என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம் என அஸ்வின் தந்தை கூறினார்.
    • ஊடகம் முன்னிலையில் எப்படி பேசுவது என்று தந்தைக்கு தெரியாது என அஸ்வின் கூறினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது சக வீரர்கள் உள்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.

    திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம். அவமானப்பட்டதால் தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது ஓய்வை அறிவித்திருக்கலாம். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் தலையிட முடியாது என அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.

    இந்நிலையில் என் அப்பா கூறியதை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கவில்லை என அஸ்வின் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஊடகம் முன்னிலையில் எப்படி பேசுவது என்று அவருக்கு தெரியாது. டேய் டாடி என்னடா இதெல்லாம். எனது தந்தை கூறியதை பெரிதுபடுத்தாதீர்கள். எனது ஓய்வு குறித்து என் தந்தை கூறிய கருத்துக்களை ஏற்க வேண்டாம். அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


    • ஜிம்பாப்வேயில் இரண்டு பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் சத்ரன், ஏஎம் கசன்பர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 104 ரன்களும் மாலிக் 84 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் நியூமன் நியாம்ஹுரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இரண்டு பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் ஜிம்பாப்வே அணி 17.5 ஓவரில் 54 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் சத்ரன், ஏஎம் கசன்பர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

    • முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது.

    இதில் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவனில் கேசவ் மகராஜ்-க்கு பதிலாக பெஹ்லுவாயோ இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது மஹராஜ் இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

    மஹாராஜ் விலகியதை அடுத்து அவருக்கு மற்று வீரராக ஜோர்ன் ஃபார்டுயின் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மேற்கொண்டு எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேஷவ் மஹாராஜ் இடம்பிடித்த நிலையில் தற்போது அவரால் டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

    • அப்துல் மாலிக் 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • மற்றொரு தொடக்க வீரரான செடிகுல்லா அடல் சதம் விளாசி அசத்தினார்.

    ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக செடிகுல்லா அடல்- அப்துல் மாலிக் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தது. அப்துல் மாலிக் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான செடிகுல்லா அடல் சதம் விளாசி அசத்தினார்.



    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் நியூமன் நியாம்ஹுரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • 2024 - 2027-ம் ஆண்டு வரை இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகள், பொதுவான மைதானத்தில் நடைபெறும்.
    • 2028-ம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

    பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ தெரிவித்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டியை மட்டும் துபாயில் நடத்த ஐசிசி முயற்சி மேற்கொண்டது.

    ஐசிசி-யின் ஹைபிரிட் மாடல் தொடரை பாகிஸ்தான் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 2026 வரையிலான ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.

    மேலும் 2024 - 2027-ம் ஆண்டு வரை இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகள், 2 அணிகளுக்கும் பொதுவான மைதானத்தில் நடைபெறும்.

    2025-ம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. அதனை தொடர்ந்து 2026-ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இதற்கான போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

    2028-ம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான அட்டவணை விரைவில் உறுதி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

    • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர் விராட் கோலி மெல்போர்ன் சென்றார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் அடுத்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர் விராட் கோலி மெல்போர்ன் சென்றார். அந்த விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய பெண் செய்தியாளர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

    விமான நிலையத்தில் தன்னுடன் தனது குழந்தைகளையும் வீடியோ எடுத்ததாக நினைத்து கோலி கோபமடைந்தார். இதையடுத்து கோலி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். "என் குழந்தைகளுடன் எனக்கு கொஞ்சம் பிரைவசி தேவை, நீங்கள் என்னிடம் கேட்காமல் படம் எடுக்க கூடாது" என்று அவர் கூறினார்.

    இதனையடுத்து உங்களது குடுப்பத்தை படம் எடுக்கவில்லை என்று கோலிக்கு தெளிவுபடுத்தினார். இதையடுத்து கோலி கேமராமேனுடன் கைகுலுக்கி வெளியேறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • இந்திய அணியில் விளையாடிய போது அஸ்வின் அவமானப்பட்டு இருக்கலாம்.
    • அவமானப்பட்டதால் தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது ஓய்வை அறிவித்திருக்கலாம்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது.

    இந்த போட்டி முடிந்த சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது சக வீரர்கள் உள்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அஸ்வின் ஓய்வு குறித்து முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டி தங்களது கருத்து பகிர்ந்தனர்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.

    இந்திய அணியில் விளையாடிய போது அஸ்வின் அவமானப்பட்டு இருக்கலாம். திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம். அவமானப்பட்டதால் தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது ஓய்வை அறிவித்திருக்கலாம். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் தலையிட முடியாது.

    என அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் கூறினார்.

    • ஆடம் ஜாம்பா, ஹசரங்கா,ஆதில் ரஷித் ஆகியோர பின்னுக்கு இவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
    • டாப் 10-ல் 2 இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

    டி20 தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். 3 இடங்கள் முன்னேறி அக்கேல் ஹோசின் முதல் இடத்தை பிடித்த்ள்ளார்.

    அந்த பட்டியலில் ஆடம் ஜாம்பா, ஹசரங்கா,ஆதில் ரஷித் ஆகியோர பின்னுக்கு இவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    டாப் 10-ல் 2 இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அந்த வகையில் 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை ரவி பிஸ்னோய் பிடித்துள்ளார். மற்றொரு பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 1 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும்.

    சென்னை:

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின்னர் மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனிடையே எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என அஸ்வினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- சென்னை முதல் உலக அரங்கு வரை, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

    ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு விக்கெட்டிலும், ஒவ்வொரு ஸ்பெல்லிலும், ஒவ்வொரு போட்டியிலும், நீங்கள் விளையாட்டை உயர்த்தி, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்தீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! என கூறியுள்ளார். 



    • டோனியின் பாணியில் அஸ்வின் திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார்.
    • அஸ்வின் ஒரு மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார்.

    பிரிஸ்பேன்:

    டோனியின் பாணியில் அஸ்வின் திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார். அவரின் இந்த முடிவை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஒப்புக்கொள்ளாமல் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அஸ்வின் கூறி இருக்கலாம். ஆனால் பாதியிலே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    2014-15 ஆஸ்திரேலிய தொடரில் இதேபோலதான் டோனியும் பாதியில் செல்வதாக அறிவித்தார்.

    அதே பாணியை அஸ்வினும் தற்போது செய்து உள்ளார். இது அணியை கடுமையாக பாதிக்கும். இப்படி வீரர்கள் பாதியில் ஓய்வு பெறுவதன் மூலம் அணியில் ஒரு முக்கிய வீரர் குறைவார்கள்.

    சில காரணங்களுக்காக தான் தேர்வு குழுவினர் பல வீரர்களை வெளிநாட்டு தொடருக்கு அனுப்புகிறார்கள். ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் கூடுதல் வீரர்களை 11 பேர் கொண்ட அணிக்கு கொண்டு வரலாம்.


    சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணி அங்கு 2 சுழற்பந்து வீரர்களுடன் விளையாடலாம். அஸ்வின் அங்கு தேவைப்பட்டு இருக்கலாம். மெல்போர்ன் ஆடுகளம் குறித்து எனக்கு தெரியவில்லை.

    ஆனால் இதுபோன்ற முக்கிய முடிவுகளை தொடரின் இறுதியில் தான் எடுக்க வேண்டும். நடுவில் எடுப்பது சரியானதல்ல. வாஷிங்டன் சுந்தருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்திருக்கலாம். எதுவானாலும் அஸ்வின் ஒரு மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய தொடரின் போது கும்ப்ளே 2008-ம் ஆண்டும், டோனி 2014-ம் ஆண்டும் பாதியில் ஓய்வு முடிவை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார்.
    • ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி 2-வது நாள் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. மற்ற 4 நாட்களுமே மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்டது. 5-வது நாளான நேற்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் சக வீரர்களுக்கும், பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அஸ்வின் குறித்து முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டி தங்களது கருத்து பகிர்ந்தனர்.

    இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் திரண்டு மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.


    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின் கூறியதாவது:-

    கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும். இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பது கடினம் தான் என்றார். 



    • சையது மோடி பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து கோப்பை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 12வது இடத்தில் தொடர்கிறார்.

    புதுடெல்லி:

    சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியானது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்திற்கு முன்னேறினார். சையது மோடி பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து கோப்பை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 12வது இடத்தில் தொடர்கிறார். பிரனாய் (26), பிரியான்ஷு (34), கிரண் ஜார்ஜ் (38) பின்தங்கினர்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீஷா-காயத்ரி ஜோடி, 2 இடம் முன்னேறி முதல் முறையாக 11-வது இடம் பிடித்து அசத்தியது.

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் அதிக தொடரில் பங்கேற்காத இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    ×