்டு வந்தோம். முதல் இன்னிங்சில் 356 ரன்கள் பின்தங்கி இருக்கும்போது நீங்கள் எதை பற்றியும் அதிகமாக யோசித்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் 2-வது இன்னிங்சில் அந்த ஸ்கோருக்குள் எளிதாக ஆல்-அவுட் ஆகி, இன்னிங்ஸ் தோல்வியை கூட சந்திக்க நேரிடலாம்.
இப்படிப்பட்ட நிலைமையில் 2-வது இன்னிங்சில் எங்களது வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். சில பார்ட்னர்ஷிப்பை பார்க்கவே உற்சாகமாக இருந்தது. அதுவும் ரிஷப் பண்டும், சர்ப்ராஸ்கானும் விளையாடிய போது, ஒவ்வொருவரும் சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர். ரிஷப் பண்ட் எல்லா பந்துகளையும் அடிக்காமல், சில பந்துகளை விட்டு தடுப்பாட்டத்திலும் ஈடுபட்டார். இதே போல் சர்ப்ராஸ்கானுக்கு இது 4-வது டெஸ்ட் தான். ஆனால் அவரது பக்குவமான பேட்டிங்கை பார்க்க அருமையாக இருந்தது. சுப்மன் கில்லுக்கு பதிலாக இடம்பிடித்த அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சதம் அடித்து அசத்தினார்.
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் காயம் குறித்து கேட்கிறீர்கள். பந்து தாக்கிய அதே காலில் தான் அவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டு பெரிய அளவில் ஆபரேசன் செய்யப்பட்டிருந்தது. அதனால் நாங்கள் அவரது விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் தான் அவருக்கு விக்கெட் கீப்பிங்கில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
- இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
- இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் சிறிது முன்னேற்றம் கண்டது.
துபாய்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து நியூசிலாந்து 6வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.






