என் மலர்
கிரிக்கெட் (Cricket)

54 ரன்னில் சுருண்ட ஜிம்பாப்வே.. 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
- ஜிம்பாப்வேயில் இரண்டு பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் சத்ரன், ஏஎம் கசன்பர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 104 ரன்களும் மாலிக் 84 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் நியூமன் நியாம்ஹுரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இரண்டு பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஜிம்பாப்வே அணி 17.5 ஓவரில் 54 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் சத்ரன், ஏஎம் கசன்பர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 21-ந் தேதி நடக்கிறது.






