என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாதியிலேயே விலகியது அணிக்கு பாதிப்பு: அஸ்வின் ஓய்வு முடிவுக்கு கவாஸ்கர் விமர்சனம்
    X

    பாதியிலேயே விலகியது அணிக்கு பாதிப்பு: அஸ்வின் ஓய்வு முடிவுக்கு கவாஸ்கர் விமர்சனம்

    • டோனியின் பாணியில் அஸ்வின் திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார்.
    • அஸ்வின் ஒரு மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார்.

    பிரிஸ்பேன்:

    டோனியின் பாணியில் அஸ்வின் திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார். அவரின் இந்த முடிவை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஒப்புக்கொள்ளாமல் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அஸ்வின் கூறி இருக்கலாம். ஆனால் பாதியிலே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    2014-15 ஆஸ்திரேலிய தொடரில் இதேபோலதான் டோனியும் பாதியில் செல்வதாக அறிவித்தார்.

    அதே பாணியை அஸ்வினும் தற்போது செய்து உள்ளார். இது அணியை கடுமையாக பாதிக்கும். இப்படி வீரர்கள் பாதியில் ஓய்வு பெறுவதன் மூலம் அணியில் ஒரு முக்கிய வீரர் குறைவார்கள்.

    சில காரணங்களுக்காக தான் தேர்வு குழுவினர் பல வீரர்களை வெளிநாட்டு தொடருக்கு அனுப்புகிறார்கள். ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் கூடுதல் வீரர்களை 11 பேர் கொண்ட அணிக்கு கொண்டு வரலாம்.


    சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணி அங்கு 2 சுழற்பந்து வீரர்களுடன் விளையாடலாம். அஸ்வின் அங்கு தேவைப்பட்டு இருக்கலாம். மெல்போர்ன் ஆடுகளம் குறித்து எனக்கு தெரியவில்லை.

    ஆனால் இதுபோன்ற முக்கிய முடிவுகளை தொடரின் இறுதியில் தான் எடுக்க வேண்டும். நடுவில் எடுப்பது சரியானதல்ல. வாஷிங்டன் சுந்தருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்திருக்கலாம். எதுவானாலும் அஸ்வின் ஒரு மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய தொடரின் போது கும்ப்ளே 2008-ம் ஆண்டும், டோனி 2014-ம் ஆண்டும் பாதியில் ஓய்வு முடிவை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×