என் மலர்
நீங்கள் தேடியது "செடிகுல்லா அடல்"
- அப்துல் மாலிக் 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- மற்றொரு தொடக்க வீரரான செடிகுல்லா அடல் சதம் விளாசி அசத்தினார்.
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக செடிகுல்லா அடல்- அப்துல் மாலிக் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தது. அப்துல் மாலிக் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான செடிகுல்லா அடல் சதம் விளாசி அசத்தினார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் நியூமன் நியாம்ஹுரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






