என் மலர்
கிரிக்கெட் (Cricket)

என்னிடம் கேட்காமல்.. ஆஸ்திரேலிய பெண் செய்தியாளரிடம் கோபமடைந்த கோலி- வைரலாகும் வீடியோ
- ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
- இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர் விராட் கோலி மெல்போர்ன் சென்றார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் அடுத்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர் விராட் கோலி மெல்போர்ன் சென்றார். அந்த விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய பெண் செய்தியாளர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் தன்னுடன் தனது குழந்தைகளையும் வீடியோ எடுத்ததாக நினைத்து கோலி கோபமடைந்தார். இதையடுத்து கோலி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். "என் குழந்தைகளுடன் எனக்கு கொஞ்சம் பிரைவசி தேவை, நீங்கள் என்னிடம் கேட்காமல் படம் எடுக்க கூடாது" என்று அவர் கூறினார்.
இதனையடுத்து உங்களது குடுப்பத்தை படம் எடுக்கவில்லை என்று கோலிக்கு தெளிவுபடுத்தினார். இதையடுத்து கோலி கேமராமேனுடன் கைகுலுக்கி வெளியேறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






